Friday, November 20, 2015

நவம்பர் 22 2௦15 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர் 22 2௦15 ஞாயிறு நற்செய்தி மறையுரை
கிறிஸ்து அரசர் பெருவிழா
Daniel 7:13-14
Ps 93:1-2, 5
Revelation 1:5-8
John 18:33b-37
யோவான் நற்செய்தி
அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்டான்.
இயேசு மறுமொழியாக, ``நீராக இதைக் கேட்கிறீராஅல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?'' என்று கேட்டார்.
அதற்குப் பிலாத்து, ``நான் ஒரு யூதனாஎன்னஉன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?''என்று கேட்டான்.
இயேசு மறுமொழியாக, ``எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல'' என்றார்
பிலாத்து அவரிடம், ``அப்படியானால் நீ அரசன்தானோ?'' என்று கேட்டான். அதற்கு இயேசு, ``அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்'' என்றார்.


உண்மையின் அரசர்
இன்றைய நற்செய்தியில், கிறிஸ்துவின் அரசரா? என்ற கேள்வி எழுகிற பொழுது, இயேசு அதனை தெய்வீக அரசை பற்றி திருப்பிவிடுகிறார். கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல், . உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்இதற்காகவே உலகிற்கு வந்தேன்.  " என்று பதில் கூறுகிறார், இயேசு இந்த உலகின் அரசர்  அல்ல, அவர்  உண்மையின் அரசர்,  உண்மையை ஆட்சி செய்கிறவர்.
இயேசு நமக்கு போதகராக , இல்லாத போது, விசுவாசத்தையும் நம்பிக்கையும் அவர் நமக்கு வெளிபடுத்தாத போது , அது நமக்கு குழப்பமாகவும், தெளிவில்லாமலும் இருக்கும். மேலும், நாமே எடுக்கும் தவறான கணிப்புகளால், இந்த சாத்தான் ஆட்சி செய்யும் உலகத்தில் பல தவறான முடிவுகள் , சிந்தனைகள் எழுகின்றன. அனால் , சாத்தான் இந்த உலகை ஆட்சி செய்கிறான் என்பதே ஒரு தவறான எண்ணம் தான் இங்கே உலவுகிறது. உண்மையை திரித்து எடுக்கப்பட்ட முடிவு ஆகும். ஆனால் இது உண்மை இல்லை. நன்றாக நினைவில் கொள்ளுங்கள், இயேசு இந்த உலகிற்கு வந்து சாத்தானின் பாதாளம் வரை சென்று , இந்த உலக உயிரினங்கள் அனைத்தும் மீட்பின் வாழ்விற்கு கொண்டு வந்தார். கிறிஸ்துவின் அரசை ஏற்று கொள்பவர்கள் அனைவரும் , உண்மையில் வாழ்கின்றனர்.

நாம் பல விஷயங்கள் புரியாமல், நாம் பாவம் செய்கிறோம் என்று நினைத்து விட கூடாது. இன்னும் இயேசு  நம் வாழ்வின் அரசராக இருப்பதில்லை.
உதாரணமாக , உங்களிடம் ஒருவர் ஏதோ ஒன்றை கேட்கிறார், அதனை உங்களால் கொடுக்க முடியவில்லை , அது கோவில் கட்டும் நன்கொடையாக இருக்கலாம், அல்லது நோயுற்ற ஒருவருக்கு உதவி செய்வது, அல்லது, உங்களோடு வேலை செய்பவர் உண்மையான விசுவாசத்துடன் இல்லாமல் இருக்கலாம், அல்லது, வயதான பெற்றோருக்கு உதவ முடியாமல் போகலாம்.
அவர்கள் தேவைகளை செய்து கொடுக்க, உங்களிடம் போதுமான ஆளவு இல்லை என்று நினைக்கிறீர்களா? உங்கள் சொந்த வேலைகளினால், அதிகம் சோர்வுற்று இருக்கிறீர்களா? மற்றவர்களுக்கு நாம்  செய்யும் உதவிகள் போதும், இன்னும் அதிகம் உதவி செய்து கொண்டிருந்தால், நம்மால் வாழக்கையை அனுபவிக்க முடியாது. என்று நமது உடல் சொல்லும். இது ஏன் என்றால், நம் குழப்பமான மன நிலையால். நமது சொந்த விருப்பங்களை நிறைவேற்றினால் தான் நம்மால் சந்தோசமாக இருக்க முடியும் என்றும், மற்றவர்களுக்கு உதவுதால், நமக்கு ஒன்றுமில்லா என்றும் நாம மனம் நமக்கு சொல்லும்.
ஆனால் அதற்கு மாறாக, இயேசுவின் குரலை கேட்டு, அதன் படி நடப்பது சந்தோசமான வாழ்க்கை முறை ஆகும், "இன்னும் ஒரு படி மேலே செல்லுங்கள் " என்றும் "நல்ல சமாரியனை போல இருங்கள்" "மற்றவர்களுக்கு உதவுங்கள்" என்றும் இயேசு சொல்கிறார். இயேசு போதிக்கும் அனைத்து உண்மைகளையும் நாம் உறுதி ஆக நம்ப வேண்டும். அவர் போதிப்பது புரிந்தாலும், புரியாவிட்டாலும். நாம் அதனை நம்பி நம் வாழ்வில் பின் பற்ற வேண்டும்.
கடவுளுடைய விருப்பத்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது , நமக்கு உண்மைகள் புரிய ஆரம்பிக்கும். . இந்த புரிதல் இன்னும் அதிகம் ஆகும் பொழுது, நமக்கு சந்தோசம் பெருகும். இந்த புரிதலினால், ஏற்படும் நன்மைகளை கண்டு நாம் இன்னும் சந்தோசம் அடைவோம். இந்த நற்பலன்களை நாம் பார்க்காத பொழுது தான் நாம் பாவம் செய்கிறோம். கிறிஸ்துவின் அரசமைப்பில், பரிசுத்த ஆவியின் ஞானத்துடன் , நமது பாவ வாழ்விலிரூந்து வெளியேறி கிறிஸ்துவின் வாழ்விற்கு வருவோம்.

© 2015 by Terry A. Modica

No comments: