ஆகஸ்டு 24 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 21ம்
ஞாயிறு
Isaiah 22:19-23
Psalm 138:1-3, 6, 8
Romans 11:33-36
Matthew 16:13-20
Psalm 138:1-3, 6, 8
Romans 11:33-36
Matthew 16:13-20
மத்தேயு
நற்செய்தி
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மாற் 8:27 - 30; லூக் 9:18 - 21)
(மாற் 8:27 - 30; லூக் 9:18 - 21)
13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை
நோக்கி, '
மானிடமகன் யாரென்று மக்கள்
சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான்
எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள்
ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள்.15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?
' என்று அவர் கேட்டார்.16சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, '
யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.17 ஏனெனில் எந்த மனிதரும் இதை
உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே
வெளிப்படுத்தியுள்ளார்.18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என்
திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.19 விண்ணரசின் திறவுகோல்களை நான்
உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்.
மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார்.20 பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும்
சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.
(thanks to www.arulvakku.com)
இயேசு ராயப்பரிடம் திருச்சபையின் பாறையாக நீ இருப்பாய் என அவரை
ஆசிர்வதிக்கும் பொழுது, அவர் ஒரு வாக்குறுதியை கொடுக்கிறார். “ பாதாளத்தின்
வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.” தவறான
கொள்கை உடைய சாத்தானின் எந்த ஒரு செயலும் இந்த பாறையை வெல்ல முடியாது என்று உறுதி
அளிக்கிறார்.
இயேசு பாதாளம், அல்லது நரகம், இந்த திருச்சபையை எதிர்த்து வெல்லும் என சொல்ல வில்லை. அதன் வாயில்கள் திருச்சபையை ஜெயிக்க முடியாது என்று சொல்கிறார். கண்டிப்பாக வெல்ல முடியாது. வாயில்கள் எதனையும் தாக்காது. ஆனால் காக்கும். தடுக்கும். வாயில்கள் அதனை சுற்றியுள்ள சுவரோடு உள்ளிருப்பவை அனைத்தையும் காக்கும். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது தவறு செய்து, சிறையி அடைபட்டுள்ளர்களா? அல்லது சாத்தானின் காரியங்களால் உள்ளே இருக்கிறார்களா?
தவறான செயல்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் அனைவரும், எதிர்த்து தாக்க வேண்டும். தற்காத்து கொண்டு இருக்க கூடாது கிறிஸ்தவர்கள் எதிரியை தாக்கி அழிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். பாதாளத்தின் கதவுகளை தாக்க வேண்டும். அங்கேயே அவர்களை கிழே தள்ள வேண்டும். அதன் மூலம், சாத்தானின் பாதாளத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் சாத்தானை வெற்றி கொள்ள வேண்டும்.
இயேசு 2௦௦௦ம் வருடம் முன்பு சாத்தானிடமிரூந்து மக்களை மீட்க என்ன
செய்தாரோ , அதனை நம் மூலம் இப்போது செய்கிறார்
சாத்தானிடமிருந்து மீண்டு வர ஆசைபடும் பாவிகளுக்கு, ராயப்பர் மூலமாக
, அவரிடம் விண்ணகத்தின் வாயில்களின் சாவியை கொடுத்து, அவரையே கிறிஸ்தவத்தின் முதல்
காப்பாளானாக, (போப்) ஆக்கினார். இந்த சாவிகள் பல தலைமுறைகாளாக கத்தோலிக்க
குருக்கள் மூலம் நாம் பெறுகிறோம்.
இந்த சாவிகள் என்ன? பாதாளத்தின் வாயில்களை திருவருட்சாதனங்கள் மூலம்
உடைக்க முடியும். அதன் மூலம் நமக்கு நித்திய வாழ்விற்கான வழியை நமக்கு
திறக்கப்படும். குருவானவர் , பாவ சங்கீர்த்தனத்தில், பாவத்தை விட்டு மீண்டு வர
முயற்சிக்கும் பாவியை மன்னித்து , அவருக்கு அருளை வழங்குவதும், திருமண சடங்கில்,
ஆணையும் பெண்ணையும் இணைப்பதும், இயேசு தான், அவர் குருக்களின் மூலமாக செய்கிறார்.
இறைவனின் ஆசியுடன், கடவுளின் ஆற்றலுடன் உள்ள ஒவ்வொரு
திருவருட்சாதனமும், சாத்தானின் செயல்களை உடைத்தெறியும், நாம் கடவுளின் அருளை பெற
முயற்சிக்கும் பொழுது.
No comments:
Post a Comment