Friday, September 26, 2014

செப்டெம்பர் 28 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


செப்டெம்பர் 28 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Ezekiel 18:25-28
Psalm 25:4-5, 8-10, 14
Philippians 2:1-11
Matthew 21:28-32


மத்தேயு நற்செய்தி

இரு புதல்வர்கள் உவமை
28 மேலும் இயேசு' இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ' மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் ' என்றார்.29 அவர் மறுமொழியாக, ' நான் போக விரும்பவில்லை ' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ' நான் போகிறேன் ஐயா! ' என்றார்; ஆனால் போகவில்லை.31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? ' என்று கேட்டார். அவர்கள் ' மூத்தவரே ' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம்' வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.32ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை 'என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, நம்மில் சிலருக்கு அதிர்ச்சியை கொடுப்பது ஆக இருக்கறது. ஆன்மீகத்தில் சரியாக இருந்தால் போதும் என்ற நினைப்போடு இருப்பவர்கள், சரியாக தந்தை கடவுளின் விருப்பத்தை செய்கிறோமா என்று நியாயமாக பரிசோதித்து பார்ப்பதில்லை. இயேசு வரி வசூலிப்பவரும் , விலை மகளிரும் பக்தியாய் இருப்பவர்களை விட இறையரசிற்கு முன்னே செல்வார்கள் என்று சொல்கிறார். (வரி தாண்டுபவர்களும், விலை மகளிரும் சமூகத்தில் மிகவும் கொடிய பாவம் என்று எல்லோராலும் சொல்லப்பட்டது )

அறிவியல் அறிஞர்கள் “ என்று சொல்லபடுபவர்களுக்கு இயேசு கேட்ட
கேள்விக்கு பதில் தெரியும் - கடவுளுக்கு அவர் விருப்பத்திற்கு ஆம் என்று சொல்ல தெரியும் - அதற்கு பதில் தெரிவதும், அதனை செய்வதும் தான் மோட்சத்திற்கும் , நரகத்திற்கு உள்ள வித்தியாசம் .

கடவுள் சரியான பதிலை எதிர்பார்க்கவில்லை , அதற்கான செயலை , அவர் விருப்பத்தினை நிறைவேற்றிட முயற்சிப்பதை எதிர்பார்க்கிறார். திருச்சபையின் போதனைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்று கடவுள் கேட்கவில்லை . ஆனால், அன்பினாலும், உற்சாகத்திலும் கீழ்படிந்து திருச்சபையின் நோக்கத்திற்காக இறை சேவை செய்வதே கடவுளின் விருப்பம்
ஒவ்வொரு ஞாயிறும் திருப்பலிக்கு செல்வதால் என்ன பயன் ? திருப்பலியை விட்டு வெளியில் பரிசுத்த வாழ்வில் அது உங்களை மாற்றுகிறதா? உங்களுக்கு தெரிந்து யாராவது திருப்பலிக்கு 'வரமாட்டேன்' என்று சொல்பவர்கள் உண்டா? அவர்கள் கடவுளிடம் உண்மையாக அன்பு கொண்டு, நல்ல செயல்கள் செய்கிறார்களா ? அவர்கள் இயேசுவிடம் கண்டிப்பாக சேர்வது நிச்சயம், திருப்பலிக்கு சென்று ஒன்றும் செய்யாதவர்களை விட முன்னமே அவர்கள் இயேசுவிடம் செல்வார்கள்.
கடவுள் நம்மிடம் இரண்டையும் செய்ய சொல்கிறார்: சரியான பதில் தெரிந்திருக்க வேண்டும், இறை சேவையையும் செய்ய வேண்டும். விசுவாசத்துடன் திருப்பலிக்கு செல்லுங்கள், அதன் பிறகு ,
மாற்றத்திற்கு செல்லுங்கள். கடவுளின் அழைத்தலுக்கு ஆம் என்று சொல்லி , கிறிஸ்துவோடு இணைந்து இவ்வுலகை இன்னும் நல்லதாக ஆக்குங்கள். நாம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவை அறிமுக படுத்துவோம்.

© 2014 by Terry A. Modica 



Saturday, September 20, 2014

செப்டம்பர் 21, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 21, 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Isaiah 55:6-9
Psalm 145:2-3, 8-9, 17-18
Romans 1:20c-24, 27a
Matthew 20:1-16a

மத்தேயு நற்செய்தி


திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை
1 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.4 அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன் ' என்றார்.5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ' நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்? ' என்று கேட்டார்.7 அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை ' என்றார்கள். அவர் அவர்களிடம், ' நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள் ' என்றார்.8மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ' வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் ' என்றார்.9 எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.11அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,12 கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே ' என்றார்கள்.13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ' தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா? ' என்றார்.16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர் என்று இயேசு கூறினார்.
(www.arulvakku.com)

கடவுள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை!. இது மாதிரி எத்தனை முறை நாம் நினைத்திருப்போம்? நமது மனித மன அளவில், எல்லோரும் செய்வது தான். இன்றைய நற்செய்தியில் வரும் உவமையும் இதே போல தான்.


நிலத்தின் சொந்தத காரார் நியாயமாக நடக்காதது போல தெரியும். நாம் அவரை புரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம். எனினும், இதே உவமை தந்தையாக நினைத்து பார்த்தோமானால், அன்புள்ள கடவுள் தந்தை அவரின் குசந்தைகள் அனைவரையும் ஒன்றாகவே பார்த்து, சமமாகவே அவர்களுக்கு பங்கிட்டு கொடுக்கிறார். எந்த குழந்த்தைக்கு அதிகம் தேவையோ அதற்கு அதிக கவனம் எடுத்து கொள்கிறார். மற்றவர்களையும் அதே போல அன்பு செய்கிறார்.

தந்தை கடவுள் திராட்சை தோட்ட முதலாளியை போல, எல்லோருக்கு சமமாக கொடுப்பவர். நாம் மோட்சத்திற்கு செல்வதற்கு, பல காலம் கடவுளோடு நெருங்கி கீழ்படிந்து இருந்தாலும், மிகவும் லேட்டாக வந்தவர்களுக்கும், தந்தை கடவுள் மோட்சம் தருகிறார். ஏனெனில், எல்லோருக்கும் சமமான பரிசை எல்லோருக்கும் தருவது ஒன்றும் அநீதி கிடையாது. கடைசி நிமிடத்தில் கடவுளை அறிந்து மனம் திருந்தியவர்களுக்கும், கடவுள் முழுமையான பரிசுத்தமான அன்பை கொடுக்கிறார். அவர் இதற்கும் குறைவாக எதனையும் செய்ய முடியாது.

முதல் வாசகம் எவ்வளவு உயரம் மோட்சம் இருக்கிறதோ, அதே போல கடவுள் வழிகளும், அவரது எண்ணங்களும் நம்மை விட உயர்ந்தவை. நீது என்பது சமமான பாவித்தல் தான் நீது என்று நாம் நினைத்து கொள்கிறோம். அது பழைய ஏற்பாட்டு காலத்தில் "கண்ணுக்கு கண்”" என்று நீதிக்கு சொல்லப்பட்டது. இயேசு நீதியை மிகவும் உயரத்திற்கு எடுத்து சென்றார். ஒருவருக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் அனைவரையும் சமமாக பாவித்து, அன்பு செய் என்பதாகும்.

கடவுள் மிக உயர்ந்த வழிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் அன்பற்றவர்களாக இருந்தாலும், கடவுள் நம்மை முழுதும் அன்பு செய்கிறார் என்பதை நினைத்து அவர் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளோம். எந்த தகுதியும் இல்லாவிட்டாலும் கூட , கடவுள் அனைவருக்கும் கொடுக்கும் அதே அன்பை நமக்கும் கொடுக்கிறார். பரிசத்த புனிதர்கள் மேல் எவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருக்கிறாரோ அதே அன்பையும் பாசத்தையும் நம் மேல் வைத்திருக்கிறார். அன்னை மரியாளை அன்பு செய்வது போல நம்மையும் அன்பு செய்கிறார். “என்னுடைய சொந்த அன்பை நாம் என்ன செய்ய வேண்டும் என்ற உரிமை எனக்கில்லையா ? “ என்று அவர் கேட்கிறார் .


© 2014 by Terry A. Modica


Friday, September 12, 2014

செப்டெம்பர் 14 2014 ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை

செப்டெம்பர் 14 2014 ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை
திருச்சிலுவையின் மகிமை விழா

Numbers 21:4b-9
Psalm 78:1bc-2, 34-38 (with 7b)
Philippians 2:6-11
John 3:13-17

யோவான் நற்செய்தி

13 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

(thanks to www.arulvakku.com)



இயேசு கடவுள், எனவே நாம் தாழ்மையுடன் அவர் முன் வணங்குதல் வேண்டும் இருந்தாலும் அவர் நம் முன் தாழ்ந்து பணிகிறார். இதனை இன்றைய இரண்டாவது வாசகம் நமக்கு விளக்கி சொல்கிறது.

நற்செய்தி வாசகம், இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தார் என்று கூறுகிறது . அதுவே கீழ் படிதல் ஆகும். விண்ணகத்தின் தூய்மையை விட்டு , அதன் சந்தோசத்தை விட்டு நீங்களோ நானோ வருவோமா? இங்கே உள்ள தப்பான ஆட்களுடன் பழகுவோமா ?


நமக்கு இயற்கையாகவே விண்ணகத்திற்கு செல்ல வேண்டும் என்ற வேட்கை உள்ளது. அது தான் நமது உண்மையான வீடு. உள்ளுணர்வு நமக்கு அதனை உணர்த்துகிறது. அதனால் தான், நமக்கு ஏதாவது ஒன்று தவறாக இருக்கும்பொழுது நாம் புகார் அளிக்கிறோம். அல்லது யாராவது ஒருவரிடம் குறை சொல்கிறோம். கடவுளிடம் " இறைவா இந்த சோதனையால், துன்பப்படுகிறேன், எனக்கு எப்பொழுது விடிவு வரும் ? “ (இதையே தான் இஸ்ரேயளர்கள் பாலை வனத்தில் கேட்டனர்) .கடவுளே இது எத்தனை துயரமானது என உங்களுக்கு தெரியவில்லை " என்று சொல்கிறோம்.
ஆனால், அந்த பாவத்தினால் தான், இஸ்ரேயலர்கள், ( எண்ணிக்கை 21: ) , அவ்வாறு புகார் அளிப்பது என்பது, நமது விண்ணக எதிர்ப்பார்ப்புகளை விட்டு விட்டு , இந்த பூமியின் தேவைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்கிறோம் என்று அர்த்தம் . இன்றைய பதிலுரை பாடலில், “கடவுளின் செயல்களை மறந்துவிடாதீர்கள் “ என சொல்கிறது
புகார் சொல்வது என்பது , நாம் அவரை மறந்து விட்டோம் என்று அர்த்தம்.

இயேசு ஏதாவது புகார் சொன்னாரா ? சில நேரங்களில் வருத்தம் அடைவார். ஆனால் ஒருபோது அவர் புகார் சொன்னதில்லை. அவரை அடித்த பொழுது கூட, ஆணியால் அடித்த பொழுது கூட , அவர் குறை கூறியதில்லை. அதற்கு பதிலாக அவர் அவர்களுக்காக ஜெபம் செய்தார். அவரின் முழுமையான அன்பினால், அவர் அவர்களுக்காக ஜெபித்தார். ஏனெனில், எந்த ஒரு தயக்கமும் இன்றி " உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். “ நமக்கு தெரியும்

இறைவா , தாழ்மையுடன் எனக்கு உதவி செய்து, என் புகார்களையும், கண்டித்த லையும் நிறுத்திவிடும்


© 2014 by Terry A. Modica 

Saturday, September 6, 2014

செப்டம்பர் 7 2014 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 7 2014 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு
Ezekiel 33:7-9
Psalm 95:1-2, 6-9
Romans 13:8-10
Matthew 18:15-20

மத்தேயு நற்செய்தி

பாவம் செய்யும் சகோதரர்
(லூக் 17:3)
15 ' உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.16 இல்லையென்றால் ' இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும் ' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.19உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ' 
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, நீதிக்கும் பரிசுத்த மான விசயங்களுக்கு எதிராக நடக்கும் அனைத்தையும் நாம் எதிர்க்க வேண்டும், என்றும், பாவங்களிலிருந்து நாம் மற்றவர்களை மாற செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.
இப்படி பாவத்திற்கு எதிராக நாம் நடக்கிற பொழுது, கருணையோடும், இரக்கத்தோடும், நிபந்தனையற்ற அன்புடன் நடக்காவிடில் அதுவும் ஒரு பாவமாகும்.
இயேசு நமது சக கிறிஸ்தவர்களை பாவத்திலிருந்து நாம் நிறுத்த வேண்டும் என்று இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். நமது சக கிறிஸ்தவர் குழுவோடு இணைந்து, அவர்களின் ஆதரவோடும், ஜெபத்தொடும் நாம் இதில் பணியாற்ற வேண்டும் என்பதையும் அவர் அமக்கு காட்டுகிறார்.
முதலில், நாம் பாவிகளிடம் பேசுவோம். அவர்கள் மற்றவர்களையும், அவர்களையுமே துன்பபடுத்தி கொள்ளும்பொழுது (எல்லா பாவங்களும் துன்பத்தை தருவது தான், நாம் கண்ணால் அதனை பார்க்காமல் இறந்தால் கூட) , இதனை அவர்களுக்கு எடுத்து கூறாமால் இருந்தால், நாம் அமைதியாக இருப்பது கூட பாவமாகும், மேலும் நாம் அவர்கள் மேல் அக்கரையில்லா அன்பற்றவர்களாக இருப்போம்.
முதலில், நாம் பாவிகளிடம் பேசுவோம். அவர்கள் மற்றவர்களையும், அவர்களையுமே துன்பபடுத்தி கொள்ளும்பொழுது (எல்லா பாவங்களும் துன்பத்தை தருவது தான், நாம் கண்ணால் அதனை பார்க்காமல் இறந்தால் கூட) , இதனை அவர்களுக்கு எடுத்து கூறாமால் இருந்தால், நாம் அமைதியாக இருப்பது கூட பாவமாகும், மேலும் நாம் அவர்கள் மேல் அக்கரையில்லா அன்பற்றவர்களாக இருப்போம்
இந்த உண்மையை நாம் எடுத்து சொல்லியும், அவர்கள் திருந்தாவிட்டால், நமக்கு எந்த பாவமும் இல்லை. ஆனால் நாம் முயரசிைவிட்டு விட கூடாது . அதனால் இன்னும் இரண்டு மூன்று பேரை நாம் அழைத்து கொண்டு இன்னும் அதிகமாக பாவிகள் அவர்கள் பாவங்களை உணர்ந்து திருந்த வைக்க முயற்சி செய்தல் வேண்டும்
எல்லா முயற்சியும் தோல்வி அடைந்தாள், அப்புறம், நாம் தொடர வேண்டியதில்லை. நாம் இந்த முயற்சியிலிருந்து வெளியே செல்ல வில்லை. பாவிகள் தான் அவர்கள் வழியை தேர்ந்தெடுத்து விட்டார்கள். ஆனாலும், இயேசு எப்படி வரி தாண்டுவோரையும் , மற்றவர்களையும், எவ்வாறு அன்போடு நடந்து கொண்டார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அவர்களுக்காகவும் இயேசு மரணத்தை ஏற்று கொண்டார்.

© 2014 by Terry A. Modica