Friday, September 26, 2014

செப்டெம்பர் 28 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


செப்டெம்பர் 28 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Ezekiel 18:25-28
Psalm 25:4-5, 8-10, 14
Philippians 2:1-11
Matthew 21:28-32


மத்தேயு நற்செய்தி

இரு புதல்வர்கள் உவமை
28 மேலும் இயேசு' இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ' மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய் ' என்றார்.29 அவர் மறுமொழியாக, ' நான் போக விரும்பவில்லை ' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.30 அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ' நான் போகிறேன் ஐயா! ' என்றார்; ஆனால் போகவில்லை.31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்? ' என்று கேட்டார். அவர்கள் ' மூத்தவரே ' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம்' வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.32ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரி தண்டு வோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை 'என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, நம்மில் சிலருக்கு அதிர்ச்சியை கொடுப்பது ஆக இருக்கறது. ஆன்மீகத்தில் சரியாக இருந்தால் போதும் என்ற நினைப்போடு இருப்பவர்கள், சரியாக தந்தை கடவுளின் விருப்பத்தை செய்கிறோமா என்று நியாயமாக பரிசோதித்து பார்ப்பதில்லை. இயேசு வரி வசூலிப்பவரும் , விலை மகளிரும் பக்தியாய் இருப்பவர்களை விட இறையரசிற்கு முன்னே செல்வார்கள் என்று சொல்கிறார். (வரி தாண்டுபவர்களும், விலை மகளிரும் சமூகத்தில் மிகவும் கொடிய பாவம் என்று எல்லோராலும் சொல்லப்பட்டது )

அறிவியல் அறிஞர்கள் “ என்று சொல்லபடுபவர்களுக்கு இயேசு கேட்ட
கேள்விக்கு பதில் தெரியும் - கடவுளுக்கு அவர் விருப்பத்திற்கு ஆம் என்று சொல்ல தெரியும் - அதற்கு பதில் தெரிவதும், அதனை செய்வதும் தான் மோட்சத்திற்கும் , நரகத்திற்கு உள்ள வித்தியாசம் .

கடவுள் சரியான பதிலை எதிர்பார்க்கவில்லை , அதற்கான செயலை , அவர் விருப்பத்தினை நிறைவேற்றிட முயற்சிப்பதை எதிர்பார்க்கிறார். திருச்சபையின் போதனைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்று கடவுள் கேட்கவில்லை . ஆனால், அன்பினாலும், உற்சாகத்திலும் கீழ்படிந்து திருச்சபையின் நோக்கத்திற்காக இறை சேவை செய்வதே கடவுளின் விருப்பம்
ஒவ்வொரு ஞாயிறும் திருப்பலிக்கு செல்வதால் என்ன பயன் ? திருப்பலியை விட்டு வெளியில் பரிசுத்த வாழ்வில் அது உங்களை மாற்றுகிறதா? உங்களுக்கு தெரிந்து யாராவது திருப்பலிக்கு 'வரமாட்டேன்' என்று சொல்பவர்கள் உண்டா? அவர்கள் கடவுளிடம் உண்மையாக அன்பு கொண்டு, நல்ல செயல்கள் செய்கிறார்களா ? அவர்கள் இயேசுவிடம் கண்டிப்பாக சேர்வது நிச்சயம், திருப்பலிக்கு சென்று ஒன்றும் செய்யாதவர்களை விட முன்னமே அவர்கள் இயேசுவிடம் செல்வார்கள்.
கடவுள் நம்மிடம் இரண்டையும் செய்ய சொல்கிறார்: சரியான பதில் தெரிந்திருக்க வேண்டும், இறை சேவையையும் செய்ய வேண்டும். விசுவாசத்துடன் திருப்பலிக்கு செல்லுங்கள், அதன் பிறகு ,
மாற்றத்திற்கு செல்லுங்கள். கடவுளின் அழைத்தலுக்கு ஆம் என்று சொல்லி , கிறிஸ்துவோடு இணைந்து இவ்வுலகை இன்னும் நல்லதாக ஆக்குங்கள். நாம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவை அறிமுக படுத்துவோம்.

© 2014 by Terry A. Modica 



No comments: