Friday, March 13, 2015

மார்ச் 15 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 15 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 5ம் ஞாயிறு
2 Chron 36:14-16, 19-23
Ps 137:1-6
Eph 2:4-10
John 3:14-21

யோவான் நற்செய்தி

14பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.15அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.16தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.19ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது.20தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.21உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

(thanks to www.arulvakku.com)

நாம் என் இருளில் ஒளிந்து கொள்கிறோம்? நாம் என் நமது பாவங்களை மறைத்து கொள்கிறோம்? அதனை திறந்த மனதுடன் சொல்லி, பாவ சங்கீர்த்தனம் செய்ய முயல்வதில்லை ?

பாவசங்கிர்த்தனத்தில் இயேசு தான் நம்மை சந்திக்கிறார், குருவின் மூலமாக நம்மை சந்திக்கிறார். இன்றைய நற்செய்தியில்,"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல " என்று இயேசு நமக்கு உறுதியுடன் சொல்கிறார். நமது பாவத்தை ஒளியில் கொண்டு வருவது நமக்கு நன்மை தான். பாதுகாப்பானது கூ

எனினும், நாம் பாவ சங்கிர்த்தனம் செல்ல விரும்புவதில்லை, நமது குற்ற உணர்வு, நம்மை இன்னும் இருளுக்கு அழைத்து செல்லும், நம்மை இன்னும் பயத்திற்கும், யாரும் நம்மை அன்பு செய்யவில்லை என்ற குற்ற உணர்வும், நம்மை சூழ்ந்து கொள்ளும். நம்மை நாமே மன்னிப்பதில்லை.

குற்ற உணர்வு, மனம் திருந்தவும், மாற்றத்திற்கும் நம்மை இட்டு செல்லும். நம்மை உற்சாகபடுத்தும். ஆனால், நாம் நம்மையே குறைத்து மதிப்பிடுவதால், நாம் நமக்கு மன்னிப்பு பெற தகுதியில்லாதவன் என்று நினைத்து கொள்கிறோம். நமக்கு அவமானம் ஏற்படுகிறது. இந்த அவமானம், நம்மை இன்னும் பாவத்தின் உண்மையை அறிந்து கொள்ள . தடுக்கிறது.


எனினும், கடவுளை போலவே உள்ள நாம் குறைவானவர்கள் இல்லை. கடவுள் உங்களுள் உள்ள திறமையை பார்க்கிறார். உங்கள் அழகை , வெகுமதியான உங்கள் குணங்களை பார்க்கிறார். அவர் உங்களிடம், உங்களுக்கு பாவ மன்னிப்பு உண்டு என்று சொல்கிறார். உங்கள் அவமானத்தை சந்தோசமாக மாற்ற விரும்புகிறார். மனம் மாறுவதற்கு எது தடையாக உள்ளது ? உங்களை சூழ்ந்துள்ள தாழ்வு எண்ணங்களை மாற்ற குருவானவரோ அல்லது சைக்காலஜிஸ்டு உதவலாம் பாவ சங்கிர்த்தனத்திற்கு உங்களை அழைத்து செல்ல எந்த ஒரு வாய்ப்பும், உங்களை பாவங்கலில் இருந்து மீட்பு ஆரம்பமாகிறது.

உங்கள் பாவங்களில் இருந்து உங்களை குணமாக்கும் இயேசு, உங்களுக்கு மன்னிப்பையும் , இரக்கத்தையும் , நிபந்தனையற்ற அன்பையும் , குருவானவர் முலம் உங்களுக்கு தருகிறார்.

"உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். “
என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். அவர்குள்ளு மீட்பு உண்டு. நாம் நமது பாவன்ன்களை ஏற்று கொண்டு, கிறிஸ்துவின் ஊழி யர்களிடம் நாம் நம் பாவங்களை முறையிடும் பொழுது, இயேசு நம்மை மீட்பார். குருவானவர் குரலின் மூலம் இயேசு நமக்கு மீட்பு கொடுக்கிறார். மேலும், அதே பாவத்தை நாம் மீண்டும் யாமல் இருக்க இயேசு நமக்கு ஆற்றலை கொடுக்கிறார்.

ஏன் இன்னும் துன்பத்தோடு இருக்கிறீர்கள் ? இருளில் இன்னும் பயத்தோடு இருக்கிறிர்கள் ? இயேசு உங்களை மீட்க வந்துள்ளார். !

© 2014 by Terry A. Modica


No comments: