Friday, May 30, 2014

ஜுன் 1, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுன் 1, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 7ம்  ஞாயிறு
Acts 1:12-14
Psalm 27:1, 4, 7-8 (with 13)
1 Peter 4:13-16
John 17:1-11a

யோவான் நற்செய்தி
இயேசுவின் வேண்டல்
இவ்வாறு பேசியபின் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ' தந்தையே, நேரம் வந்து விட்டது. உம் மகன் உம்மை மாட்சிப் படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்.ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர் மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர்.3உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்.தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள்.நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும்.ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள்.அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள்.10 ' என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய். நான் மாட்சி பெற்றிருக்கிறேன்.11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய திருப்பலியின் எல்லா நற்செய்தி வாசகங்களும், நமக்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது, அதனை புரிந்து கொள்ளவும், பதிலுரை பாடலில் “வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.” என்று திருப்பாடல்களில் நாம் இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சொல்கிறோம்.
நமக்கு பிடித்த நற்செய்தி வசனங்களை நமது மேசையிலோ,கன்னாடியிலோ, அல்லது நாம் அதிகம் பார்க்கும் இடத்திலோ வைத்து நாம் அடிக்கடி பார்த்து கொள்கிறோம். நமக்கு இருளான நேரங்களில், அதிக கவலை உள்ள நாட்களில், இந்த வசனங்களை பார்த்து, நாம் நாம் நம்மையே உற்சாகப்படுத்தி கொள்கிறோம்.
இந்த வசனம் என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் வசனமாக பல வருடங்களுக்கு முன்பு இருந்தது. எங்கள் குடும்பத்தில், சில உறவுகள் பிரச்சினையில், நான் இந்த வசனத்தி அதிகம் பார்த்து கொண்டிருந்தேன். கடவுள் திரும்ப திரும்ப எனக்கு உறுதி அளித்தார், அவருடைய வாக்குறுதி என் நம்பிக்கையை உறுதி படுத்தியது. கடவுள் கொடுக்கும் நலன்களை காண நான் பல வேதனை காலங்களை கடக்க வேண்டியிருந்தது. நான் வேண்டிகொண்ட சில காரியங்கள் நன்றாக நடந்தாலும், இன்னும் சில இன்னும் நடக்கவில்லை. ஆனால் இந்த வசனம் தான், எண்ணை அமைதியா இறைவனை நிலையாக இருக்க வைத்தது. (at gnm.org/RandomQuotes/inspire102.htm)

நற்செய்தியில், இயேசு, கடவுளின் நல்ல செயல்கள், இவ்வுலகில் இருப்பதை அங்கீகரிப்பதை நாம் காண்கிறோம். கடவுளை பின்பற்றுபவர்களை இயேசுவிடம் ஒப்படைத்ததை , அவர்களை இயேசு அங்கீகருத்ததை நாம் நற்செய்தியில் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் கடவுளிடமும், இயேசுவிடமும் நம்பிக்கை வைத்திருந்தனர். நாம் யாரிடம் அதிக அக்கறை கொண்டுள்ளோமோ, அவர்கள் நம்மை ஏற்று கொண்டால், நமக்கு எவ்வளவு சந்தோசம் ஏற்படும். அதன் மூலம் நாம் நம் விசுவாசத்தை அவர்களிடம் நாம் தருகிறோம்.
அவர்கள் விசுவாசத்தை விட்டு வெளியே செல்லும்பொழுது, நாம் இயேசுவிடம் செல்ல வேண்டும். அவர்கள் நிராகரித்த அன்பை நாம் இயேசுவிடம் செலுத்த வேண்டும். நாம் அவரின் வார்த்தைகளை ஏற்றுகொள்கிறோம், கடவுளிடமிருந்த வந்த நற்செய்தி வார்த்தைகளை, அதிலிருந்து நாம் புரிந்து கொண்ட விசயங்களை நாம் ஏற்றுகொள்கிறோம். இயேசு உங்களுக்காக ஜெபிக்கிறார். அதன் தொடர்ச்சியாக, இப்பூவுலகில் நீங்கள், கடவுளின் நல்ல செயல்களை காண்பீர்கள்.

© 2014 by Terry A. Modica 

No comments: