பிப்ரவரி 16, 2௦14 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 6ம் ஞாயிறு
Sirach 15:15-20
Psalm 119:1-2,4-5,17-18,33-34
1 Cor 2:6-10
Matthew 5:17-37
Psalm 119:1-2,4-5,17-18,33-34
1 Cor 2:6-10
Matthew 5:17-37
மத்தேயு நற்செய்தி
திருச்சட்டம் நிறைவேறுதல்
17 ' திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க
வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை
அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.18 ' விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன்
திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.19எனவே, இக்கட்டளைகளில்
மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில்
மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ
விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.20 மறைநூல் அறிஞர், பரிசேயர்
ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள்
விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.
சினங்கொள்ளுதல்
21 ' கொலை செய்யாதே; கொலை
செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் ' என்று
முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ' தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ' முட்டாளே ' என்பவர்
தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ' அறிவிலியே ' என்பவர்
எரிநரகத்துக்கு ஆளாவார்.23 ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப்
பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள்
மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,24 அங்கேயே
பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம்
நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.25உங்கள் எதிரி
உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக
உடன்பாடு செய்து கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை
ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள்
சிறையில் அடைக்கப்படுவீர்கள்.26கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல்
அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.
விபசாரம்
(மத் 19:9; மாற் 10:11, 12; லூக் 16:18)
(மத் 19:9; மாற் 10:11, 12; லூக் 16:18)
27 ' விபசாரம் செய்யாதே ' எனக்
கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.28 ஆனால், நான்
உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம்
உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.29 உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்
செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில்
எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.30 உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச்
செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல்
முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே
நல்லது.31 ' தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும்
மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும் ' எனக்
கூறப்பட்டிருக்கிறது.32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம்
மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக்
கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர்.
விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.
ஆணையிடுதல்
33 '
மேலும், ″ பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு
நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர் ″ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்
பட்டிருக்கிறீர்கள்.34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின்
மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை.35 மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை.
எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம்.36 உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட
வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும்
வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.37 ஆகவே நீங்கள் பேசும்போது ' ஆம் ' என்றால் ' ஆம் ' எனவும் ' இல்லை ' என்றால் ' இல்லை ' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும்
தீயோனிடத்திலிருந்து வருகிறது. '
(thanks to www.arulvakku.com)
இயேசுவின் காலத்தில்
இருந்த யூத மத குருக்கள், கடவுளின் கட்டளையை அப்படியே பின் பற்ற வேண்டும் என்ற
வழக்கத்தில் இருந்தனர். எனினும் , இயேசு, அந்த சட்டங்களின் ஆழ்ந்த அர்த்தங்களை
எடுத்து கூறினார். இந்த சட்டங்களின் முக்கிய நோக்கத்தை வைத்தே அதன் விளக்கத்தை
கூறினார் : அன்பு
இன்றைய நற்செய்தியில், இயேசு ஒவ்வொரு சட்டங்களையும் நாம் சரியாக கடைபிடிப்பதில்லை ஏனெனில், நமது அன்பினால் அதனை கடைபிடிப்பதில்லை என்று நமக்கு விளக்குகிறார்.
இயேசு
சட்டங்களின் உண்மையான அர்த்தத்தோடு அதனை கடைபிடித்தார். அதனால் தான், நம்
கீழ்படியாமைக்காக , நமக்காக மரணித்து , அவரது எல்லையில்லா அன்பை நமக்கு கொடுத்தார்
.
கிறிஸ்துவை
பின்பற்றுபவர்களான நாமும், தாராளாமாக அன்பில் நிலைத்திருக்க வேண்டும். எல்லா
கட்டளைகளையும் கடைப்பிடித்து, - உண்மையான கீழ்படிதல் உடன் – முழு இருதயத்தோடு,
கடவுளின் அன்பை வேண்டி, எல்லா நேரங்களிலும், நம் மேல் நாம் அன்பு செலுத்துவது போல,
மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்.
வார்த்தைகளின்
அர்த்தத்தை எப்படி அன்பின் கட்டளையாக மாற்ற முடியும் என்பதை இயேசு விளக்கி
சொல்கிறார். ஒவ்வொரு மாதிரியிலும், இயேசு, மிகுந்த அன்பின் ஊடாக அந்த பிரச்சினைகளை
கையாள வேண்டும் என்று சொல்கிறார். அந்த பிரச்சினைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும்,
அன்பினாலேயே அதனை கையாளவேண்டும் என்று நமக்கு விளக்குகிறார்
இயேசுவின் முதல் தலைப்பு கோபம்: கோபம் கொள்கிறவர் தன்டனைக்குள்ளானவர் என்று கூறுகிறார். அதற்கு பரிகாரத்தையும் கூறுகிறார். யாரோடு பகை உண்டோ அவர்களிடத்தில் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இதனை, கடவுளை ஆராதனை செய்வதை விட முக்கியமானது என்பதை வலியுறுத்தி கூறுகிறார். நமது கோபம் , அன்பினால் மாற்றப்பட்டவுடன் கடவுளை ஆராதிப்பது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள்? கடவுளே அன்பானவர்?
அடுத்த விசயமாக,
அதிக ஆசை கொள்தளையும், இச்சையையும் பற்றி பேசுகிறார். இது அன்பிற்கு எதிரானது.
ஏனெனில், மற்றவர்ல ஒரு பொருளாகவே கையாள படுகிறார்கள். சரியான திருமணத்திலிருந்து
விலகுவது என்பது , கிறிஸ்து அன்பு செய்வது போல நம்மால் அன்பு செய்ய இயலவில்லை
என்பதை காட்டுகிறது. கிறிஸ்து முழுமையான அன்பை கொடுத்து, கஷ்டமான நேரங்களில்,
தியாகத்தையும் அன்பையும் செய்தல் வேண்டும் என்று நமக்கு படிப்பினை கொடுக்கிறார்
மறு மனம் என்பது, முன்றைய திருமணத்தில் கணவனையோ மனைவியையோ நாம் அன்பு செய்யாமல்
இருக்கிறோம் என்பதை குறிக்கிறது.
இந்த போதனைகளை
வாழ்க்கையின் மற்ற பாகங்களுக்கும் இயேசு கொண்டு செல்கிறார். ஒரு சத்தியத்தை உடைப்பது
என்பது அன்பிற்கு எதிரானது. பொய் சொல்வதும், பொறுப்புகளை தட்டி கழிப்பதும்
அன்பிற்கு எதிரானது. இந்த நற்செய்தியோடு இணைந்த எல்லா மலை பிரசங்கங்களும் , எப்படி
அன்பு செய்வது என்று விளக்கப்பட்டுள்ளது.
© 2014 by Terry A. Modica
No comments:
Post a Comment