Saturday, October 31, 2015

நவம்பர் 1 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


நவம்பர் 1 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 31ம் ஞாயிறு
அனைத்து புனிதர்களின் பெருவிழா
Revelations 7:2-4, 9-14
Ps 24:1-6
1 John 3:1-3
Matthew 5:1-12a

மத்தேயு நற்செய்தி
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமரஅவருடைய சீடர் அவர் அருகே வந்தனர்.
அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
``ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
துயருறுவோர் பேறுபெற்றோர்ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
கனிவுடையோர் பேறுபெற்றோர்ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்துதுன்புறுத்திஉங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.''

உங்களுள் ஒரு புனிதர் இருக்கிறார்
நீங்கள் ஒரு புனிதர். புனிதர் என்பவர், ஒன்று மோட்சத்தில் இருக்கவேண்டும், அல்லது மோட்சத்திற்கு சென்று கொண்டிருக்க வேண்டும். "புனிதர்களின் சமூத பிரயோசன்னத்தை விசுவசிக்கிறேன் " என்று விசுவாச பிரமாணத்தில் சொல்கிறோம். அதில் உங்களையும் சேர்த்து தான் சொல்கிறிர்கள். நாம் அனைவருமே கிறிஸ்துவை பின் செல்பவர்கள் தான் .
கிறிஸ்துவை பின் செல்பவர்களாக, பாவத்தின் சக்தியிலிருந்து நாம் மீட்கப்பட்டு விட்டோம் . நாம் புனிதர்களாக மிண்டும் பிறந்து உள்ளோம். பாவம் நம் மேல் இப்போது இல்லை. ஆனால் தினமும் நாம் பாவம் செய்கிறோம். நமது புனித வாழ்வை நாம் இன்னும் சரிபடுத்தி கொள்ளவில்லை. அதன் முலம் நாம் பரிசுத்த வாழ்வில் வளரலாம். ஒவ்வொரு நாளும் கடவுள் நம்மை எப்படி புனிதமாக படைத்தாரோ அதே போல நாம் வளரலாம். அது தான் இந்த உலக புனித வாழ்வு.
இன்றைய முதல் வாசகத்தை பாருங்கள், மிக பெரிய ஜெப கூட்டம் நடப்பது நாம் பார்க்க முடியும். ஆனால் அது ஒன்றும் இவ்வுலக வாழ்வுக்கு பிறகு நடப்பதில்லை. நீங்கள் கடவுளை உற்சாகத்தோடு துதிக்கும் பொழுது அதே சமூகத்துடன் நாம் இணைந்து கடவுளை வணங்குகிறோம். ஒவ்வொரு முறையும் நாம் கடவுளை புகழ்ந்து போற்றும் பொழுது , நாம் புனிதர்களின் சமுகத்தில் இணைகிறோம். மோட்சத்தில் உள்ளவர்களுடன் நாமும் இணைகிறோம்.
பாவ சங்கிர்த்தனத்தில் , நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாமும், மோட்சத்தில் உள்ளவர்களுடன் இணைகிறோம். நாம் மீண்டும் பாவம் செய்யாதவரை , நாம் கடவுளின் மலையில் இருக்கிறோம், பரிசுத்த மான இடத்தில் நின்று கொண்டு இருக்கிறோம், ஏனெனில், நமது கைகள் பாவமில்லாதவை, நமது இருதயம் சுத்த மானவை, அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: என்று பதிலுரை பாடலில் நாம் சொல்வது போல நாம் இருக்கிறோம்.
அதே போல இந்த இணைப்பு நாம் முறையாக பாவ மன்னிப்பு பெற்று திருப்பலியில் முழுமையாக இணைந்து ஒவ்வொரு ஜெபத்திலும் நாம் ஈடுபட்டு திவ்ய நற்கருணை  பெற்று நாம் மோட்சத்தில் உள்ளவர்களோடு நாமும் இணைகிறோம்.
இரண்டாவது வாசகத்தில் கூறுவது போல, நாம் கடவுளின் குழந்தைகள் அதனால் நாம் அனைவருமே புனிதர்கள் தான்.தூயவர்கள் தான் . மோட்சத்தில் உள்ள புனிதர்களுக்கு ஒரு பயன் இருக்கிறது. ஏனெனில், அவர்களுக்கு சாத்தனின் தூண்டுதல் அங்கே இருப்பதில்லை.  ஆனால் நாமோ, பாவமும், சாத்தானும் நிரம்பிய உலகில் வாழ்கிறோம். ஆனால், நாம் எப்படி பரிசுத்தமாக ஆகிறோம் என்பதை உற்று கவனியுங்கள். கிறிஸ்துவை போலவே நாமும் வாழ்வோம், என்ற நம்பிக்கையில் நாம் நமது கறைகளை துடைத்து வாழ நமக்கு உற்சாகம் கொடுத்து நாம் புனித வாழ்வை தொடர்கிறோம். கிறிஸ்து நம்மை பாவங்களில் இருந்து மீட்டார் என்ற நம்பிக்கையில் , கடவுள் நம்மை மன்னிப்பார் என்றும் நாம் தொடர்ந்து பரிசுத்த வாழ்வில் வாழ்கிறோம், இருந்தும், நம்மை தூய்மை படுத்தும் செயல் இறந்த பின்பு, உத்தரிக்கிற ஸ்தலத்தில் நாம் இன்னும் புனிதமாக்க படுகிறோம்.

நாம் ஆசிர்வதிக்க பட்டவர்கள் , நாம் புனிதர்கள் என்று இன்றைய   நற்செய்தி நமக்கு நினைவுறுத்துகிறது கடவுள் ஆசிர்வதிக்கும் அனைத்தும்  புனிதமானதா ?  கடவுள் யாரை ஆசிர்வதிக்கிராரோ அவர்கள் அனைவரும் புனிதர்களாக மாறுவது அவரின் அன்பினால். ஆவியில் குறைவாய் இருப்போர், துக்கத்தில் ஆழ்ந்து, பரிசுத்த ஆவியை பெற்று ஆறுதல் அடைபவர்கள், கடவுளின் அழைப்பிற்கு தம்மை அர்ப்பணித்தவர்கள்,  அனைவரும் புனிதர்கள். ஒவ்வொரு வரியையும் தியானித்து, புனித வாழ்வை தொடருங்கள்.
© 2015 by Terry A. Modica




Friday, October 23, 2015

அக்டோபர் 25 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

அக்டோபர் 25 2015  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 30ம் ஞாயிறு
Jeremiah 31:7-9
Ps 126:1-6
Hebrews 5:1-6
Mark 10:46-52

மாற்கு நற்செய்தி

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோதுதிமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, ``இயேசுவேதாவீதின் மகனேஎனக்கு இரங்கும்'' என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்ஆனால் அவர், ``தாவீதின் மகனேஎனக்கு இரங்கும்'' என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
இயேசு நின்று, ``அவரைக் கூப்பிடுங்கள்'' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ``துணிவுடன் எழுந்து வாரும்இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்'' என்றார்கள்.
அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டுகுதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.
இயேசு அவரைப் பார்த்து, ``உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்.
பார்வையற்றவர் அவரிடம், ``ரபூனிநான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' என்றார்.
இயேசு அவரிடம், ``நீர் போகலாம்உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று'' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்றுஅவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.


இறை வாய்ப்புகளை முழுதும் பயன்படுத்தி கொள்ளுதல்
இயேசு நம் வாழ்வை  தொட்ட பின்பு - உங்கள் ஜெபத்திற்கு பதில் அளித்தும், நோயுற்ற வாழ்விற்கு குனமக்கியும், உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட கூடிய ஞானம் கொடுத்தும், அல்லது இதைவிட உங்களில் பெரிய மாற்றத்தை கொடுக்க கூடிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். -- அதன் பிறகு நீங்கள் என்ன செய்திர்கள் ? இறைவனின் அருளால், உங்கள் வாழ்வு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதன் மாற்றத்தை , இந்த வாய்ப்பை முழுதுமாக நீங்கள் பயன் படுத்தி உள்ளீர்களா ?
கடவுள் நம்மை வேறு மாற்று பாதைக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை. அவரோடு பேரம் பேசினாலும் "கடவுளே நீங்கள் என்னை குனபடுத்தினால், நான் தினமும் திருப்பலிக்கு செல்வேன்" அவர் உங்கலை நிர்பந்த்திக்கமாட்டார் .
இன்றைய நற்செய்தியில் குணப்படுததிய பர்தேமேயுவிடம் என்ன சொன்னாரோ அதையே தான் இயேசு நம்மிடமும் சொல்கிறார். நீர் போகலாம்உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று''
சில நேரங்களில், இயேசு சொல்லும் கட்டளைகள் நமக்கு பல விஷயங்கள் சொல்லும். சிலர் பாவங்களை நொந்து அதனை துடைத்து எரியும் பொழுது , "இனிமேல் பாவம் செய்யாதே , போ " என்று சொல்கிறார். ஆனால், நாம் எங்கே போவது ?
நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் முக்கியமானவை. நாம் எங்கே போகிறோம், அடுத்து என்ன செய்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அதன் மூலம் தான். நமக்கு அது ஆசிர்வாதமா அல்லது அழிவா என்பது முடிவாகும். அதனை நம்மால்  தீர்மானிக்க முடியாது. ஆனால் இயேசுவும் இதனை சாதாரண விசயமாக எடுத்து கொள்வதில்லை. அவரின் தொடுதலுக்கு பிறகு நடக்கும் ஒவ்வொரு செயலிலும் நம் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார்
இயேசு பர்த்திமேயுவிடம்  ``நீர் போகலாம்" என்று கூறினார், இந்த விடுதலையில் இருந்து பர்த்திமேயு என்ன செய்தார் ?  அவர் இயேசுவை பின் சென்றார் . அவரிடம் உள்ள எல்லா வழிகளிலும் நல்ல வழியை தேர்ந்து எடுத்து கொண்டார் , கண் பார்வை பெற்றதால், மட்டும் அவர் இயேசுவை பின் செல்லவில்லை. இயேசுவிடமிருந்து கற்று கொண்டு , இயேசுவை பின் செல்பவர்களில் ஒருவராக ஆசை பட்டார்.
இயேசுவுடன் நீங்கள் சந்தித்த பின்பு, அவரின் ஆசீரும் , ஆறுதலும் பெற்ற பின்பு, எத்தனை முறை நீங்கள் உங்கள் பழைய வாழ்க்கை முறைக்கு சென்று விட்டிர்கள்?  இயேசுவை பின் செல்வது , நாம் வழக்கமாக செல்லும் பாதையிலிருந்து வேறு பாதையில் செல்ல நேரிடலாம், புது இறைசேவை குழுக்களில் செல்லலாம், அல்லது வேலையை மாற்ற நேரிடலாம, நண்பர்களை விட்டு விலகி வேறு நண்பர்களுடன் பழக நேரிடலாம், ஆனால் இதனை எல்லாம் செய்யாமல், நாம் பழைய வாழ்க்கை முறைக்கே சென்று விடுகிறோம். நமக்கு சுலபமான வாழ்க்கை முறையை விட்டு நாம் விலக மிகவும் கஷ்டபடுகிறோம். ஆனால் இயேசுவை பின் செல்வது என்பது, வாழ்க்கை முறையை மாற்றி செல்லும் சாகச பயணம். ஆனால், நாம் முழு விசுவாசத்தோடு செயல்படுதல் வேண்டும்.
இயேசுவை பின் செல்வதும், அவரிடமிருந்து கற்று கொள்வதும் தான் நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். கிறிஸ்துவிடம் உண்டான ஒவ்வ்வோரு சந்திப்பும், நம்மை மாற்ற வேண்டும். - திருப்பலியிலும் , நாம் அவரோடு திவ்ய நற்கருணையில் இணைகிறோம்.

© 2015 by Terry A. Modica

Friday, October 16, 2015

அக்டோபர் 18 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

அக்டோபர் 18 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Isaiah 53:10-11
Ps 33:4-5, 18-20, 22
Hebrews 4:14-16
Mark 10:35-45
மாற்கு நற்செய்தி
35 செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்கள்.
36 அவர் அவர்களிடம், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.
37 அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர்.
38 இயேசுவோ அவர்களிடம், "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உஙகளால் பெற இயலுமா?" என்று கேட்டார்.
39 அவர்கள் அவரிடம், "இயலும்" என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்.
40 ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்" என்று கூறினார்.
41 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.
42 இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.
43 ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.
44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.
45 ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்.
பணிவிடை செய்வது மட்டுமே , அடிமையாக அல்ல
இறையரசில் முக்கிய இடத்தை பெற, நாம் பணிவிடை செய்பவர்கள் ஆக இருக்க வேண்டும் என இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கிறார். இறையரசின் நன்மைக்காக மற்றவர்களுக்கு உதவிட இயேசு நம்மை அழைக்கிறார்.
இதற்காக, நம் சொந்த விருப்பங்களை, சொந்த வேலைகளை விட்டு விட்டு இதனை செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை. கடவுளுக்கு பணி விடை செய்வதால், அவரின் அடிமை அல்ல. இது நமக்கு மிக பெரிய கௌரமும், மரியாதை ஆகும். ஏனெனில் இது தான் நம்மை கிறிஸ்துவின் நம்மை மீட்கும் பணியோடு இணைக்கிறது
இயேசுவை போல நாமும் இறைபணி செய்தால், தந்தை கடவுள் இயேசுவை எப்படி நடத்துகிறாரோ அப்படியே நம்மையும் நடத்துவார். நமது தலைவர், நம்மை தாழ்த்த மாட்டார், அவர் மரியாதை செய்யமாட்டார், மேலும் அதிக வேலை கொடுக்க மாட்டார்.
இதற்கு மாறாக, இந்த உலக செல்வங்கள், இந்த உலக வாழ்வு நம்மை அடிமை தனத்திற்கு கொண்டு சென்று விடுகிறது. அவை நம்மை தாழ்த்தி . விடுகிறது. கடவுள் நம்மை எந்த உயர்விற்கு படைத்தாரோ ஆதனை விட கிழான நிலைக்கு நம்மை . தள்ளி . விடுகிறது.
கிறிஸ்து நம்மை அவரை போலவே இருக்கும் படி நமக்கு தேவையான ஆற்றலையும், ஆசியும் கொடுக்கிறார். இறையரசின் எல்லா பலனையும் முழுதுமாக சுதந்த்திரத்துடன் அனுபவியுங்கள். பரிசுத்த வாழ்வில் முழுமையாக ஈடுபட நம்மை அழைக்கிறார். இதன் மூலம் தந்தை கடவுளின் பார்வையில் நாம் பெரியவராக இருப்போம்.
இந்த சுதந்திரத்தில் மிகப்பெரிய இன்பம் சந்தோசம் இருக்கிறது. கிறிஸ்துவின் வாழிகள் மிகவும் கடினமாக இருந்தாலும், சில நேரங்களில் நாம் சிலுவையை சந்திக்க நேரிட்டாலும், இந்த துன்ப கிண்ணம், நம்மை பரிசுத்த வாழ்வுக்கு அழைத்து செல்லும், மேலும், மோட்சத்தில் நாம் மிக பெரியவராக இருப்போம். நாம் மற்றவர்களுக்காக தியாகம் செய்யும் பொழுது அது நம்மை பரிசுத்த வாழ்வில் வளர செய்கிறது. அந்த தியாகம் நம்மால் தாங்கி கொள்ள முடியும். நமக்கு துன்பமானது, நம்மை ஆசிர் வாதமாக மாற்றுகிறது.
உங்களுக்கு தெரிந்த யாராவது ஒருவருக்கு  கேட்ட வரம் கிடைக்கவில்ல ? கடவுள் அவர்கள் மேல் அக்கறை கொள்ளவில்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுக்கு அவர் உதவி செய்ய வில்லை என்றும் அர்த்தம் இல்லை. கடவுள் நம் மூலம் நம் சேவை மூலம் அவர்களின் ஜெபத்திற்கு உதவி செய்கிறார் - இயேசு நம் மூலம் மற்றவர்களுக்கு சேவை செய்கிறார்.
நமது முன்னுரிமை எப்பொழுதுமே, கடவுளுடன் உள்ள உறவாக தான் இருக்க வேண்டும். அதனால், கடவுள் நமக்கு கொடுத்ததை அளவிற்கு அதிகமாக நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நமக்கு கடவுள் கொடுப்பார். நம்மிடம் இல்லாததை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. கிறிஸ்துவின் பிரசன்னமாக அங்கே நம்மால் இருக்க முடியாது. முதலில் கிறிஸ்து நமக்கு இறைசேவை  செய்தால் தான் , நம்மால் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியும்.

© 2015 by Terry A. Modica