Friday, October 2, 2015

அக்டோபர் 4 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


அக்டோபர் 4 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு
Gen 2:18-24
Ps 128:1-6
Heb 2:9-11
Mark 10:2-16
மாற்கு நற்செய்தி
அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, ``கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?''என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?''என்று கேட்டார்.
அவர்கள், ``மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்''என்று கூறினார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், ``உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.'இனி அவர்கள் இருவர் அல்ல;ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்''என்றார்.
பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.
இயேசு அவர்களை நோக்கி, ``தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்''என்றார்.
சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று,அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு,கோபம் கொண்டு, ``சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்''என்றார்.
பிறகு அவர் அவர்களை அரவணைத்து,தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.


திருமணத்தில் இயற்கையை தாண்டிய அன்பு
உங்கள் மேல் அன்பில்லாத ஒருவரை , நீங்கள் அன்பு செய்வீர்களா? கடவுளின் இறை அன்பை பெற்று , அதன் முலம் அவர்களை அன்பு செய்த அனுபவம் இருக்கிறதா ?
திருமணம் ஆனவர்கள் அனைவரும், நம்மை நம் கணவரோ மனைவியோ எப்படி அன்பு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ ? அவ்வாரே நாமும் அன்பு செய்ய வேண்டும் இந்த ஒருவருக்கொருவர், கொடுப்பது ஆகும். நாம் எவ்வளவு ஆர்வத்துடனும், ஆசையுடனும் நமது துணைவரை அன்பு செய்கிறோமோ அதே அன்பும் அசையும் அவரிடமிருந்து நமக்கு கிடைக்கும்.
எனினும், நிறைய திருமணங்கள், கடினமான பிரச்சினையில் இருக்கிறது, அவர்களுக்கு இயற்கையை தாண்டிய அன்பும், இறைவனின் தொடர் உதவியும் தேவை படுகிறது. அதனால் தான், திருமன அருட் சாதனம் நமக்கு தேவை ஆக இருக்கிறது. வெறும் ரிஜிஸ்டர் ஆபிஸ் மட்டும் போதாது. திருமணத்திற்கு இறைவனின் அருள் நிரந்தரமாக தேவையாக இருக்கிறது.
இன்றைய நற்செய்தியில், இயேசு மோசேயின் சட்டத்தை பற்றி விளக்கம் சொல்கிறார். மக்களின் கடின இதயத்தால், மோசே அவ்வாறு சொன்னார். திருமண முறிவிற்கு அவர் ஆமோதிக்கவில்லை. இயேசு அவர் இதயத்தை போல நாமும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். யாரையும் அன்பு செய்வதை நிறுத்தாக அன்பு அவருடையது.
கடவுள் நம்மோடு கொண்டுள்ள விசுவாச இணைப்பை போன்றது திருமணம். இறுதி வரை ஒன்றித்திருப்பது , கடவுள் நமக்கு கொடுத்த கொடை. அதன் முலம் கடவுளை , அவரின் எல்லையில்லாத அன்பை இந்த உலகிற்கு எடுத்து காட்ட ஒரு வாய்ப்பு. இந்த திருமணத்தில் உள்ள நிரந்தரமான ஒன்றிணைப்பு, ஒரே அன்பை நாம் நம்பவில்ல என்றால், எப்படி கடவுளின் மாறாத அன்பை நம்ப போகிறோம் ? சில நேரங்களில், அவரின் அன்பிற்கு நாம் தகுதி இல்லாதவராக கூட இருக்கலாம். மேலும், நம்மை பின்பற்றும், குழ்ந்தைகள் எப்படி இதனை நம்பும்?
நினைவில் வைத்து கொள்ளுங்கள், சில நேரங்களில் , அன்பினால் ஒருவர் மற்றவருக்காக சிலுவைக்கு செல்ல நேரிட வேண்டும். திருமண அழைப்பும், அதே போல கிறிஸ்துவின் பாடுகளை பிரதிபலிக்க வேண்டும்.
கடவுள் அவரோடு நாம் எப்பொழுது "இணைந்து" இருக்க வேண்டும் என்று நம்மை பார்த்து கண்டிப்புடன் சொல்வதில் , அவரை விட்டு பிரிந்தாலும். அவர் தொடர்ந்து அன்பு செய்து கொண்டிருக்கிறார். அதே போல, கணவரோ மனைவியோ அன்பு செய்ய வில்லை என்றால், மற்றவர் அவரை தொடர்ந்து அன்பு செய்ய வேண்டும் என்று கடவுள் கேட்டு கொள்கிறார். அதே போல, கடவுள் தொண்டர்கள் ஆனா குருக்களுக்கும், கன்னியாஸ்திரிகளுக்கும், சாதாரண மக்களுக்கும், அன்புடனும், ஒருவருக்கொருவர் உதவி செய்து இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
For building faith-filled marriages, subscribe to my Reflections for Couples at http://reflections-for-couples.org and see what else is available in the Good News website http://marriagevocation.net.

© 2015 by Terry A. Modica

No comments: