Friday, September 12, 2014

செப்டெம்பர் 14 2014 ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை

செப்டெம்பர் 14 2014 ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை
திருச்சிலுவையின் மகிமை விழா

Numbers 21:4b-9
Psalm 78:1bc-2, 34-38 (with 7b)
Philippians 2:6-11
John 3:13-17

யோவான் நற்செய்தி

13 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

(thanks to www.arulvakku.com)



இயேசு கடவுள், எனவே நாம் தாழ்மையுடன் அவர் முன் வணங்குதல் வேண்டும் இருந்தாலும் அவர் நம் முன் தாழ்ந்து பணிகிறார். இதனை இன்றைய இரண்டாவது வாசகம் நமக்கு விளக்கி சொல்கிறது.

நற்செய்தி வாசகம், இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தார் என்று கூறுகிறது . அதுவே கீழ் படிதல் ஆகும். விண்ணகத்தின் தூய்மையை விட்டு , அதன் சந்தோசத்தை விட்டு நீங்களோ நானோ வருவோமா? இங்கே உள்ள தப்பான ஆட்களுடன் பழகுவோமா ?


நமக்கு இயற்கையாகவே விண்ணகத்திற்கு செல்ல வேண்டும் என்ற வேட்கை உள்ளது. அது தான் நமது உண்மையான வீடு. உள்ளுணர்வு நமக்கு அதனை உணர்த்துகிறது. அதனால் தான், நமக்கு ஏதாவது ஒன்று தவறாக இருக்கும்பொழுது நாம் புகார் அளிக்கிறோம். அல்லது யாராவது ஒருவரிடம் குறை சொல்கிறோம். கடவுளிடம் " இறைவா இந்த சோதனையால், துன்பப்படுகிறேன், எனக்கு எப்பொழுது விடிவு வரும் ? “ (இதையே தான் இஸ்ரேயளர்கள் பாலை வனத்தில் கேட்டனர்) .கடவுளே இது எத்தனை துயரமானது என உங்களுக்கு தெரியவில்லை " என்று சொல்கிறோம்.
ஆனால், அந்த பாவத்தினால் தான், இஸ்ரேயலர்கள், ( எண்ணிக்கை 21: ) , அவ்வாறு புகார் அளிப்பது என்பது, நமது விண்ணக எதிர்ப்பார்ப்புகளை விட்டு விட்டு , இந்த பூமியின் தேவைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்கிறோம் என்று அர்த்தம் . இன்றைய பதிலுரை பாடலில், “கடவுளின் செயல்களை மறந்துவிடாதீர்கள் “ என சொல்கிறது
புகார் சொல்வது என்பது , நாம் அவரை மறந்து விட்டோம் என்று அர்த்தம்.

இயேசு ஏதாவது புகார் சொன்னாரா ? சில நேரங்களில் வருத்தம் அடைவார். ஆனால் ஒருபோது அவர் புகார் சொன்னதில்லை. அவரை அடித்த பொழுது கூட, ஆணியால் அடித்த பொழுது கூட , அவர் குறை கூறியதில்லை. அதற்கு பதிலாக அவர் அவர்களுக்காக ஜெபம் செய்தார். அவரின் முழுமையான அன்பினால், அவர் அவர்களுக்காக ஜெபித்தார். ஏனெனில், எந்த ஒரு தயக்கமும் இன்றி " உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். “ நமக்கு தெரியும்

இறைவா , தாழ்மையுடன் எனக்கு உதவி செய்து, என் புகார்களையும், கண்டித்த லையும் நிறுத்திவிடும்


© 2014 by Terry A. Modica 

No comments: