பிப்ரவரி 8
, 2015 ஞாயிறு
நற்செய்தி, மறையுரை
ஆண்டின் பொதுகால
5ம்
ஞாயிறு
Job
7:1-4, 6-7
Ps
147:1-6
1
Cor 9:16-19, 22-23
Mark
1:29-39
மாற்கு
நற்செய்தி
சீமோன்
பேதுருவின் மாமியார் குணமடைதலும்
இயேசு பலருக்குக் குணமளித்தலும்
(மத் 8:14 - 17; லூக் 4:38 - 41)
(மத் 8:14 - 17; லூக் 4:38 - 41)
29பின்பு
அவர்கள் தொழுகைக் கூடத்தை
விட்டு வெளியே வந்து யாக்கோபு,
யோவானுடன்
சீமோன்,
அந்திரேயா
ஆகியோரின் வீட்டிற்குள்
சென்றார்கள்.30சீமோனுடைய
மாமியார் காய்ச்சலாய்க்
கிடந்தார்.
உடனே
அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம்
சொன்னார்கள்.31இயேசு
அவரருகில் சென்று கையைப்
பிடித்து அவரைத் தூக்கினார்.
காய்ச்சல்
அவரை விட்டு நீங்கிற்று.
அவர்
அவர்களுக்குப் பணிவிடை
செய்தார்.32மாலை
வேளையில்,
கதிரவன்
மறையும் நேரத்தில் நோயாளர்கள்,
பேய்பிடித்தவர்கள்
அனைவரையும் மக்கள் அவரிடம்
கொண்டுவந்தார்கள்.33நகர்
முழுவதும் வீட்டு வாயில்முன்
கூடியிருந்தது.34பல்வேறு
பிணிகளால் வருந்திய பலரை
அவர் குணப்படுத்தினார்.
பல
பேய்களையும் ஓட்டினார்;
அந்தப்
பேய்கள் அவரை அறிந்திருந்ததால்
அவற்றை அவர் பேசவிடவில்லை.
ஊர்கள்
தோறும் நற்செய்தி முழக்கம்
( லூக் 4:42 - 44)
( லூக் 4:42 - 44)
35இயேசு
விடியற்காலைக் கருக்கலில்
எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப்
புறப்பட்டுச் சென்றார்.
அங்கே
அவர் இறைவனிடம் வேண்டிக்
கொண்டிருந்தார்.36சீமோனும்
அவருடன் இருந்தவர்களும்
அவரைத் தேடிச் சென்றார்கள்.37அவரைக்
கண்டதும்,
' எல்லாரும்
உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
'
என்றார்கள்.38அதற்கு
அவர்,'
நாம்
அடுத்த ஊர்களுக்குப் போவோம்,
வாருங்கள்.
அங்கும்
நான் நற்செய்தியைப் பறைசாற்ற
வேண்டும்;
ஏனெனில்
இதற்காகவே நான் வந்திருக்கிறேன்
'என்று
சொன்னார்.39பின்பு
அவர் கலிலேய நாடுமுழுவதும்
சென்று அவர்களுடைய தொழுகைக்
கூடங்களில் நற்செய்தியைப்
பறைசாற்றி பேய்களை ஓட்டி
வந்தார்.
(thanks to www.arulvakku.com)
(thanks to www.arulvakku.com)
இன்றைய
நற்செய்தியில்,
புனித
பவுலின் முதல் கடிதத்தில்
(கொரிந்திரியருக்கு),
நான்
என்ன இறைனை பணி செய்கிறேனோ
அதனையே சொல்வது போல் இருக்கிறது.
நான்
நற்செய்தியை அறிவிக்கிறேன்
என்றால்,
அதனால்,
நான்
என்னையே புகசவேண்டும் என்பது
இல்லை,
ஏனெனில்,
இதனை கட்டாயம்
செய்ய வேண்டும் என்று அவசியமில்லை,
ஆனால்,
நான் இதனை
செய்யவில்லை என்றால்,
எனக்கு மிகுந்த
மன வருத்தத்தை தரும்.
மனதார
நான் இதனை செய்தால் ,
எனக்கு வெகுமதி
கிடைக்கும்.
ஆனால்,
ஏனோ கடைமைக்காக
இதனை செய்தால், எனக்கு
வெகுமதி கிடைக்குமா?
நான்
நற்செய்தியை எல்லோரிடம்
பகிர்ந்து கொள்ளும்பொழுது
, நாம்
இலவசமாக இதனை செய்கிறேன்
அதனால், எல்லோரும்
பயன் அடைகின்றனர்.
புனித
பவுல் இதற்கு வசூல் செய்தால்
அதில் ஒன்றும் தவறு என்று
சொல்லவில்லை. இயேசுவே
கூட வேலையாட்கள் அவர்களுக்கு
தகுந்த கூலி கிடைக்கவேண்டும்
என்று சொல்கிறார். (லூக்கா
10:7
). ஆனால் புனித
பவுலுக்கு தெரியும்,
நல்ல இறை
பணியாளானாக இருப்பது கடவுள்
நமக்கு கொடுத்த திறமைகளை
உபயோகிப்பது
தான் .
Good News Reflections மூலம்,
எவ்வித வசூல்
இல்லாமல் நான் இந்த சேவை செய்ய
முடிவதை நினைத்து அக மகிழ்கின்றேன்.
ஆயிரக்கணக்கான
மக்கள் இதன் மூலம் பயன்
பெறுகின்றனர். இந்த
இறை சேவையில் தாராள மனது கொண்ட
பலர் உதவி புரிகின்றனர்.
பலர் நன்கொடை
கொடுக்கின்றனர் - அதனால்
இந்த இறைசேவை நலமாக நடந்து
கொண்டிருக்கிறது
தந்தை
Henri Nouwen “நன்கொடை
வசூலித்தல், என்பது,
நாம் எதனை
நம்புகிறோமோ, நமது
நோக்கத்திலும்,
கொள்கையிலும்
அவர்களையும் நம்மோடு இணைய
அழைக்கிறோம்" நம்
இணைய தளத்தில், ஒவ்வொரு
இ-மெயில்
மூலம் நாம் நன்கொடை கொடுக்க
, அவர்களையும்
நம் இறைசெவையில் அழைக்கிறோம்.
அவர்களுக்கு
ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம்.
நமது குழுவில்
அங்கத்தினராக சேர அழைக்கிறோம்.
இப்பொழுது
இந்த இறைசேவையில் என்னோடு
கலந்து கொண்ட , அவர்கள்
பொருளையும் உழைப்பையும்
செலவிட்ட அனைவருக்கும் நான்
நன்றி சொல்கிறேன்.
மிக்க நன்றி!
கோவிலில்
உண்டியல் நம் முன்னே வரும்
பொழுது, அல்லது
குருவானவர் நன்கொடை கேட்கும்
பொழுதும், நமக்கு
கோவிலின் வளர்ச்சியில் நாம்
பங்கு கொள்ள நமக்கு கிடைக்கும்
வாய்ப்பு. எவ்வளவு
தாரளமாக நாம் இதில் பங்கு
கொள்கிறோம். ?
இந்த
நவீன உலகில், கிறிஸ்துவின்
இறை பணியை நாம் தொடர வேண்டும்.
எந்த ஒரு
கிறிஸ்தவனும், இந்த
இறைபணியை தொடராதவன் சோம்பேறி,
அல்லது சுய
லாபத்திற்கான விசுவாசியாக
இருப்பவரும் தான் . உங்கள்
திறமைகளை , ஞானத்தையும்,
அறிவையும்,
இரக்கத்தையும்
மற்றவர்களின் விசுவாசத்திற்காக
நாம் உபயோகபடுத்தல் வேண்டும்.
உடனடியான
சந்தோசம் என்ன என்றால்,
கிறிஸ்துவோடு
இணைந்து நாம் இறைசேவை ஆற்றுகிறோம்.
இன்றைய
நற்செய்தியில், இராயப்பரின்
மாமியார் எவ்வளவு தாராள
குணத்துடன் அவர்களுக்கு
விருந்து உபசரித்தார் என்று
காட்டுகிறது . இயேசுவின்
உறுதியான மனப்பான்மையை ,
நற்செய்தி
அறிவிப்பதில் , அவர்
உறுதியோடு இருந்தார்.
இது
இரண்டுமே நல்ல பணியாளருக்கு
உரிய எடுத்து காட்டு ஆகும்.
எல்லா திறமைகளும்
, பண
வருமானங்களும், சொத்துக்களும்,
கடவுளிடமிருந்து
வந்தவை, அதனை
மற்றவர்களுக்கும் பகிர்ந்திட
வேண்டும்
©
2015 by Terry A. Modica
No comments:
Post a Comment