Friday, May 30, 2014


மே 5, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 3ம் ஞாயிறு
Acts 2:14, 22-33
Psalm 16:1-2, 5, 7-11
1 Peter 1:17-21
Luke 24:13-35

லூக்கா நற்செய்தி
எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்
(மாற் 16:12 - 13)
13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. http://www.arulvakku.com/images/footnote.jpg14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள்.15 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.17 அவர் அவர்களை நோக்கி, ' வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? 'என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.18 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ' எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ' என்றார்.19 அதற்கு அவர் அவர்களிடம், ' என்ன நிகழ்ந்தது? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' நாசரேத்து இயேசுவைப் பற்றியே தான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்.20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்;23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ' என்றார்கள்.25 இயேசு அவர்களை நோக்கி, ' அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே!26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! என்றார்.27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார்.29 அவர்கள் அவரிடம், ' எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று ' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ' வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ' என்று பேசிக் கொண்டார்கள்.33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.34 அங்கிருந்தவர்கள், ' ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ' என்று சொன்னார்கள்.35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில் வரும் இரண்டும் சீடர்களும், இயேசு அப்பத்தை பிட்டு இறைவார்த்தையை விளக்கி கூறும் வரை இயேசுவை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இதில் இரண்டு செயல்வழிகள் கடைபிடிக்கபட்டுள்ளன.

முதலில், இயேசு நற்செய்தியை போதிக்கும்போழுது, அவர்களின் இருதயம் மட்டும் அவரை புரிந்து கொண்டன. (நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?) அவர்கள் கண்களோ இயேசு உண்மையான உருவத்தை அவர் ரொட்டி துண்டுகளை பங்கிடும் வரை, அவரை கண்டுபிடிக்கவில்ல.  

நாம் இன்று திருப்பலியை கொண்டாடும்பொழுது, நாமும் இயேசுவோடு இதே போல பயணிக்கிறோம். முதலில் நாம் நற்செய்தி வாசித்து அதனை கேட்கிறோம். அதன் பின்பு, பிரசங்கம் கேட்கிறோம். அப்பொழுது நமது உள்ளம் திறக்கிறது.
மிகவும் திறமை வாய்ந்த ஒருவர் வாசகங்களை வாசிக்கிம்போழுது, அதில் உள்ள அர்த்தத்தோடு, ஒழுங்கான உர்ச்சரிப்போடு வாசிக்கும்பொழுது, நமது உள்ளம் கடவுளை அவரின் வார்த்தைகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. திறமை வாய்ந்த குருவானவர், அவரின் பிரசங்கத்தின் மூலம்.  இயேசுவே நமக்கு போதனை செய்வது போல நமது உள்ளத்தில் நெருப்பு எரிய செய்வார், நற்செய்தியின் அர்த்தங்களை நமக்கு விளக்கி கூறுவார். மற்றும், வாசகம் வாசிப்பவரும், குருவானவரும், குறைவாக வாசித்தாலும், சரியாக விளக்கி சொல்லா விட்டாலும், நாம் நமது உள்ளத்தை திறந்து இயேசு நம்மிடம் நேரடியாக பேசுவதை கேட்கலாம்.

அதன் பிறகு, நாம் நற்கருணை , காணிக்கை ஜெப வழிபாட்டிற்கு செல்கிறோம். அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் அர்ச்சித்து, புனிதப்படுத்து ம்பொழுது, இயேசு அதனை , குருவானவரின் கைகள் மற்றும் குரல் மூலம் செய்கிறார், எம்மாவுசில் இருந்த சீடர்களுக்கு என்ன செய்தாரோ அதனை நமக்கும் இயேசு செய்கிறார்

நாம் நமது உள்ளத்தை இயேசுவிற்காக திறந்து வைத்தால், இன்னும், அவரை அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருந்தால், சாதாராண ரொட்டி துண்டாக இல்லாமல் , இயேசுவை நாம் பார்ப்போம். நமது உள்ளத்தில், அறிவிலும், இயேசுவை நாம் புரிந்து கொள்வோம். உயிர்த்தெழுந்து இயேசு , உண்மையாகவே நம்மிடையே இருப்பதை உணர்வோம். திவ்ய நற்கருணையில் இயேசு இருப்பதை நாம் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.
© 2014 by Terry A. Modica Facebook


ஜுன் 1, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுன் 1, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 7ம்  ஞாயிறு
Acts 1:12-14
Psalm 27:1, 4, 7-8 (with 13)
1 Peter 4:13-16
John 17:1-11a

யோவான் நற்செய்தி
இயேசுவின் வேண்டல்
இவ்வாறு பேசியபின் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ' தந்தையே, நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப் படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்.ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர் மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர்.3உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்.தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள்.நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும்.ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள்.அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள்.10 ' என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய். நான் மாட்சி பெற்றிருக்கிறேன்.11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய திருப்பலியின் எல்லா நற்செய்தி வாசகங்களும், நமக்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது, அதனை புரிந்து கொள்ளவும், பதிலுரை பாடலில் “வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.” என்று திருப்பாடல்களில் நாம் இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சொல்கிறோம்.
நமக்கு பிடித்த நற்செய்தி வசனங்களை நமது மேசையிலோ,கன்னாடியிலோ, அல்லது நாம் அதிகம் பார்க்கும் இடத்திலோ வைத்து நாம் அடிக்கடி பார்த்து கொள்கிறோம். நமக்கு இருளான நேரங்களில், அதிக கவலை உள்ள நாட்களில், இந்த வசனங்களை பார்த்து, நாம் நாம் நம்மையே உற்சாகப்படுத்தி கொள்கிறோம்.
இந்த வசனம் என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் வசனமாக பல வருடங்களுக்கு முன்பு இருந்தது. எங்கள் குடும்பத்தில், சில உறவுகள் பிரச்சினையில், நான் இந்த வசனத்தி அதிகம் பார்த்து கொண்டிருந்தேன். கடவுள் திரும்ப திரும்ப எனக்கு உறுதி அளித்தார், அவருடைய வாக்குறுதி என் நம்பிக்கையை உறுதி படுத்தியது. கடவுள் கொடுக்கும் நலன்களை காண நான் பல வேதனை காலங்களை கடக்க வேண்டியிருந்தது. நான் வேண்டிகொண்ட சில காரியங்கள் நன்றாக நடந்தாலும், இன்னும் சில இன்னும் நடக்கவில்லை. ஆனால் இந்த வசனம் தான், எண்ணை அமைதியா இறைவனை நிலையாக இருக்க வைத்தது. (at gnm.org/RandomQuotes/inspire102.htm)

நற்செய்தியில், இயேசு, கடவுளின் நல்ல செயல்கள், இவ்வுலகில் இருப்பதை அங்கீகரிப்பதை நாம் காண்கிறோம். கடவுளை பின்பற்றுபவர்களை இயேசுவிடம் ஒப்படைத்ததை , அவர்களை இயேசு அங்கீகருத்ததை நாம் நற்செய்தியில் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் கடவுளிடமும், இயேசுவிடமும் நம்பிக்கை வைத்திருந்தனர். நாம் யாரிடம் அதிக அக்கறை கொண்டுள்ளோமோ, அவர்கள் நம்மை ஏற்று கொண்டால், நமக்கு எவ்வளவு சந்தோசம் ஏற்படும். அதன் மூலம் நாம் நம் விசுவாசத்தை அவர்களிடம் நாம் தருகிறோம்.
அவர்கள் விசுவாசத்தை விட்டு வெளியே செல்லும்பொழுது, நாம் இயேசுவிடம் செல்ல வேண்டும். அவர்கள் நிராகரித்த அன்பை நாம் இயேசுவிடம் செலுத்த வேண்டும். நாம் அவரின் வார்த்தைகளை ஏற்றுகொள்கிறோம், கடவுளிடமிருந்த வந்த நற்செய்தி வார்த்தைகளை, அதிலிருந்து நாம் புரிந்து கொண்ட விசயங்களை நாம் ஏற்றுகொள்கிறோம். இயேசு உங்களுக்காக ஜெபிக்கிறார். அதன் தொடர்ச்சியாக, இப்பூவுலகில் நீங்கள், கடவுளின் நல்ல செயல்களை காண்பீர்கள்.

© 2014 by Terry A. Modica 

Saturday, May 24, 2014

மே 25, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 25, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 8:5-8, 14-17
Psalm 66:1-7, 16, 20
1 Peter 3:15-18
John 14:15-21

யோவான் நற்செய்தி
15 நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.16  உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.17 அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்.19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்.20 நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு , பரிசுத்த ஆவியை “துனையாளார்” என கூறுகிறார். சில அறிஞர்கள், இந்த வார்த்தையை, “ஆலோசனையாளர்கள்” என்று மொழி பெயர்ப்பு செய்து சொல்கிறார்கள். கிரேக்க மொழியில், இதற்கு , “தன்னோடு கூட இருப்பவர்கள்” என்று அர்த்தம். “parakoleo” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து, “அசிக்கபட்டவர் “ என்ற அர்த்தத்தினால் உள்ள “paraclete” என்ற வார்த்தையை பரிசுத்த ஆவிக்கு கொடுத்து நாம் அவரை அழைக்கிறோம். இதற்கு “வழக்கறிஞர்”, “சட்ட ஆலோசகர்” என்ற அர்த்தம் ஆகும். நம்மை சிலர் தவறாக என்னும்பொழுது, தவறாக கண்டிக்கப்படும்போழுதும், பரிசுத்த ஆவிதான் நமக்கு சட்ட ஆலோசகர் என இயேசு நமக்கு சொல்கிறார்.

அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவி” என்று இயேசு சொல்வதை கவனத்தில் கொள்வோம்.  மற்றவர்கள் நம்மை எப்படி பேசினாலும், நம்மை பற்றி எப்படி தவறாக எண்ணம் கொண்டாலும், கடவுளுக்கு உண்மை தெரியும். பரிசுத்த ஆவியின் உண்மை,  நம்மை தவறான சூழ் நிலையிலிருந்து , நம்மை வெளியே கொண்டு வரும். கடவுள் நம் மேல் கொண்ட எண்ணம் தன நமக்கு முக்கியம். அவர் நம் மேல் கொண்டுள்ள எண்ணம், நாம் நம் மேல் உள்ள மதிப்பை விட மேலானது.

நாம் நம்மையே மிகவும் மோசமாக சித்தரித்து கொள்கிறோம். அதனால் தான், நாம் மிகவும் அதிகம் கவலை கொள்கிறோம். அதனால், மற்றவர்கள் இன்னும் குறைவாக பேசுவார்கள் என்ற கவலையுடன் இருக்கிறோம். நாம் நியாயமாக கவனத்துடன் நம் எண்ணங்களை சோதித்து, கடவுளோடு மீண்டும் இணைய விருப்பத்துடன் செல்லும்பொழுது, பாவசங்கிர்த்தனத்திலும் , திருப்பலியிலும், கலந்து, நம் பாவங்களை கழுவ விருப்பத்துடன் இருக்கும்பொழுது , இயேசு நம்மிடம் , “நான் உன்னை கண்டிக்கவில்லை, இனிமேல் பாவம் செய்யாதே “  என்று கூறுகிறார் .

உங்களை தவறாக யாராவது கூறினால், உடனே இயேசு அங்கே வந்து உங்களை காப்பாற்ற வேண்டும் நீங்கள் நினைப்பதுண்டா? அவர் உங்களை தனியாக விட்டு விடவில்லை என இயேசு கூறுகிறார் . – நம்மை பாதுகாக்க பரிசுத்த ஆவி எப்பொழுது இருக்கிறார் , நம்மை பற்றிய உண்மைகளை நமக்கு எடுத்துரைத்து நம்மை காக்கிறார்.

நாம் பாவம் செய்யும்பொழுதும், உண்மையின் ஆவி நமது தந்தை கடவுளிடம், “பாருங்கள் இந்த குழ்ந்தை உண்மையிலே பரிசுத்த மாக இருக்க விரும்புகிறது,” என்று கூறி நம்மை காக்கிறது. மேலும், நம்மிடம், “பாவத்து துறந்து எப்படி பரிசுத்தமாக வாழ்வது என்று நான் கற்று கொடுக்கிறேன் “ என்று கூறுகின்றார். மற்றவர்களிடம், “நீங்கள் எண்ணை அன்பு செய்தால், என் நண்பர் இவரையும் அன்பு செய்யுங்கள்” என்று கூறுகின்றார்.
© 2014 by Terry A. Modica


Saturday, May 17, 2014

மே 18, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மே 18, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Acts 6:1-7
Psalm 33:1-2, 4-5, 18-19 (with 22)
1 Peter 2:4-9
John 14:1-12
யோவான் நற்செய்தி

மீண்டும் இயேசு, ' நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ' உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் ' என்று சொல்லியிருப்பேனா?3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும் என்றார்.தோமா அவரிடம், ' ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்? ' என்றார்.இயேசு அவரிடம், 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.7 ' நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள் என்றார்.அப்போது பிலிப்பு, அவரிடம், ' ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும் ' என்றார்.இயேசு அவரிடம் கூறியது: ' பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ' தந்தையை எங்களுக்குக் காட்டும் ' என்று நீ எப்படிக் கேட்கலாம்?10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, “நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்.“ என்று முடிகிறது.  இதன் மூலம் இயேசு என்ன சொல்ல வருகிறார்? நாம் எப்படி அவரை போலவும், அவர் செய்த புதுமைகளை விடவும், நம்மால் செய்துவிட முடியும் ?

இதற்கு பதில், இந்த அதிகாரம் முழுதும் உள்ளது. இயேசு தந்தையுடன் உள்ள அவரது நெருங்கிய உறவை பற்றி கூறுகிறார். இயேசு இன்னும் மனிதனாகவும், தெய்வாமாகவும் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனை நினைவில் வைத்து கொண்டு இந்த நற்செய்தி வசனங்களை நாம் வாசிக்க வேண்டும். சூசையின் மகனாக இருந்து கொண்டு, கடவுள் தந்தைக்கு அவர் எப்படி சேவை செய்ய முடியும்? தந்தை கடவுளின் மகனாக இருந்து கொண்டு, இயேசு எப்படி இறைசேவை செய்ய முடியும் ?

“நான் செய்யும் செயல்கள்”  என்று இயேசு குறிப்பிடுவது, அவர் மனிதனாக செய்யும் செயல்கள்: அனைவரையும் அன்பு செய்வது, போதனை செய்தல், உண்மையாக அக்கறையுடன் கேட்கும் இதயத்துடன் பேசுவது, மற்றவர்களோடு அமர்ந்து உணவு உண்பது, அவரது வேளையில் அதிகம் உழைத்தது, அவரது இரைசேவையை அக்கறையுடன் செய்தல் போன்றவை.  “12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்;” – பரிசுத்த மனிதனாக இருப்பதற்கு அவர் ஓர் எடுத்து காட்டாக இருக்கிறார். இயேசு மற்றவர்களை முழுமையாக அன்பு செய்தது போல, நாமும் மற்றவர்களை அன்பு செய்வோம். விசுவாசத்தை மற்றவர்களுக்கும் எடுத்துரைப்போம், மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். நமது வேளைகளில், கடுமையாக உழைப்போம். மற்றவர்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு உதவி செய்வோம். இதனை செய்வதற்கு நமக்கு ஒன்றும் தெய்வீக அருள் தேவை இல்லை. மனிதனாகவே இருந்து இதனை செய்வோம். தெய்வ தந்தையின் அன்பு நிறைந்த தந்தையின், மனித குழந்தைகளாக .

இதனை தாண்டிய அளப்பற்கரிய செயல்கள், தெய்வீக கடவுளிடமிருந்து வருகிறது: இயேசு தந்தையின் தெய்வீக செயல்களை செய்தார். 12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார், தந்தையின் செயல்களையும் செய்வார். தந்தை கடவுளின், தெய்வீக காரியங்களை செய்ய , இவ்வுலகில், நாம் அவரின் கருவியாக இருக்கிறோம்.
இயேசு நம்மோடு, அவரை  மனிதனாக இணைத்து, மனித எல்லையை விட்டு, அதற்கு மேலே, நாம் எப்படி வளர முடியும், என்று காண்பித்தார். இப்பொழுது, ஞானஸ்நாணத்தின் மூலமும், திவ்ய நற்கருணை மூலமும், உறுதி பூசுதல் மூலமும் நமக்கு காண்பிக்கிறார். கிறிஸ்துவின் தெய்வீக இருப்போடு, நாமும் இணைக்கபட்டிருக்கிறோம்.அதன் மூலம் தந்த கடவுளின் செயல்களை இப்பூவுலகில் நாம் செய்யலாம். பாவ சங்கஈர்த்தனத்தின் மூலம், எந்த ஒரு இணைப்பிற்கு எதிரான செயல்கள் அழிக்கப்பட்டு மீண்டும் நாம் அவருடன் இணைகிறோம். அதன் மூலம் அன்பு செய்ய இயலாதவர்களை கூட நாம் அன்பு செய்ய முடியும். அவர்கள் நம்மை ஒதுக்கினாலும், நாம் அவர்கள் மேல் அன்பு கொள்ள முடியும். கடவுள் இறை தன்மையை இந்த பூமியில் கொண்டு வரும் தூதர்களாக இருப்போம். நம் குறைகளை தாண்டி நாம் கடவுள் நமக்கு சொல்லும் செயல்களை செய்ய முடியும்.
© 2014 by Terry A. Modica

Saturday, May 3, 2014

மே 5, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மே 5, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 3ம் ஞாயிறு
Acts 2:14, 22-33
Psalm 16:1-2, 5, 7-11
1 Peter 1:17-21
Luke 24:13-35

லூக்கா நற்செய்தி
எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்
(மாற் 16:12 - 13)
13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. 14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள்.15 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.17 அவர் அவர்களை நோக்கி, ' வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? 'என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.18 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ' எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ' என்றார்.19 அதற்கு அவர் அவர்களிடம், ' என்ன நிகழ்ந்தது? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' நாசரேத்து இயேசுவைப் பற்றியே தான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்.20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்;23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ' என்றார்கள்.25 இயேசு அவர்களை நோக்கி, ' அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே!26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! என்றார்.27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார்.29 அவர்கள் அவரிடம், ' எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று ' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ' வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ' என்று பேசிக் கொண்டார்கள்.33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.34 அங்கிருந்தவர்கள், ' ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ' என்று சொன்னார்கள்.35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில் வரும் இரண்டும் சீடர்களும், இயேசு அப்பத்தை பிட்டு இறைவார்த்தையை விளக்கி கூறும் வரை இயேசுவை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இதில் இரண்டு செயல்வழிகள் கடைபிடிக்கபட்டுள்ளன.

முதலில், இயேசு நற்செய்தியை போதிக்கும்போழுது, அவர்களின் இருதயம் மட்டும் அவரை புரிந்து கொண்டன. (நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?) அவர்கள் கண்களோ இயேசு உண்மையான உருவத்தை அவர் ரொட்டி துண்டுகளை பங்கிடும் வரை, அவரை கண்டுபிடிக்கவில்ல.  

நாம் இன்று திருப்பலியை கொண்டாடும்பொழுது, நாமும் இயேசுவோடு இதே போல பயணிக்கிறோம். முதலில் நாம் நற்செய்தி வாசித்து அதனை கேட்கிறோம். அதன் பின்பு, பிரசங்கம் கேட்கிறோம். அப்பொழுது நமது உள்ளம் திறக்கிறது.
மிகவும் திறமை வாய்ந்த ஒருவர் வாசகங்களை வாசிக்கிம்போழுது, அதில் உள்ள அர்த்தத்தோடு, ஒழுங்கான உர்ச்சரிப்போடு வாசிக்கும்பொழுது, நமது உள்ளம் கடவுளை அவரின் வார்த்தைகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. திறமை வாய்ந்த குருவானவர், அவரின் பிரசங்கத்தின் மூலம்.  இயேசுவே நமக்கு போதனை செய்வது போல நமது உள்ளத்தில் நெருப்பு எரிய செய்வார், நற்செய்தியின் அர்த்தங்களை நமக்கு விளக்கி கூறுவார். மற்றும், வாசகம் வாசிப்பவரும், குருவானவரும், குறைவாக வாசித்தாலும், சரியாக விளக்கி சொல்லா விட்டாலும், நாம் நமது உள்ளத்தை திறந்து இயேசு நம்மிடம் நேரடியாக பேசுவதை கேட்கலாம்.

அதன் பிறகு, நாம் நற்கருணை , காணிக்கை ஜெப வழிபாட்டிற்கு செல்கிறோம். அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் அர்ச்சித்து, புனிதப்படுத்து ம்பொழுது, இயேசு அதனை , குருவானவரின் கைகள் மற்றும் குரல் மூலம் செய்கிறார், எம்மாவுசில் இருந்த சீடர்களுக்கு என்ன செய்தாரோ அதனை நமக்கும் இயேசு செய்கிறார்

நாம் நமது உள்ளத்தை இயேசுவிற்காக திறந்து வைத்தால், இன்னும், அவரை அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருந்தால், சாதாராண ரொட்டி துண்டாக இல்லாமல் , இயேசுவை நாம் பார்ப்போம். நமது உள்ளத்தில், அறிவிலும், இயேசுவை நாம் புரிந்து கொள்வோம். உயிர்த்தெழுந்து இயேசு , உண்மையாகவே நம்மிடையே இருப்பதை உணர்வோம். திவ்ய நற்கருணையில் இயேசு இருப்பதை நாம் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.
© 2014 by Terry A. Modica Facebook