Saturday, July 12, 2014

ஜூலை 13, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜூலை 13, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
Isaiah 55:10-11
Psalm 65:10-14 (with Luke 8:8)
Romans 8:18-23
Matthew 13:1-23

மத்தேயு நற்செய்தி

உவமைப் பொழிவு
விதைப்பவர் உவமை
(
மாற் 4:1 - 9; லூக் 8:4 - 8)
அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார்.மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: ' விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன;6 ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின.7மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன.ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.9கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் என்றார்.

உவமைகளின் நோக்கம்
(
மாற் 4:10 - 12; லூக் 8:9 - 10)
10 சீடர்கள் அவரருகே வந்து, ' ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்? ' என்று கேட்டார்கள்.11 அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: ' விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை.12 உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.13அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.14 இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: ' நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை.15 இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன். ' 16 உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.17 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

விதைப்பவர் உவமையின் விளக்கம்
(
மாற் 4:13 - 20; லூக் 8:12 - 15)
18 ' எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்:19 வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான்.20 பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள்.21 ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.22முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள்.23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, விதை விதைப்பதை பற்றி கூறுகிறது. இதில் முக்கியமான செய்தி என்ன என்றால், விதைத்த விதை மண்ணில் கலந்து, அது அழிந்து முளைக்காவிடில், விதைத்த விதை வீணாகிவிடும், ஒவ்வொரு விதையும், விதைத்தவருக்கு கொடுக்க வேண்டும், அது அழிந்து, புதிய முளையாக உருவாக வேண்டும். அதன் பிறகு தான், வேர் வளர்ந்து, பல தண்டுகள் உருவாகி, மேல் நோக்கி வளர ஆரம்பிக்கும், இருந்தும், அந்த செடிக்கோ, மரத்திற்கோ, இன்னும் உரம் போட்டு வளர்க்க பட வேண்டும்.

இந்த வளர்ச்சி எல்லாம் நடந்த பிறகு, அந்த தாவரம் , செடியோ, விதை போல் இல்லாமல், இந்த உலகத்தின், இயற்கையோடு ஒத்து, எல்லோருக்கும் உதவிடும் , பயனுள்ளதாக மாறிவிடும்.

இயேசுவின் உவமையை கேட்டு, நாமும், பல மடங்காக கொடுக்க தயார் என்று அறிவிக்கிறோம். ஆனால், சும்மா ஆமோதித்து விட்டு, நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால், நாம் பல மடங்காக பெருகி விளைச்சலை கொடுக்க முடியாது. நம்மை எப்படி அதிக விளைச்சல் கொடுக்கும்  மண்ணாக செடியாக மாற்றுவது. ?

இசையாஸ் வாசகத்தில், கடவுளே மிகவும் தரமான மண் என்று சொல்லபடுகிறது – கடவுளும் அவரது வார்த்தைகளும், நல்ல மண். பவுலடியார் இரண்டாம் வாசகத்தில், துன்புறுவதும் அழிவதும், உருவாக்கத்தின் ஒரு பாகம் என்று சொல்கிறார் (விதைகள் மண்ணில் விழுந்து மடிந்து தான் புதிய செடியாக மாறுகிறது ). மீட்பு, துன்பத்திலும், மரணத்திலும் இருந்து வருகிறது.

நாம்  நம்மையே இந்த திட்டத்திற்கு உட்படுத்தி கொண்டு, கடவுளிடம் வேண்டி, நம்மை வளர்க்க விட்டால் தான், நாம் முழுமையாக பலன் தருவோம்.


© 2014 by Terry A. Modica


No comments: