Friday, March 27, 2015

மார்ச் 29 ,2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மார்ச் 29 ,2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
குருத்து ஞாயிறு

Readings for the Entrance Procession:
Mark 11:1-10 or John 12:12-16
Psalm 24 & Psalm 47
Readings for Mass:
Isaiah 50:4-7
Ps 22:8-9, 17-20, 23-24
Phil 2:6-11

Mark 14:1--15:47



குருத்து ஞாயிறான இன்று இயேசுவின் திருப்பாடுகளை பார்க்கும் முன்பு - இயேசுவின் வேதனைகள், நமக்காக வலியை ஏற்று கொண்டு, சிலுவை மரணம் அடைந்ததை - நம் மேல் உள்ள அளவில்லா அன்பினால் சிலுவை மரணம் அடைந்ததை பார்க்கும் முன்பு - இயேசுவின் மேல் அளவில்லா அன்பு கொண்டு , அவருக்கு வாசனை தைலத்தை பூசிய பெண்ணை பற்றி பார்ப்போம்

அந்த நாட்களில் இப்பொழுது உள்ளது போல டியோடரண்ட் அல்லது பாடி ஸ்ப்ரே கிடையாது. சூடான பருவ காலங்களில் குளிக்க கூட சரியான பாத் ரும் வசதி கிடையாது. அதனால் மக்கள் வாசனை திரவியங்களை உருவாக்கி உபயோகித்தனர். வாசனை மூலிகைகள் , வாசனை எண்ணெய் கலந்து , ஜாடியில் ஊற்றி அதனை நன்றாக ஊற வைத்தனர். எவ்வளவு நாள் ஊற வைத்தார்களோ அந்த அளவிற்கு அதன் வாசனையும் , நறுமணமும் , மதிப்பும் உயரும்.


நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல, இயேசுவிற்கு அளிக்கப்பட்ட வாசனை திரவியம் மிக விலை உயர்ந்ததாய் இருக்கும், அதனால் அதிக நாள் அதனை ஊற .

நாம் யாருக்காவது அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், கடைக்கு சென்று புதிய பொருளை தான் வாங்குவோம்.? ஆனால், நம்மிடம் பல காலமாக உள்ள மிக உயர்ந்த மதிப்புடைய பொருளை , மற்றவர்களுக்கு பரிசாக கொடுக்கும் பொழுது, மிகப் பெரிய தியாகம் செய்வதற்கும் சமம் ஆகும்.


அதே போல ஏதாவது ஒரு பொருளை மிக அதிக நாட்களாக, மிகவும் மதிப்பு உடையதாகவும் வைத்திருக்கிறீர்கள் ?
அந்த பொருளை மற்றவர்களுக்கு கொடுப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா ? நம்மில் பலருக்கு அதனை கொடுக்க இயலாது, அப்படி கொடுப்பதாக இருந்தால், அதனை பெறுகிறவர் மேல் நாம் அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருக்கிறோம் என்று அர்த்தம். அவர்கள் மேல் உள்ள அன்பினால் மட்டுமே இது போல நடக்கும்


இயேசுவின் மேல் நீங்கள் எவ்வளவு அன்பு வைத்து உள்ளீர்கள்? இயேசு உங்களிடமிருந்து எதனை பெற்றால், அவர் உங்கள் மேல் பாராட்டுகள் தருவார், இயேசுவின் மேல் உள்ள அன்பினால், அதனை கொடுக்க நீங்கள் தயாரா ? அவ்வளவு அன்பு இயேசுவின் மேல் உங்களுக்கு உள்ளதா ?

இதனையே வேறு மாதிரியாக சொல்வதானால், உங்கள் ஜாடியில் என்ன இருக்கிறது. அதனை இயேசுவிற்கு அளிக்க தாராள மனதுடன் இருக்கிறீர்களா?
இயேசு உங்களுக்கு தாராளாமாக , அன்புடன் உங்களுக்கு கொடுத்ததை நினைத்து பாருங்கள். இந்த வாரம் முழுதும் அதனை நினைத்து பாருங்கள் , பெரிய வியாழன், பெரிய வெள்ளி, பெரிய சனியன்று கல்லறையில் இருக்கும் இயேசுவை நினைத்து பாருங்கள்.
அதன பிறகு, மீண்டும் நினைத்து பாருங்கள், உங்களிடம் உள்ள மிக மதிப்பு வாய்ந்த எதனை நீங்கள் இயேசுவிற்கு கொடுக்க முடியும், அதனை பெற்று கொண்டு , இயேசு கண்டிப்பாக பெருமிதம் அடைவார் , அதனை அடுத்த வார இறுதிக்குள் , நீங்கள் கொடுங்கள், அவர் உங்களுக்கு மிக பெரியவெற்றியை ஈஸ்டர் அன்று தருவார்.




© 2015 by Terry A. Modica

Friday, March 20, 2015

மார்ச் 22 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மார்ச் 22 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலம் 5ம் . ஞாயிறு

Jer 31:31-34
Ps 51:3-4, 12-15
Heb 5:7-9
John 12:20-33

யோவான் நற்செய்தி


கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புதல்
20வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.21இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, ' ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் ' என்று கேட்டுக் கொண்டார்கள்.22பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.23இயேசு அவர்களைப் பார்த்து,' மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.24கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.25தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.26எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் 'என்றார்.
மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும்
27மேலும் இயேசு,' இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ' தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ' என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.28தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும் 'என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், ' மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன் ' என்று ஒலித்தது.29அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, ' அது இடிமுழக்கம் ' என்றனர். வேறு சிலர், ' அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு ' என்றனர்.30இயேசு அவர்களைப் பார்த்து,' இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.31இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.32நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன் 'என்றார்.33தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
(thanks to www.arulvakku.com)


கடவுளை விசுவசித்து, அவர் மேல் எப்பொழுதும் நம்பிக்கை கொள்ள நாம் ஆசைபடுவதும்,இயேசு நம்மை எங்கு அழைத்து சென்றாலும் அவர் பின் செல்ல தயாராய் இருப்பதும், அதே வேளையில் , இந்த ஆசைக்கு ஒரு ஒரு சில இடர்பாடுகள் ஏற்பட்டால், அது ஒன்றும் பாவம் இல்லை.

ஆம் , நமது வாழ்வில் உள்ள முக்கியமானவைகளை இழப்பதற்கு தயாராய் இருக்கிறோம். (நம் சொந்த நிகழ்ச்சிகள், நமது சொந்த ஆசைகள், நமக்கான நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என நாமாக முடிவு செய்வது, இன்னும் பல ) இதன் முலம் நாம் கிறிஸ்துவோடு இணைந்து , அவரின் இறைசெவையின் நோக்கத்தோடு இணைகிறோம். நம் சொந்த இழப்பை இழப்பாக கருத வேண்டியதில்லை.


இன்றைய நற்செய்தியில், இயேசு அவரின் உயிர் தியாகத்தை நினைத்து கலக்கமுற்றார் என்பதை பார்க்கிறோம். ஆமாம், இயேசுவே கலக்கமுற்றார்! கடவுள் அவரை மகிமை படுத்தினார்.

இயேசு இந்த உலகத்திற்கு வந்து, கடவுளின் வழிகள், அவரின் அன்பையும் நமக்கு காட்டி, நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்ல வந்தார். இப்போது, நாம், அவரை பின் பற்றுபவர்களாக , கடவுளின் வழியை நாம் இந்த உலகிற்கு சொல்ல அழைக்கப்பட்டிருக்கிறோம், இது நம் கடமையாகும், அருட்சாதனங்கள் முலம் நாம் தயார் படுத்த பட்டிருக்கிறோம். கடவுளின் அன்பையும், கடவுளின் வழியையும், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நாம் வெளிப்படுத்த வேண்டும். அதன் முலம் இயேசு அவர்களை மோட்சத்திற்கு அழைத்து செல்ல முடியும் . இது தான் நமக்கும் குருவானவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள இறை சேவை ஆகும்.

ஞானஸ்நாணம் திருவருட்சாதனம் நம்மை இறைபணி அழைப்பிற்கு முதல் முயற்சியாக / அழைப்பாக . இருக்கிறது. உறுதி பூசுதல் நம்மை இறைபணி செய்ய உத்தரவிடுகிறது. பாவ சங்கிர்த்தனம், இதனை இன்னும் சரியாக செய்ய நம்மை தயார் படுத்துகிறது. திருமணமும், பரிசுத்த தளங்களும் நமக்கு இறைசேவை சரி படுத்தி கொள்ள வாய்ப்பு கொடுக்கிறது. நோயாளிகளை மந்திரிப்பது, கிறிஸ்துவின் இரக்கத்தை நாம் சாட்சியாக நோயிலும் நாம் சொல்ல வாய்ப்பாக அமைகிரது. திவ்ய நற்கருணை இயேசுவின் கருணையிலும், இரக்கத்திலும் , சிலுவை பாடுகளிலும் நம்மை முழுமையாக இணைக்கிறது. நாம் செய்ய வேண்டிய இறை சேவையிலும் நம்மை இணைக்கிறது.

நம் அணு தின இறைசேவை : இயேசு மற்றவர்களை அன்பு செய்வது போல, நாம் மற்றவர்களை அன்பு செய்வது, இயேசு அவர்களுக்கு என்ன செய்வாரோ அதனையே நாமும் செய்வது, நற்செய்தியை அறிவித்து இறைசெவையை தொடர்வோம்.

இயேசுவை மாட்சிமை செய்தது போல , தந்தை கடவுள் நம்மை மாட்சிமைபடுத்துவார் . இரக்கத்துடன் , வெகுமதியுடனும், அவரின் ஏற்புடனும் நாம் மகிமைபடுத்துவார்

நாம் எதிர் நோக்கும் சவால்களால், சில நேரங்களில் கலக்கம் அடையலாம், ஆனால் அதனை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை. கடவுள் நம்மை ஒவ்வவொரு முறையும் எழ செய்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிலுவைக்கு பின் மீட்பு எப்பொழுது உண்டு

© 2015 by Terry A. Modica




Friday, March 13, 2015

மார்ச் 15 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 15 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 5ம் ஞாயிறு
2 Chron 36:14-16, 19-23
Ps 137:1-6
Eph 2:4-10
John 3:14-21

யோவான் நற்செய்தி

14பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.15அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.16தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.19ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது.20தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.21உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

(thanks to www.arulvakku.com)

நாம் என் இருளில் ஒளிந்து கொள்கிறோம்? நாம் என் நமது பாவங்களை மறைத்து கொள்கிறோம்? அதனை திறந்த மனதுடன் சொல்லி, பாவ சங்கீர்த்தனம் செய்ய முயல்வதில்லை ?

பாவசங்கிர்த்தனத்தில் இயேசு தான் நம்மை சந்திக்கிறார், குருவின் மூலமாக நம்மை சந்திக்கிறார். இன்றைய நற்செய்தியில்,"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல " என்று இயேசு நமக்கு உறுதியுடன் சொல்கிறார். நமது பாவத்தை ஒளியில் கொண்டு வருவது நமக்கு நன்மை தான். பாதுகாப்பானது கூ

எனினும், நாம் பாவ சங்கிர்த்தனம் செல்ல விரும்புவதில்லை, நமது குற்ற உணர்வு, நம்மை இன்னும் இருளுக்கு அழைத்து செல்லும், நம்மை இன்னும் பயத்திற்கும், யாரும் நம்மை அன்பு செய்யவில்லை என்ற குற்ற உணர்வும், நம்மை சூழ்ந்து கொள்ளும். நம்மை நாமே மன்னிப்பதில்லை.

குற்ற உணர்வு, மனம் திருந்தவும், மாற்றத்திற்கும் நம்மை இட்டு செல்லும். நம்மை உற்சாகபடுத்தும். ஆனால், நாம் நம்மையே குறைத்து மதிப்பிடுவதால், நாம் நமக்கு மன்னிப்பு பெற தகுதியில்லாதவன் என்று நினைத்து கொள்கிறோம். நமக்கு அவமானம் ஏற்படுகிறது. இந்த அவமானம், நம்மை இன்னும் பாவத்தின் உண்மையை அறிந்து கொள்ள . தடுக்கிறது.


எனினும், கடவுளை போலவே உள்ள நாம் குறைவானவர்கள் இல்லை. கடவுள் உங்களுள் உள்ள திறமையை பார்க்கிறார். உங்கள் அழகை , வெகுமதியான உங்கள் குணங்களை பார்க்கிறார். அவர் உங்களிடம், உங்களுக்கு பாவ மன்னிப்பு உண்டு என்று சொல்கிறார். உங்கள் அவமானத்தை சந்தோசமாக மாற்ற விரும்புகிறார். மனம் மாறுவதற்கு எது தடையாக உள்ளது ? உங்களை சூழ்ந்துள்ள தாழ்வு எண்ணங்களை மாற்ற குருவானவரோ அல்லது சைக்காலஜிஸ்டு உதவலாம் பாவ சங்கிர்த்தனத்திற்கு உங்களை அழைத்து செல்ல எந்த ஒரு வாய்ப்பும், உங்களை பாவங்கலில் இருந்து மீட்பு ஆரம்பமாகிறது.

உங்கள் பாவங்களில் இருந்து உங்களை குணமாக்கும் இயேசு, உங்களுக்கு மன்னிப்பையும் , இரக்கத்தையும் , நிபந்தனையற்ற அன்பையும் , குருவானவர் முலம் உங்களுக்கு தருகிறார்.

"உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். “
என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். அவர்குள்ளு மீட்பு உண்டு. நாம் நமது பாவன்ன்களை ஏற்று கொண்டு, கிறிஸ்துவின் ஊழி யர்களிடம் நாம் நம் பாவங்களை முறையிடும் பொழுது, இயேசு நம்மை மீட்பார். குருவானவர் குரலின் மூலம் இயேசு நமக்கு மீட்பு கொடுக்கிறார். மேலும், அதே பாவத்தை நாம் மீண்டும் யாமல் இருக்க இயேசு நமக்கு ஆற்றலை கொடுக்கிறார்.

ஏன் இன்னும் துன்பத்தோடு இருக்கிறீர்கள் ? இருளில் இன்னும் பயத்தோடு இருக்கிறிர்கள் ? இயேசு உங்களை மீட்க வந்துள்ளார். !

© 2014 by Terry A. Modica


Friday, March 6, 2015

பிப்ரவரி 8 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை

பிப்ரவரி 8 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு

Ex 20:1-17
Ps 19:8-11
1 Cor 1:22-25
John 2:13-25

யோவான் நற்செய்தி

கோவிலைத் தூய்மைப்படுத்துதல்
(
மத் 21:12 - 17; மாற் 11:15 - 17; லூக் 19:45 - 46)
13யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;14கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;15அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.16அவர் புறா விற்பவர்களிடம்,' இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் 'என்று கூறினார்.17அப்போது அவருடைய சீடர்கள். ' உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.18யூதர்கள் அவரைப் பார்த்து, ' இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? ' என்று கேட்டார்கள்.19இயேசு மறுமொழியாக அவர்களிடம்,' இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் 'என்றார்.20அப்போது யூதர்கள், ' இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ? ' என்று கேட்டார்கள்.21ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.22அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
இயேசு அனைவரையும் அறிபவர்
23பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் .24ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும்.25மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

(thanks to www.arulvakku.com)

இயேசு, அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தவர்களை இயேசு இன்னும் நம்பிவிடவில்லை. இதனை தான் இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்து காட்டுகிறது. மனித மன அளவில், விசுவாசம் கொள்பவர்களை கொண்டு இயேசுவிற்கு சாட்சியம் கொடுக்க வேண்டும் என்பதை இயேசு விரும்பியதில்லை.

அரும் செயல்களால் நம்பிக்கை கொள்வது மனிதனின் இயல்பான செயல் ஒன்று: நாம் மனிதனாக காணும் அரும் செயல்களையும், தொட்டு உணர்வதாலும், நாம் அதிக நம்பிக்கை கொள்கிறோம். நம் கண்ணுக்கு தெரியாத ஒன்றை , கடவுளின் வார்த்தையை கேட்க முடியாத ஒன்றை நாம் அந்த அளவிற்கு நம்புவதில்லை. இது மாதிரியான விசுவாசம் கொள்வது, இயற்கையை தாண்டியது அல்ல. ஆனால் கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்.


நாம் கடவுளிடம் வேண்டி , ஜெபித்து , மீண்டும் மீண்டும் அவரிடம் கேட்டு, ஒன்றும், அவர் செய்ய வில்ல என்றால், நம் விசுவாசம் என்ன ஆகும். இது மாதிரியான ஸூழ் நிலைகளில் நாம் நடந்து கொள்ளும் விதம், நாம் இவ்வுலக குணங்களுடன் நடந்து கொள்கிறோம். ஆனால் தெய்வீக வாழ்வு இதிலிருந்து இவ்வுலக இயற்கை நியதியிலிருந்து மாறுபட்டது.


இயேசுவுக்கு அவர் மனிதனாக இருப்பதே முக்கியமான சான்று ஆகும், ஆனால் மிக விரைவில் அதுவும் மேலே எடுத்து கொள்ள படும். சில நேரங்களில் இயேசு நம் முன்பு வந்து நம் காது கேட்க பேச மட்டாரா? என்று நாம் ஆசைபடுவது உண்டு. அப்போது நாம் இன்னும் பலமாக விசுவாசம் கொள்வோம்.

அதனால், நாம் விசுவாசம் கொள்வது : நமது ஜெபத்திற்கு கிடைக்கும் பதில், அன்பில் நமக்கு கிடைக்கும் சாட்சியம், நம் மனதில் எழும் அமைதியும், சந்தோசமும், மற்றும் பல, அதன மூலம், நாம் அதிக விசுவாசம் கொள்கிறோம். ஆனால் சோதனையிலும், கடும் கடி னமான
காலங்ககளும் நம்மை என்ன செய்கிறது ? நமது விசுவாசம் என்ன ஆனது ? தொடர்ந்து நாம் கடவுளின் மேல் விசுவாசத்துடன் அவரை தொடர்கிறோமோ ?

இதில் வெற்றி கொள்ள, நாம் இயற்கை மீறிய விசுவாசம் கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் தெய்வீகத்தில் நாம் இணைந்து , அவரின் விசுவாசத்தோடு இணைகிறோம். அதன் பிறகு, நமக்கு எந்த சான்றும் அடையாளங்களும் தேவையில்லை. அவரை முழுமையாக
நம்புவோம்.

இதனை அடுத்த முறை இயேசுவை நற்கருணையில் வாங்கும் போது நினைவில் கொள்ளுங்கள். அவரது உடலை மட்டும் நீங்கள் உன்ன வில்லை. அவரின் தெய்விகத்தொடு ஒன்று சேர்கிறோம். அவர் உங்களோடு சேர்கிறார். இதனை நீங்கள் முழுமையான நம்பினால், கண்டிப்பாக உங்களுள் அரும் செயல்களும் நிகழும். அது மட்டும் அல்ல, அவர் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் அன்பளிப்பு இது மட்டும் அல்ல,
அவர் உங்களிடம் அவரிடம் உள்ள அத்தனையும் தர ஆசையுடன் உள்ளார்.

© 2015 by Terry A. Modica