Saturday, September 6, 2014

செப்டம்பர் 7 2014 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 7 2014 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு
Ezekiel 33:7-9
Psalm 95:1-2, 6-9
Romans 13:8-10
Matthew 18:15-20

மத்தேயு நற்செய்தி

பாவம் செய்யும் சகோதரர்
(லூக் 17:3)
15 ' உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.16 இல்லையென்றால் ' இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும் ' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.19உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ' 
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, நீதிக்கும் பரிசுத்த மான விசயங்களுக்கு எதிராக நடக்கும் அனைத்தையும் நாம் எதிர்க்க வேண்டும், என்றும், பாவங்களிலிருந்து நாம் மற்றவர்களை மாற செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.
இப்படி பாவத்திற்கு எதிராக நாம் நடக்கிற பொழுது, கருணையோடும், இரக்கத்தோடும், நிபந்தனையற்ற அன்புடன் நடக்காவிடில் அதுவும் ஒரு பாவமாகும்.
இயேசு நமது சக கிறிஸ்தவர்களை பாவத்திலிருந்து நாம் நிறுத்த வேண்டும் என்று இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். நமது சக கிறிஸ்தவர் குழுவோடு இணைந்து, அவர்களின் ஆதரவோடும், ஜெபத்தொடும் நாம் இதில் பணியாற்ற வேண்டும் என்பதையும் அவர் அமக்கு காட்டுகிறார்.
முதலில், நாம் பாவிகளிடம் பேசுவோம். அவர்கள் மற்றவர்களையும், அவர்களையுமே துன்பபடுத்தி கொள்ளும்பொழுது (எல்லா பாவங்களும் துன்பத்தை தருவது தான், நாம் கண்ணால் அதனை பார்க்காமல் இறந்தால் கூட) , இதனை அவர்களுக்கு எடுத்து கூறாமால் இருந்தால், நாம் அமைதியாக இருப்பது கூட பாவமாகும், மேலும் நாம் அவர்கள் மேல் அக்கரையில்லா அன்பற்றவர்களாக இருப்போம்.
முதலில், நாம் பாவிகளிடம் பேசுவோம். அவர்கள் மற்றவர்களையும், அவர்களையுமே துன்பபடுத்தி கொள்ளும்பொழுது (எல்லா பாவங்களும் துன்பத்தை தருவது தான், நாம் கண்ணால் அதனை பார்க்காமல் இறந்தால் கூட) , இதனை அவர்களுக்கு எடுத்து கூறாமால் இருந்தால், நாம் அமைதியாக இருப்பது கூட பாவமாகும், மேலும் நாம் அவர்கள் மேல் அக்கரையில்லா அன்பற்றவர்களாக இருப்போம்
இந்த உண்மையை நாம் எடுத்து சொல்லியும், அவர்கள் திருந்தாவிட்டால், நமக்கு எந்த பாவமும் இல்லை. ஆனால் நாம் முயரசிைவிட்டு விட கூடாது . அதனால் இன்னும் இரண்டு மூன்று பேரை நாம் அழைத்து கொண்டு இன்னும் அதிகமாக பாவிகள் அவர்கள் பாவங்களை உணர்ந்து திருந்த வைக்க முயற்சி செய்தல் வேண்டும்
எல்லா முயற்சியும் தோல்வி அடைந்தாள், அப்புறம், நாம் தொடர வேண்டியதில்லை. நாம் இந்த முயற்சியிலிருந்து வெளியே செல்ல வில்லை. பாவிகள் தான் அவர்கள் வழியை தேர்ந்தெடுத்து விட்டார்கள். ஆனாலும், இயேசு எப்படி வரி தாண்டுவோரையும் , மற்றவர்களையும், எவ்வாறு அன்போடு நடந்து கொண்டார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அவர்களுக்காகவும் இயேசு மரணத்தை ஏற்று கொண்டார்.

© 2014 by Terry A. Modica 


No comments: