Friday, October 23, 2015

அக்டோபர் 25 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

அக்டோபர் 25 2015  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 30ம் ஞாயிறு
Jeremiah 31:7-9
Ps 126:1-6
Hebrews 5:1-6
Mark 10:46-52

மாற்கு நற்செய்தி

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோதுதிமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, ``இயேசுவேதாவீதின் மகனேஎனக்கு இரங்கும்'' என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்ஆனால் அவர், ``தாவீதின் மகனேஎனக்கு இரங்கும்'' என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
இயேசு நின்று, ``அவரைக் கூப்பிடுங்கள்'' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ``துணிவுடன் எழுந்து வாரும்இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்'' என்றார்கள்.
அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டுகுதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.
இயேசு அவரைப் பார்த்து, ``உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்.
பார்வையற்றவர் அவரிடம், ``ரபூனிநான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' என்றார்.
இயேசு அவரிடம், ``நீர் போகலாம்உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று'' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்றுஅவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.


இறை வாய்ப்புகளை முழுதும் பயன்படுத்தி கொள்ளுதல்
இயேசு நம் வாழ்வை  தொட்ட பின்பு - உங்கள் ஜெபத்திற்கு பதில் அளித்தும், நோயுற்ற வாழ்விற்கு குனமக்கியும், உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட கூடிய ஞானம் கொடுத்தும், அல்லது இதைவிட உங்களில் பெரிய மாற்றத்தை கொடுக்க கூடிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். -- அதன் பிறகு நீங்கள் என்ன செய்திர்கள் ? இறைவனின் அருளால், உங்கள் வாழ்வு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதன் மாற்றத்தை , இந்த வாய்ப்பை முழுதுமாக நீங்கள் பயன் படுத்தி உள்ளீர்களா ?
கடவுள் நம்மை வேறு மாற்று பாதைக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை. அவரோடு பேரம் பேசினாலும் "கடவுளே நீங்கள் என்னை குனபடுத்தினால், நான் தினமும் திருப்பலிக்கு செல்வேன்" அவர் உங்கலை நிர்பந்த்திக்கமாட்டார் .
இன்றைய நற்செய்தியில் குணப்படுததிய பர்தேமேயுவிடம் என்ன சொன்னாரோ அதையே தான் இயேசு நம்மிடமும் சொல்கிறார். நீர் போகலாம்உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று''
சில நேரங்களில், இயேசு சொல்லும் கட்டளைகள் நமக்கு பல விஷயங்கள் சொல்லும். சிலர் பாவங்களை நொந்து அதனை துடைத்து எரியும் பொழுது , "இனிமேல் பாவம் செய்யாதே , போ " என்று சொல்கிறார். ஆனால், நாம் எங்கே போவது ?
நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் முக்கியமானவை. நாம் எங்கே போகிறோம், அடுத்து என்ன செய்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அதன் மூலம் தான். நமக்கு அது ஆசிர்வாதமா அல்லது அழிவா என்பது முடிவாகும். அதனை நம்மால்  தீர்மானிக்க முடியாது. ஆனால் இயேசுவும் இதனை சாதாரண விசயமாக எடுத்து கொள்வதில்லை. அவரின் தொடுதலுக்கு பிறகு நடக்கும் ஒவ்வொரு செயலிலும் நம் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார்
இயேசு பர்த்திமேயுவிடம்  ``நீர் போகலாம்" என்று கூறினார், இந்த விடுதலையில் இருந்து பர்த்திமேயு என்ன செய்தார் ?  அவர் இயேசுவை பின் சென்றார் . அவரிடம் உள்ள எல்லா வழிகளிலும் நல்ல வழியை தேர்ந்து எடுத்து கொண்டார் , கண் பார்வை பெற்றதால், மட்டும் அவர் இயேசுவை பின் செல்லவில்லை. இயேசுவிடமிருந்து கற்று கொண்டு , இயேசுவை பின் செல்பவர்களில் ஒருவராக ஆசை பட்டார்.
இயேசுவுடன் நீங்கள் சந்தித்த பின்பு, அவரின் ஆசீரும் , ஆறுதலும் பெற்ற பின்பு, எத்தனை முறை நீங்கள் உங்கள் பழைய வாழ்க்கை முறைக்கு சென்று விட்டிர்கள்?  இயேசுவை பின் செல்வது , நாம் வழக்கமாக செல்லும் பாதையிலிருந்து வேறு பாதையில் செல்ல நேரிடலாம், புது இறைசேவை குழுக்களில் செல்லலாம், அல்லது வேலையை மாற்ற நேரிடலாம, நண்பர்களை விட்டு விலகி வேறு நண்பர்களுடன் பழக நேரிடலாம், ஆனால் இதனை எல்லாம் செய்யாமல், நாம் பழைய வாழ்க்கை முறைக்கே சென்று விடுகிறோம். நமக்கு சுலபமான வாழ்க்கை முறையை விட்டு நாம் விலக மிகவும் கஷ்டபடுகிறோம். ஆனால் இயேசுவை பின் செல்வது என்பது, வாழ்க்கை முறையை மாற்றி செல்லும் சாகச பயணம். ஆனால், நாம் முழு விசுவாசத்தோடு செயல்படுதல் வேண்டும்.
இயேசுவை பின் செல்வதும், அவரிடமிருந்து கற்று கொள்வதும் தான் நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். கிறிஸ்துவிடம் உண்டான ஒவ்வ்வோரு சந்திப்பும், நம்மை மாற்ற வேண்டும். - திருப்பலியிலும் , நாம் அவரோடு திவ்ய நற்கருணையில் இணைகிறோம்.

© 2015 by Terry A. Modica

No comments: