Friday, November 14, 2014

நவம்பர் 16 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை


நவம்பர் 16 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 3 3 ம் ஞாயிறு
Proverbs 31:10-13, 19-20, 30-31
Ps 128:1-5
1 Thes 5:1-6
Matt 25:14-30

மத்தேயு நற்செய்தி

தாலந்து உவமை
(
லூக் 19:11 - 27)
14 ' விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.19 நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.20ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ' ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன் ' என்றார்.21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் ' என்றார்.22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ' ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் ' என்றார்.23 அவருடைய தலைவர் அவரிடம், ' நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் ' என்றார்.24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ' ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ' என்றார்.26 அதற்கு அவருடைய தலைவர், ' சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா?27அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் ' என்று கூறினார்.28 ' எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.29 ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்று அவர் கூறினார்.
(thanks to www.arulvakku.com)



நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே!

இன்றைய நற்செய்தி, கடவுள் நமக்கு கொடுத்த திறமையை
கொடைகளை புதைத்து விட கூடாது என்று நமக்கு அது. அப்படி புதைப்பவராக இருந்தால், நாம் சோம்பேறி பணியாளனாக இருக்கிறோம்


நாம் எல்லோரும் கண்டிப்பாக ஒரு திறமையாவது உபயோகிக்காமல் இருப்போம். இறையர்சிற்காக நாம் எவ்வளவோ செய்யலாம், ஆனால், நாம் சில நேரங்களில் நினைப்பது உண்டு, “எனக்கு இன்னும் திறமை தேவை" அல்லது "வேறு யாராவது இன்னும் நன்றாக செய்யலாம்" அல்லது கடவுள் இதனை நம்மிடம் கொடுத்திருக்க கூடாது என்றும் நாம் சொல்லலாம். “எனக்கு நேரமில்லை, தேவையான பணமில்லை, எப்படி செய்வது என்று தெரியவில்லை , உடல் நிலை சரியில்லை " என்றும் அல்லது , “நான் ஒய்வு பெற்று விட்டேன் , அதனால், எனது தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற போகிறேன் " என்றும் நாம் சொல்லலாம்

கடவுள் கொடுத்த எதனையும் வீனாக்குவதற்கு எந்த ஒரு மன்னிப்பும் கிடையாது . ஆனால் இது அடிக்கடி நம்மிடம் நடக்கிறது. திருச்சபைக்கு நமது திறமைகள் எவ்வளவு தேவை என்பதை நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. மேலும், நாம் எல்லோரும் சேர்ந்து கிறிஸ்துவின் இறையரசை கொண்டு செல்ல நமது திறமை தேவை என்பதை மறந்து விடுகிறோம்.

உங்கள் திறமைகளை , அன்பளிப்பை கடவுளுக்காக உபயோகிக்காமல் ஒதுக்கி தள்ளுவது எது ? எது தடுக்கிறது ? இப்போது உங்கள் நேரம் வந்து விட்டது. கடவுளின் திட்டத்தில் உங்கள் திறமைகளை உபயோகிக்க இது தான் நேரம்.


இறையரசில் ஒரு வித்தியாசத்தை கொண்டு வர நம்மில் போதுமான திறமை இருக்கிறது, ஏனெனில் அது கடவுளிடமிருந்து வருகிறது. நாம் அவரின் பணியாட்கள். அதனால் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதனை அவர் தீர்மானிப்பார். படுக்கையில் இருப்பவர்களால் கூட இறையரசிற்காக ஏதோ ஒன்று அவர்களின் சுற்றியுள்ள இடத்தில் ஏதோ ஒன்று செய்ய முடியும். அவர்களுக்கும் தெய்வீக காரியம் கடமை உள்ளது. பல நேரங்களில் இவ்வாறு இருப்பவர்கள், ஆற்றல் உடைய ஜெப ம் செய்பவர்களாக இருப்பார்கள் , இந்த உலகின் பல ஞானம் உடையவர்களாக இருப்பார்கள்.

உங்களுக்கு , யாராவது இந்த கேள்வியை கேட்டதுண்டா? : “கடவுள் இவ்வளவு நல்லவராக இருந்தும்,ஏன் சாத்தானின் செயல்கள் நடக்க அனுமத்திக்கிறார்? “ இதற்கு பதில் : கடவுள் ஒன்றும் இதனை அனுமதிக்கவில்லை, நாம் தான் அனுமதிக்கிறோம். கிறிஸ்துவின் உடலாக நாம் இந்த பூமியில் ஓம். அவரின் கைகளாக , குரலாக , அணைக்கும் கரங்களாக இருக்கிறோம். இயேசு உண்மையிலே இந்த உலகை மோட்சம் போல மாற்ற ஆசைபடுகிறார், ஆனால், நாம் அவர் கொடுத்த திறமைகளை புதைத்து விட்டு அதற்கு பல காரணம் சொல்லி விடுகிறோம் . அந்த திறமைகளால் நாம் இந்த உலகில் மிக பெரிய மாற்றத்தை உண்டு பண்ணலாம் , ஆனால் நாம் செய்யாமல் , சோம்பேறி
பணியாளன் போல் இருக்கிறோம்

© 2014 by Terry A. Modica


No comments: