Saturday, May 24, 2014

மே 25, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 25, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 8:5-8, 14-17
Psalm 66:1-7, 16, 20
1 Peter 3:15-18
John 14:15-21

யோவான் நற்செய்தி
15 நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.16  உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.17 அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்.19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்.20 நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு , பரிசுத்த ஆவியை “துனையாளார்” என கூறுகிறார். சில அறிஞர்கள், இந்த வார்த்தையை, “ஆலோசனையாளர்கள்” என்று மொழி பெயர்ப்பு செய்து சொல்கிறார்கள். கிரேக்க மொழியில், இதற்கு , “தன்னோடு கூட இருப்பவர்கள்” என்று அர்த்தம். “parakoleo” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து, “அசிக்கபட்டவர் “ என்ற அர்த்தத்தினால் உள்ள “paraclete” என்ற வார்த்தையை பரிசுத்த ஆவிக்கு கொடுத்து நாம் அவரை அழைக்கிறோம். இதற்கு “வழக்கறிஞர்”, “சட்ட ஆலோசகர்” என்ற அர்த்தம் ஆகும். நம்மை சிலர் தவறாக என்னும்பொழுது, தவறாக கண்டிக்கப்படும்போழுதும், பரிசுத்த ஆவிதான் நமக்கு சட்ட ஆலோசகர் என இயேசு நமக்கு சொல்கிறார்.

அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவி” என்று இயேசு சொல்வதை கவனத்தில் கொள்வோம்.  மற்றவர்கள் நம்மை எப்படி பேசினாலும், நம்மை பற்றி எப்படி தவறாக எண்ணம் கொண்டாலும், கடவுளுக்கு உண்மை தெரியும். பரிசுத்த ஆவியின் உண்மை,  நம்மை தவறான சூழ் நிலையிலிருந்து , நம்மை வெளியே கொண்டு வரும். கடவுள் நம் மேல் கொண்ட எண்ணம் தன நமக்கு முக்கியம். அவர் நம் மேல் கொண்டுள்ள எண்ணம், நாம் நம் மேல் உள்ள மதிப்பை விட மேலானது.

நாம் நம்மையே மிகவும் மோசமாக சித்தரித்து கொள்கிறோம். அதனால் தான், நாம் மிகவும் அதிகம் கவலை கொள்கிறோம். அதனால், மற்றவர்கள் இன்னும் குறைவாக பேசுவார்கள் என்ற கவலையுடன் இருக்கிறோம். நாம் நியாயமாக கவனத்துடன் நம் எண்ணங்களை சோதித்து, கடவுளோடு மீண்டும் இணைய விருப்பத்துடன் செல்லும்பொழுது, பாவசங்கிர்த்தனத்திலும் , திருப்பலியிலும், கலந்து, நம் பாவங்களை கழுவ விருப்பத்துடன் இருக்கும்பொழுது , இயேசு நம்மிடம் , “நான் உன்னை கண்டிக்கவில்லை, இனிமேல் பாவம் செய்யாதே “  என்று கூறுகிறார் .

உங்களை தவறாக யாராவது கூறினால், உடனே இயேசு அங்கே வந்து உங்களை காப்பாற்ற வேண்டும் நீங்கள் நினைப்பதுண்டா? அவர் உங்களை தனியாக விட்டு விடவில்லை என இயேசு கூறுகிறார் . – நம்மை பாதுகாக்க பரிசுத்த ஆவி எப்பொழுது இருக்கிறார் , நம்மை பற்றிய உண்மைகளை நமக்கு எடுத்துரைத்து நம்மை காக்கிறார்.

நாம் பாவம் செய்யும்பொழுதும், உண்மையின் ஆவி நமது தந்தை கடவுளிடம், “பாருங்கள் இந்த குழ்ந்தை உண்மையிலே பரிசுத்த மாக இருக்க விரும்புகிறது,” என்று கூறி நம்மை காக்கிறது. மேலும், நம்மிடம், “பாவத்து துறந்து எப்படி பரிசுத்தமாக வாழ்வது என்று நான் கற்று கொடுக்கிறேன் “ என்று கூறுகின்றார். மற்றவர்களிடம், “நீங்கள் எண்ணை அன்பு செய்தால், என் நண்பர் இவரையும் அன்பு செய்யுங்கள்” என்று கூறுகின்றார்.
© 2014 by Terry A. Modica


No comments: