Friday, August 29, 2014

ஆகஸ்டு 31 2௦1 4 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 31 21 4 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு
Jeremiah 20:7-9
Psalm 63:2-6, 8-9
Romans 12:1-2
Matthew 16:21-27


இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(
மாற் 8:31 - 9:1; லூக் 9:22 - 27)
21 இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.22 பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, ' ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது ' என்றார்.23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, ' என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் என்றார்.24 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.25 ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்.26மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார் என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய முதல் வாசகம், எனக்கு மிகவும் பிடித்த வாசகம். ஜெறேமியா எப்படி இங்கே நினைக்கிறாரோ அதே போல நானும் பல நேரங்களில் நினைத்தது உண்டு. கடவுளிடம் பல முறை கடிந்து கொண்டுள்ளேன். “ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: “, மேலும், இதனை திரும்ப திரும்ப நடக்க அனுமதித்து விட்டேன். “உங்களுக்கு இவ்வாறு நடக்கும் என்று தெரியும் கடவுளே!, எனக்கு ஏன் இந்த சோதனை.? “  உங்களுக்கு அப்படி தோணியது உண்டா?
என் அவரை இவ்வாறு செய்ய விடுகிறோம்? கடவுள் நம்மை கடினமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றாலும், ஏன் அவர் மேல் நம்பிக்கை கொண்டுள்ளோம்.? இயேசுவை பின் சென்று , மற்றவர்களுக்கு அன்பையும், உதவியையும் கொடுப்பதால், நமக்கு துன்பம் வரும் என்று தெரிந்தும், ஏன் இதனை செய்கிறோம்?

கடவுளோடு நடந்து செல்வது , மேலும், அவர் இறையரசிற்கு சேவை செய்வது என்பது மிக கடினமானது, ஆபத்து இருந்தாலும், ஆச்ச்சரியங்களை தர கூடியது. எதிர்பாராத ஒன்று நடக்கும், துரதிஸ்ட வசமாக அதில் துன்பங்களும் இருக்கும் – நம் சொந்த விருப்பங்களை விட்டு விட்டு , சிலுவைகளை சுமந்து,  இயேசுவோடு கல்வாரி மலைக்கு சென்று , (அதன் மூலம், மீட்பு அடைவோம் , நற்செய்தியில் சொல்லியிருப்பது போல )
ஏனெனில், நாம் கடவுளை அன்பு செய்கிறோம். நம்மையே அவருக்கு தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். (இரண்டாவது வாசகத்தில் கூரப்பட்டுள்ளது போல) . இது தான் மிகஉயர்ந்த கடவுள் ஆராதனை, துதி. திருப்பலியில் திவ்ய நற்கருணை முலம் நாம் இணைகிறோம். இங்கே , இயேசுவின் ஆவியோடு, நாம் இணைகிறோம். இயேசுவோடு இணைந்து நாமும், திவ்ய நற்கருணை ஆகிறோம்.
ஜெரேமியாவின் புகார்  மூலம் , நாம் கடவுளிடம் நம் புகார்களை, கண்டிப்புகளை , குற்றங்களை சொல்லலாம். நாம் கடவுளிடம், அவருக்காக இறைசேவை செய்ய விருப்பமில்லை என கூறலாம், அதனால் ஒரு தண்டனையும் நமக்கு கிடையாது. மற்றவர்களிடம் புகார் கூறுவது என்பது கண்டிப்பாக ஒரு பாவ செயல். ஏனெனில், இது கடவுளையும் தவறாக பார்ப்பது போல ஆகி விடும்.

நமது சோதனையின் பொது, மற்றவர்களிடம் நமக்காக ஜெபிக்க சொல்வது மிகவும் முக்கியமானது. கண்டிப்பாக இதனை நாம் செய்ய வேண்டும். ஆனால், மற்றவர்களிடம் புகார் கூறுவது, என்பது, நாம் கடவுளை குறைவாக நம்புகிறோம் என்று அர்த்தம். நமது தியாகத்தினால், நல்லது நடப்பதை நாம் பார்ப்போம். நல்லது நடப்பதை தான் மற்றவர்களிடம் நாம் சொல்ல வேண்டும்.

© 2014 by Terry A. Modica Facebook


Friday, August 22, 2014

ஆகஸ்டு 24 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஆகஸ்டு 24 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு
Isaiah 22:19-23
Psalm 138:1-3, 6, 8
Romans 11:33-36
Matthew 16:13-20
மத்தேயு நற்செய்தி
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(
மாற் 8:27 - 30; லூக் 9:18 - 21)
13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள்.15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார்.16சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.http://www.arulvakku.com/images/footnote.jpg19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என்றார்.20 பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
(thanks to www.arulvakku.com)
இயேசு ராயப்பரிடம் திருச்சபையின் பாறையாக நீ இருப்பாய் என அவரை ஆசிர்வதிக்கும் பொழுது, அவர் ஒரு வாக்குறுதியை கொடுக்கிறார். “ பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.”  தவறான கொள்கை உடைய சாத்தானின் எந்த ஒரு செயலும் இந்த பாறையை வெல்ல முடியாது என்று உறுதி அளிக்கிறார்.

இயேசு பாதாளம், அல்லது நரகம், இந்த திருச்சபையை எதிர்த்து வெல்லும் என சொல்ல வில்லை. அதன் வாயில்கள் திருச்சபையை ஜெயிக்க முடியாது என்று சொல்கிறார். கண்டிப்பாக வெல்ல முடியாது. வாயில்கள் எதனையும் தாக்காது. ஆனால் காக்கும். தடுக்கும். வாயில்கள் அதனை சுற்றியுள்ள சுவரோடு உள்ளிருப்பவை அனைத்தையும் காக்கும். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது தவறு செய்து, சிறையி அடைபட்டுள்ளர்களா? அல்லது சாத்தானின் காரியங்களால் உள்ளே இருக்கிறார்களா?

தவறான செயல்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் அனைவரும், எதிர்த்து தாக்க வேண்டும். தற்காத்து கொண்டு இருக்க கூடாது கிறிஸ்தவர்கள் எதிரியை தாக்கி அழிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். பாதாளத்தின் கதவுகளை தாக்க வேண்டும். அங்கேயே அவர்களை கிழே தள்ள வேண்டும். அதன் மூலம், சாத்தானின் பாதாளத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும்  சாத்தானை வெற்றி கொள்ள வேண்டும்.

இயேசு 2௦௦௦ம் வருடம் முன்பு சாத்தானிடமிரூந்து மக்களை மீட்க என்ன செய்தாரோ , அதனை நம் மூலம் இப்போது செய்கிறார்
சாத்தானிடமிருந்து மீண்டு வர ஆசைபடும் பாவிகளுக்கு, ராயப்பர் மூலமாக , அவரிடம் விண்ணகத்தின் வாயில்களின் சாவியை கொடுத்து, அவரையே கிறிஸ்தவத்தின் முதல் காப்பாளானாக, (போப்) ஆக்கினார். இந்த சாவிகள் பல தலைமுறைகாளாக கத்தோலிக்க குருக்கள் மூலம் நாம் பெறுகிறோம்.
இந்த சாவிகள் என்ன? பாதாளத்தின் வாயில்களை திருவருட்சாதனங்கள் மூலம் உடைக்க முடியும். அதன் மூலம் நமக்கு நித்திய வாழ்விற்கான வழியை நமக்கு திறக்கப்படும். குருவானவர் , பாவ சங்கீர்த்தனத்தில், பாவத்தை விட்டு மீண்டு வர முயற்சிக்கும் பாவியை மன்னித்து , அவருக்கு அருளை வழங்குவதும், திருமண சடங்கில், ஆணையும் பெண்ணையும் இணைப்பதும், இயேசு தான், அவர் குருக்களின் மூலமாக செய்கிறார்.
இறைவனின் ஆசியுடன், கடவுளின் ஆற்றலுடன் உள்ள ஒவ்வொரு திருவருட்சாதனமும், சாத்தானின் செயல்களை உடைத்தெறியும், நாம் கடவுளின் அருளை பெற முயற்சிக்கும் பொழுது.
© 2014 by Terry A. Modica Facebook


Friday, August 8, 2014

ஆகஸ்டு 1௦ 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 1௦ 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு
1 Kings 19:9a, 11-13a
Psalm 85:8-14
Romans 9:1-5
Matthew 14:22-33

மத்தேயு நற்செய்தி

கடல்மீது நடத்தல்
(
மாற் 6:45 - 52; யோவா 6:5 - 21)
22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். 26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, ' ஐயோ, பேய் ' என அச்சத்தினால் அலறினர்.27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ' துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் என்றார்.28 பேதுரு அவருக்கு மறுமொழியாக, ' ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் ' என்றார்.29 அவர், ' வா என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, ' ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் என்று கத்தினார்.31இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, ' நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? ' என்றார்.32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, ' உண்மையாகவே நீர் இறைமகன் ' என்றனர்.
(Thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு ரொட்டி துண்டுகளையும், மீனையும் பல மடங்காக்கிய புதுமையை நிகழ்த்திவிட்டு, தனியே ஜெபம் செய்ய செல்வதை பார்க்கிறோம்.
நீங்கள் மிக பெரிய விருந்தை முடித்து விட்டு, அல்லது மிக பெரிய செயலை செய்து விட்டு , சாதனை நிகழ்த்திவிட்டு , கஷ்டமான காரியங்களை கடந்து வந்த பின்பும், தனியே கடவுளிடம் சென்று அவருக்கு நன்றி  கூறி கடவுளிடமிருந்து ஆற்றலையும், சக்தியை பெற்று கொள்கிறோமோ?

இயேசு தந்தை கடவுளோடு அமர்ந்து சிறிது நேரம் செலவிட்ட பின்பு, இயேசு அதே அனுபவத்தோடு, அவர் தண்ணிரில் நடந்தார்.
இயேசு அடிக்கடி ஜெபத்தில் நேரம் செலவழிப்பவர், நற்செய்தியில் குறிப்பிட்டதை விட அதிக நேரம் நிச்சயம் செலவழித்திருப்பார். என் மத்தேயு இங்கே இதனை குறிப்பிடுகிறார் ? இந்த ஜெபத்திற்கு அப்படி என்ன முக்கியத்துவம்?

மத்தேயு மூலமாக , கடவுள் நாம் எப்படி விசுவாசத்தோடு தொடர்ந்து நம் வாழ்வை கொண்டு செல்ல முடியும் என காட்டுகிறார்.
நமது ஆற்றலை புதுபிக்க, அடிக்கடி ஜெபத்தில் நமது நேரத்தை செலவிட்டு , கடவுளை பற்றி இன்னும் அறிந்து, அவர் எப்படி நம்மை வழி நடத்துகிறார். என்பதை நாம் தெரிந்து கொண்டு, நம்மை நாமே மாற்றிகொள்வது நல்லது. நமது குடும்பத்திலும், வேலையிடத்திலும், சமூகத்திலும், கடவுளுக்காக, நாம் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன. மற்றவர்களுக்காக நாம் நம் சக்தியையும் , நேரத்தையும் செலவிடும்போது, நாம் சக்தியை இழந்து சோர்வடைகிறோம்.  நாம் இன்னும் தொடர்ந்து கடவுளுக்காக இறைசேவை செய்ய, நாம் இழந்த சக்தியை மீண்டும் கடவுள் நிரப்ப நாம் அவருக்கு அனுமதி தரவேண்டும்.

நமக்கு என்ன நடந்தாலும், அதனை எதிர்கொள்ள ஜெபம் நமக்கு பெரிதும் உதவுகிறது. நாம் எங்கே செல்கிறோம், என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமலே, இருக்கும்பொழுது, ஜெபம் நமக்கு உதவும். நாம் தனியாக கடவுளிடம் அமர்ந்து ஜெபிக்கும்போழுது, அவரிடமிருந்து நாம் பெரும் அருள், நமக்காக வடிவமைக்கப்பட்ட அன்பளிப்பாகும். அந்த அன்பளிப்பின் மூலம், பிறருக்கு நாம் உதவ முடியும். இது நமது விசுவாசத்தை இன்னும் உறுதியாக்கும். எப்படி தண்ணீரில் நடப்பது என நமக்கு கற்று கொடுக்கும். , கடவுளின் தேவை உள்ள அடுத்த கரைக்கு மக்களிடம் நாம் செல்ல உதவும். கடவுள் அவர்களுக்கு நம் மூலம் சேவை செய்கிறார். நீங்கள் ஜெபம் செய்து தயாராக இருக்கிறீர்களா?
© 2014 by Terry A. Modica