நவம்பர் 1 2015 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 31ம் ஞாயிறு
அனைத்து புனிதர்களின் பெருவிழா
Revelations 7:2-4, 9-14
Ps 24:1-6
1 John 3:1-3
Matthew 5:1-12a
Ps 24:1-6
1 John 3:1-3
Matthew 5:1-12a
மத்தேயு நற்செய்தி
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர்.
அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
``ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச்
சொத்தாக்கிக் கொள்வர்.
நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர்
பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என
அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டுத்
துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
என்
பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள்
பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில்
உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.''
உங்களுள் ஒரு புனிதர் இருக்கிறார்
நீங்கள் ஒரு புனிதர். புனிதர் என்பவர், ஒன்று
மோட்சத்தில் இருக்கவேண்டும், அல்லது மோட்சத்திற்கு சென்று கொண்டிருக்க வேண்டும்.
"புனிதர்களின் சமூத பிரயோசன்னத்தை விசுவசிக்கிறேன் " என்று விசுவாச
பிரமாணத்தில் சொல்கிறோம். அதில் உங்களையும் சேர்த்து தான் சொல்கிறிர்கள். நாம்
அனைவருமே கிறிஸ்துவை பின் செல்பவர்கள் தான் .
கிறிஸ்துவை பின் செல்பவர்களாக, பாவத்தின்
சக்தியிலிருந்து நாம் மீட்கப்பட்டு விட்டோம் . நாம் புனிதர்களாக மிண்டும் பிறந்து
உள்ளோம். பாவம் நம் மேல் இப்போது இல்லை. ஆனால் தினமும் நாம் பாவம் செய்கிறோம்.
நமது புனித வாழ்வை நாம் இன்னும் சரிபடுத்தி கொள்ளவில்லை. அதன் முலம் நாம் பரிசுத்த
வாழ்வில் வளரலாம். ஒவ்வொரு நாளும் கடவுள் நம்மை எப்படி புனிதமாக படைத்தாரோ அதே போல
நாம் வளரலாம். அது தான் இந்த உலக புனித வாழ்வு.
இன்றைய முதல் வாசகத்தை பாருங்கள், மிக பெரிய ஜெப கூட்டம்
நடப்பது நாம் பார்க்க முடியும். ஆனால் அது ஒன்றும் இவ்வுலக வாழ்வுக்கு பிறகு
நடப்பதில்லை. நீங்கள் கடவுளை உற்சாகத்தோடு துதிக்கும் பொழுது அதே சமூகத்துடன் நாம்
இணைந்து கடவுளை வணங்குகிறோம். ஒவ்வொரு முறையும் நாம் கடவுளை புகழ்ந்து போற்றும்
பொழுது , நாம் புனிதர்களின் சமுகத்தில் இணைகிறோம். மோட்சத்தில் உள்ளவர்களுடன்
நாமும் இணைகிறோம்.
பாவ சங்கிர்த்தனத்தில் , நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு
நாமும், மோட்சத்தில் உள்ளவர்களுடன் இணைகிறோம். நாம் மீண்டும் பாவம் செய்யாதவரை ,
நாம் கடவுளின் மலையில் இருக்கிறோம், பரிசுத்த மான இடத்தில் நின்று கொண்டு
இருக்கிறோம், ஏனெனில், நமது கைகள் பாவமில்லாதவை, நமது இருதயம் சுத்த மானவை, அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: என்று
பதிலுரை பாடலில் நாம் சொல்வது போல நாம் இருக்கிறோம்.
அதே போல இந்த இணைப்பு நாம் முறையாக பாவ மன்னிப்பு பெற்று
திருப்பலியில் முழுமையாக இணைந்து ஒவ்வொரு ஜெபத்திலும் நாம் ஈடுபட்டு திவ்ய
நற்கருணை பெற்று நாம் மோட்சத்தில்
உள்ளவர்களோடு நாமும் இணைகிறோம்.
இரண்டாவது வாசகத்தில் கூறுவது போல, நாம் கடவுளின்
குழந்தைகள் அதனால் நாம் அனைவருமே புனிதர்கள் தான்.தூயவர்கள் தான் . மோட்சத்தில்
உள்ள புனிதர்களுக்கு ஒரு பயன் இருக்கிறது. ஏனெனில், அவர்களுக்கு சாத்தனின்
தூண்டுதல் அங்கே இருப்பதில்லை. ஆனால்
நாமோ, பாவமும், சாத்தானும் நிரம்பிய உலகில் வாழ்கிறோம். ஆனால், நாம் எப்படி
பரிசுத்தமாக ஆகிறோம் என்பதை உற்று கவனியுங்கள். கிறிஸ்துவை போலவே நாமும் வாழ்வோம்,
என்ற நம்பிக்கையில் நாம் நமது கறைகளை துடைத்து வாழ நமக்கு உற்சாகம் கொடுத்து நாம்
புனித வாழ்வை தொடர்கிறோம். கிறிஸ்து நம்மை பாவங்களில் இருந்து மீட்டார் என்ற
நம்பிக்கையில் , கடவுள் நம்மை மன்னிப்பார் என்றும் நாம் தொடர்ந்து பரிசுத்த
வாழ்வில் வாழ்கிறோம், இருந்தும், நம்மை தூய்மை படுத்தும் செயல் இறந்த பின்பு,
உத்தரிக்கிற ஸ்தலத்தில் நாம் இன்னும் புனிதமாக்க படுகிறோம்.
நாம் ஆசிர்வதிக்க பட்டவர்கள் , நாம் புனிதர்கள் என்று
இன்றைய நற்செய்தி நமக்கு
நினைவுறுத்துகிறது கடவுள் ஆசிர்வதிக்கும் அனைத்தும் புனிதமானதா ?
கடவுள் யாரை ஆசிர்வதிக்கிராரோ அவர்கள் அனைவரும் புனிதர்களாக மாறுவது அவரின்
அன்பினால். ஆவியில் குறைவாய் இருப்போர், துக்கத்தில் ஆழ்ந்து, பரிசுத்த ஆவியை
பெற்று ஆறுதல் அடைபவர்கள், கடவுளின் அழைப்பிற்கு தம்மை அர்ப்பணித்தவர்கள், அனைவரும் புனிதர்கள். ஒவ்வொரு வரியையும்
தியானித்து, புனித வாழ்வை தொடருங்கள்.
© 2015 by Terry
A. Modica
No comments:
Post a Comment