Friday, February 27, 2015

மார்ச் 1 2015, ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச் 1 2015, ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக் காலத்தின் 2ம் ஞாயிறு
Gen 22:1-2, 9-13, 15-18
Ps 116:10, 15-19
Rom 8:31b-34
Mark 9:2-10


மாற்கு நற்செய்தி

இயேசு தோற்றம் மாறுதல்
(
மத் 17:1 - 13; லூக் 9:28 - 36)
2ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.3அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.4அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.5பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ' என்றார்.6தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.7அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ″ என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் என்று ஒரு குரல் ஒலித்தது.8உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.9அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர்,' மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது 'என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ' இறந்து உயிர்த்தெழுதல் ' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
(THANKS TO WWW.ARULVAKKU.COM)


மலை உச்சியில் உங்களுக்கு உள்ள அனுபவத்தை " நினைத்து பாருங்கள். அங்கே நடந்த முக்கியமான தருணம் என்ன ? அதன் மூலம் , உங்கள் வாழ்வில் ஏதாவது மாற்றம் உண்டானதா? அல்லது சாதாரண நிகழ்வாக முடிவுற்றதா ?

பைபிள் குறியிட்டில், மலை உச்சி என்பது கடவுளுக்கு அருகில் இருப்பதாக அர்த்தம். உங்கள் மலை உச்சி அனுபவம் கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றதா ?

இந்த தாபோர் மலை உச்சியில் அவரின் கடவுள் தன்மையை , நெருங்கிய நண்பர்களுக்கு காண்பித்தார். “உயர்ந்த மலை" என்று விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தாபோர் மலையோ அப்படி ஒன்றும் உயர்ந்த மலை கிடையாது. என்ன உயர்ந்த விஷயம் என்றால், அங்கே நடந்த நிகழ்வு தான் மிக பெரியது. ஏன்?

நமது ஆன்ம வாழ்வில் நடந்து முக்கியமான நிகழ்வுகள் நமக்கு சாதரணமாக இருந்ததாக நாம் நினைக்கலாம், ஆனால், அதுவும் இந்த மலை உச்சி அனுபவம் போல தான்.
மூன்று சீடர்களும் கிறிஸ்துவின் தோற்றம் மாறுதலை அருகே இருந்து பார்த்தவர்கள், அதனால் மிகவும் பயனடைந்தார்கள். ஏனெனில் ஒருநாள் அவர்கள் இவ்வுலகில் இறை சேவை செய்ய வேண்டும்.

தந்தை கடவுள் அவர்களிடம் "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" , நாம் இயேசுவை கேட்கும்பொழுது , நாமும் தோற்றம் மாறுகிறோம் .


தவக்காலம் என்பதும், இந்த மலை உச்சி அனுபவம் தான், நாம் இயேசுவை மலை உச்சிக்கு பின் சென்றோம் என்றால், நம்மிடம் உள்ள எல்லா இருளும் , அவரின் ஒளியால் எடுக்கப்பட்டு நாமும் ஒளிர்வோம்.
கிறிஸ்துவின் போதனைகளை நாம் அதிகம் கேட்டு , அதனை நம் அனுதின வாழ்வில் கடை பிடித்தோமானால், அதனை இறை சேவையில் ஈடுபடுத்தினால், நாம் கிறிஸ்துவை போல மாறுவோம், மேலும் அவரை போல மாற மாற, நமது வாழ்வு அவரது ஒளியில் மாறி, நம்மை சுற்றி உள்ள உலகை மாற்றுவோம்.


முதல் வாசகம் சொல்வது போல , ஆபிரகாம் அவரது மகனை கடவுளுக்காக விட்டு கொடுத்தார். கடவுள் தந்தை போல இயேசுவையும் நமக்காக விட்டு கொடுத்தார், அவரை நம்மிடமிருந்து பிரித்து வைக்கைவில்லை.

அதே போல, கிறஸ்துவ வாழ்வின் அணைத்து கடமைகளுக்கும் விசுவாசமாய் நாம் வாழும்பொழுது, கடவுள் மகனை நாம் மற்றவர்களிடம் பிடித்து வைத்திருக்க கூடாது. அவர்களுக்கு உதவியாகவோ, மனம் மாற்றத்தை கொண்டு வருவதிலோ , கருணையுடன் மற்றும், அவர்களின் கவலைகளை காது கொடுத்து கேட்பதிலும், , தாராள மனத்துடன் உதவி செய்வதிலும், அவர்களை மன்னிப்பதிலும், நாம் இயேசுவை அவர்களிடம் கொண்டு செல்கிறோம். நாம் கிறிஸ்துவின் கைகளாக, கால்களாக , அவரின் குரலாக இவ்வுலகில் இருக்கிறோம். இந்த உலகில், கிறிஸ்துவின் உடலாக இருக்கிறோம். மக்களின் ஜெபத்திற்கு நாம் பதிலாக இருக்கிறோம்.

கிறிஸ்துவின் அன்பை , அவரின் அன்பின் ஒளியை நம்மில் ஒளிர, நாம் ஞானஸ்நாணம் மூலம் அருள் பெற்றுள்ளோம். கிறிஸ்துவின் இவ்வுலக இறைசேவையை நாம் தொடர நாம் அருள் பெற்றுள்ளோம் மேலும் அது நம் கடமையும் கூட . தவக்காலத்தின் அனுபவங்கள், கிரிஸ்துவோடு நம்ம்மை இணைத்து இன்னும் மேலும், அவரின் இறைபணி தொடர ஆயுதம் ஆகுவோம்.


© 2015 by Terry A. Modica

No comments: