Saturday, May 3, 2014

மே 5, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மே 5, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 3ம் ஞாயிறு
Acts 2:14, 22-33
Psalm 16:1-2, 5, 7-11
1 Peter 1:17-21
Luke 24:13-35

லூக்கா நற்செய்தி
எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்
(மாற் 16:12 - 13)
13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. 14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள்.15 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.17 அவர் அவர்களை நோக்கி, ' வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? 'என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.18 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ' எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ' என்றார்.19 அதற்கு அவர் அவர்களிடம், ' என்ன நிகழ்ந்தது? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' நாசரேத்து இயேசுவைப் பற்றியே தான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்.20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்;23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ' என்றார்கள்.25 இயேசு அவர்களை நோக்கி, ' அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே!26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! என்றார்.27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார்.29 அவர்கள் அவரிடம், ' எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று ' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ' வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ' என்று பேசிக் கொண்டார்கள்.33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.34 அங்கிருந்தவர்கள், ' ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ' என்று சொன்னார்கள்.35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில் வரும் இரண்டும் சீடர்களும், இயேசு அப்பத்தை பிட்டு இறைவார்த்தையை விளக்கி கூறும் வரை இயேசுவை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இதில் இரண்டு செயல்வழிகள் கடைபிடிக்கபட்டுள்ளன.

முதலில், இயேசு நற்செய்தியை போதிக்கும்போழுது, அவர்களின் இருதயம் மட்டும் அவரை புரிந்து கொண்டன. (நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?) அவர்கள் கண்களோ இயேசு உண்மையான உருவத்தை அவர் ரொட்டி துண்டுகளை பங்கிடும் வரை, அவரை கண்டுபிடிக்கவில்ல.  

நாம் இன்று திருப்பலியை கொண்டாடும்பொழுது, நாமும் இயேசுவோடு இதே போல பயணிக்கிறோம். முதலில் நாம் நற்செய்தி வாசித்து அதனை கேட்கிறோம். அதன் பின்பு, பிரசங்கம் கேட்கிறோம். அப்பொழுது நமது உள்ளம் திறக்கிறது.
மிகவும் திறமை வாய்ந்த ஒருவர் வாசகங்களை வாசிக்கிம்போழுது, அதில் உள்ள அர்த்தத்தோடு, ஒழுங்கான உர்ச்சரிப்போடு வாசிக்கும்பொழுது, நமது உள்ளம் கடவுளை அவரின் வார்த்தைகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. திறமை வாய்ந்த குருவானவர், அவரின் பிரசங்கத்தின் மூலம்.  இயேசுவே நமக்கு போதனை செய்வது போல நமது உள்ளத்தில் நெருப்பு எரிய செய்வார், நற்செய்தியின் அர்த்தங்களை நமக்கு விளக்கி கூறுவார். மற்றும், வாசகம் வாசிப்பவரும், குருவானவரும், குறைவாக வாசித்தாலும், சரியாக விளக்கி சொல்லா விட்டாலும், நாம் நமது உள்ளத்தை திறந்து இயேசு நம்மிடம் நேரடியாக பேசுவதை கேட்கலாம்.

அதன் பிறகு, நாம் நற்கருணை , காணிக்கை ஜெப வழிபாட்டிற்கு செல்கிறோம். அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் அர்ச்சித்து, புனிதப்படுத்து ம்பொழுது, இயேசு அதனை , குருவானவரின் கைகள் மற்றும் குரல் மூலம் செய்கிறார், எம்மாவுசில் இருந்த சீடர்களுக்கு என்ன செய்தாரோ அதனை நமக்கும் இயேசு செய்கிறார்

நாம் நமது உள்ளத்தை இயேசுவிற்காக திறந்து வைத்தால், இன்னும், அவரை அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருந்தால், சாதாராண ரொட்டி துண்டாக இல்லாமல் , இயேசுவை நாம் பார்ப்போம். நமது உள்ளத்தில், அறிவிலும், இயேசுவை நாம் புரிந்து கொள்வோம். உயிர்த்தெழுந்து இயேசு , உண்மையாகவே நம்மிடையே இருப்பதை உணர்வோம். திவ்ய நற்கருணையில் இயேசு இருப்பதை நாம் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.
© 2014 by Terry A. Modica Facebook


No comments: