Friday, July 18, 2014

ஜூலை 2௦ 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூலை 2௦ 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு
Wisdom 12:13, 16-19
Psalm 86:5-6, 9-10, 15-16
Romans 8:26-27
Matthew 13:24-43
மத்தேயு நற்செய்தி
வயலில் தோன்றிய களைகள் உவமை
24 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார்.25 அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்.26 பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன.27 நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ' ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள்.28 அதற்கு அவர், ' இது பகைவனுடைய வேலை ' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ' நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன? ' என்று கேட்டார்கள்.29 அவர், ″ வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும்.30 அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ' முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் ' என்று கூறுவேன் ″ என்றார். '

கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள்
(
மாற் 4:30 - 32; லூக் 13:18 - 21)
31 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: 'ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது.http://www.arulvakku.com/images/footnote.jpg32 ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.33 அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ' பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும். '

உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு
(
மாற் 4:33 - 34)
34 இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை.35 ' ' நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன் ' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.

வயலில் தோன்றிய களைகள் உவமையின் விளக்கம்
36 அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ' வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும் ' என்றனர்.37 அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: ' நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்;38 வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்;39 அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.40 எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.41 மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்;http://www.arulvakku.com/images/footnote.jpg42 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.43 அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும். '

புதயல் உவமை
44 ' ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

நீங்கள் போய் சீடர்களை உருவாக்குங்கள்: அமெரிக்காவில், மனமாற்றத்திற்கான திட்டத்திற்கு தலைப்பு இதுதான். (1992) , இது மூன்று முக்கிய குறிக்கோள்களை செயல் திட்டத்தில் உருவாக்கப்பட்டது. (1) உங்கள் விசுவாசத்தை இன்னும் உறுதியோடு வளர்த்தல் , (2) மற்றவர்களின் மன மாற்றத்திற்கு அழையுங்கள். (3) உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்து சமூகத்தை மாற்றுங்கள். இன்றைய நற்செய்தியில், இயேசுவும் உவமைகள் மூலம் இதே மூன்று குறிக்கோளை நமக்கு போதிக்கிறார்.
(thanks to www.arulvakku.com)

உங்கள் விசுவாசத்தை உறுதியாக வளர்த்தல்: இறையரசில், நாம் நல்ல கோதுமை போல , களைகளோடு இருக்கிறோம். களைகள் நம்மை தாண்டி வளர்ந்து விடும். அதனால், நாம் தினமும், பரிசுத்த வாழ்வில் வளர முயற்சித்து கொண்டே இருத்தல் வேண்டும். உங்கள் பரிசுத்த வாழ்வை தடுக்கும் களையை எடுக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் மத்தியில், சாத்தானின் தூன்டுதலோடு நடப்பவர்கள் மத்தியில், உங்கள் விசுவாசம் எப்படி வளர்கிறது? உங்கள் தந்தை கடவுள் இந்த உலகை உருவாக்கியவர் விசுவாசத்தில் வளர உங்களுக்கு தேவையான எல்லா ஆற்றலையும் கொடுக்கிறார்

(2) மற்ற சகோதரர்களை இறையரசிற்கு அழைத்தல்: நாம் எல்லாம், மிகச் சிறிய விதை ஆக இருந்து புதர்களுக்கு இடையே மிக பெரியதாக வளரும் மரமாகி, பலருக்கு பயனுள்ளவர்களாக இருப்போம். உங்கள் விசுவாசத்தினால், யார் பயன் பெறுகிறார்கள்? உங்கள் பரிசுத்த வாழ்வு எவ்வாறு அவர்களை இயேசுவை நோக்கி அழைக்கிறது. ? பரிசுத்த ஆவியானவர் , உங்கள் அனுபவத்திலிருந்து, அவர்களை மனம் மாற தயாராக இருந்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு தேவையான ஆற்றலையும் அருளையும் வழங்குகிறார் .
(3) சமூகத்தை மாற்றுதல்: இறையரசில், நாம் ஈஸ்டை போல, சிறிய மாவை மிக பெரியதாக மாற்றி ரொட்டி துண்டுகளாக மாற்றுவது போல, நாமும் இருக்கிறோம். கிறிஸ்தவர்களாக இந்த உலகை முன்னேற்ற நீங்கள் எந்த செயலை செய்கிறீர்கள்? உங்கள் வேலையிடத்தில், உங்கள் விசுவாசம், ஒரு மாற்றத்த்தை கொண்டு வருகிறதா? உங்கள் வீட்டிற்கு அருகில், மற்றும், கோவிலில் மாற்றத்தை கொண்டு வருகிறீர்களா? திருப்பலியில், நீங்கள், திவ்ய நற்கருணையை பெற்று, அதனால், பலம் பெற்று, நீங்கள் இந்த உலகிற்கு, திவ்ய நற்கருனையாக மாற உங்களுக்கு ஆற்றல் தரப்படுகிறது. திருப்பலியில், முடிவுறும் தருவாயில், குருவானவர், உங்களை ஈஸ்டாக மாற ஆசிர்வதித்து அனுப்புகிறார்.

© 2014 by Terry A. Modica

No comments: