பிப்ரவரி 23,
2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 7ம்
ஞாயிறு
மத்தேயு
நற்செய்தி
Leviticus 19:1-2, 17-18
Psalm 103:1-4,8,10,12-13
1 Corinthians 3:16-23
Matthew 5:38-48
Psalm 103:1-4,8,10,12-13
1 Corinthians 3:16-23
Matthew 5:38-48
38 ' ″ கண்ணுக்குக் கண் ″ , ″ பல்லுக்குப் பல் ″ என்று கூறப்பட்டிருப்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர்
எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை
செல்லுங்கள்.42உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள். '
(Thanks to
www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியை புரிந்து கொள்வது, இரக்கம் தான் முக்கிய காரணியாக
இருக்கும். அன்பு தான்
மற்றவர்களின் இருதயத்திற்குள் நுழைய முதல் படியாக இருக்கும் என்பதை நினைத்து
பாருங்கள். அவர்கள் அதனை மூடி விட்டால், இரக்கத்தினால், பின் கதவு வழியாக
நுழையலாம்.
அந்த காலங்களில், ஒருவன் மற்றொருவனின், கண்ணை காயப்படுத்தி விட்டால், காயம் பட்டவன், அவனை பிடித்து, அவன் பரம்பரையே தண்டனை கொடுப்பான். அதனால், தான், இயேசு இந்த சட்டத்தை எல்லாரையும் ஒன்றிணைக்க அன்பினால், ஆன சட்டத்தை கடவுள் கொடுக்கிறார். உங்கள் கண்ணை யாராவது காயப்படுத்திவிட்டால், அதையே நாம் அவருக்கும் செய்ய முடியும். இது அன்பில்லாத நிலையாக இருந்தாலும், நியாயமானது கூட. (உலகளவில்)
இயேசு இந்த
இடத்தில் வந்த பொழுது, அவர் நம் எல்லோரின் தரத்தையும் உயர்த்தினார்: உங்களை
யாராவது, காயப்படுத்தினால், அவர்களை அன்பு செய் என்று சொல்கிறார்.
மற்றவர்கள்,
நமக்கு எதிராக பாவம் செய்யும்பொழுது, கடவுளின் அன்பை பெற அவர்களின் இருதயத்தை மூடி
விட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், நாம் அவர்களை தொடர்ந்து
அன்பு செய்தால், நாம் கடவுளை அவர்களுக்கு பின் கதவு வழியாக கொடுக்கிறோம்.
அதற்காக, அந்த
பாவ வழியிலேயே நாம் தொடர்ந்து இருக்க வேண்டும், என்று அவசியமில்லை. ஆனால்,
தொடர்ந்து, நாம் அவர்களை அன்பு செய்து கொண்டிருந்தால், -- அதிக தூரத்தில்
இருந்தாலும் – நாம் கடவுளின் குணமளிக்கும் அன்பினை நாம் கொண்டு வருகிறோம்.
அநீதியாக யாராவது, உங்கள் பொருளை எடுத்து கொண்டாலோ, அல்லது, உங்களிடமிருந்து
அதிகமான பொருட்களை கேட்டால், அவர்களுடைய அதீத ஆசையை நிறுத்த முடியாவிட்டாலும்,
அவர்கள் பாவம் செய்வதை தடுக்க முடியும். அவர்களுக்கு என்ன தேவையோ அதனை கொடுத்து
விடு. தாராளமான அன்பினால், இன்னும் அதிகம் கொடு, இது பொருத்தமாக கூட இருக்காது,
ஆனால், இதை தான் இயேசு சரியாக சொல்கிறார். தெய்வத்திற்கு அது தான் சரி.
ஒரு பெண் அவள்
வீட்டு வேலைகளை உங்களை செய்ய சொன்னால், ஏனெனில், அவள் சோம்பேறி, அவளின் பாவத்தை,
தவிர்க்க, அவள் சொல்வதை கேட்டு, அதனை செய். இன்னும் என்ன செய்ய வேண்டும் என கேள்.
இயேசுவின்
திட்டங்கள், நம் மூலம் நிறைவேறுகிறது, கடவுளின் அன்பு எல்லாவற்றையும் விட
மென்மையானது. அன்பு தான் சாத்தானை வெற்றி கொள்ளும்.
இப்படி தான்
மிக சரியாக நம்மால் இருக்க முடியும். இது தான் பிழையற்ற வாழ்வு. பைபிளில், பிழையற்ற , தலை சிறந்த வாழ்வு என்பது முழுமையான,
எல்லையில்லாத, இரக்கத்தின் அன்பு ஆகும்.
© 2014 by Terry A. Modica
No comments:
Post a Comment