நவம்பர் 29 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால முதல் ஞாயிறு
Jeremiah
33:14-16
Ps 25:4-5,
8-10, 14
1
Thessalonians 3:12-4:2
Luke
21:25-28, 34-36
லூக்கா நற்செய்தி
அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது:
"கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில்
மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று
தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால்
மயக்கமுறுவர்.
ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும்
மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து
நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது."
மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து
ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்.
மண்ணுலகெங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால்
நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும், மானிடமகன் முன்னிலையில்
நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்'' என்றார்.
நம்பிக்கையும் வெற்றியையும் கொடுக்கும் விசுவாசம்
இன்றைய உலகில், நடக்கும் எல்லா பிரசினை நடுவிலும், கஷ்டங்கள் ஊடே ,
கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பிக்கையும் வெற்றியும் விசுவாசத்தின் மூலம் பெற முடியும்
என்ற விசுவாசம் நமக்கு வேண்டும்.
கத்தோலிக்கர்களாகிய நாம் இன்னும் ஒரு படி மேலே போய் , திருப்பலியில் அப்பமும்
திராட்சை ரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் அதிசயத்தை விசுவசித்து ,
அதனை நன்று புரிந்து கொண்டு திருப்பலிக்கு செல்வது நல்லது. திவ்ய
நற்கருணையில் உண்மையான கிறிஸ்துவின்
பிரசன்னத்தால், நீங்கள் மாறி உள்ளீர்களா? அப்படி என்றால், நீங்கள் திருப்பலி
விட்டு வெளியே செல்லும்பொழுது , உங்களை
விசுவாசத்தின் சாட்சியாக பார்கிறார்களா?
விசுவாசத்தை தெரிந்து வைத்திருப்பதும், அந்த விசுவாசத்தோடு உண்மையாக
வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
எந்த வேண்டுதலை
நீங்கள் கடவுளிடம் கேட்டும் இன்னும் காத்து இருக்கிறீர்கள்? அனந்த ஜெபத்தை நீங்கள் திருப்பலியில்
இயேசுவிடம் சொல்லும் பொழுது முழு நம்பிக்கை உங்கள் விசுவாசத்தின் முலம் வருவதை
நீங்கள் உணர்கிரிர்களா?
திவ்ய நற்கருணையை குருவானவர் புனிதபடுத்தும்
பொழுது கடவுள் அந்த அப்பத்தையும் இரசத்தையும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும்
மாறுகிறார் என்ற விசுவாசம் நம்மிடம் இல்லை என்றால், திவ்ய நற்கருணை முலம் இயேசு
நமக்கு இறைசேவை செய்து வருகிறார் என்பதை நாம் அறியாமல் போய்விடுவோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு இரண்டாவது வருகையை பற்றி பேசுகிறார். அனால் இதனை நம் அனுதின வாழ்வோடு ஒப்பிடலாம்.
புதிய பிரச்சினைகள் , கலக்கமும், கஷ்டமும் நமக்கு எதிர் காலத்தில் வரும். அது என்ன
பிரச்சினை , எப்படி வரும் என்றும் நமக்கு தெரியாது. இது இந்த உலக வாழ்க்கை.
இதிலிருந்து வெளி வர இயேசு நமக்கு உதவ விரும்புகிறார்.
இந்த விசுவாசம் நமக்கு இருந்தால், வெற்றியும் நம்பிக்கையும் நம்மை வந்து சேரும்.
எனினும். நாம் நமது பிரசினை பற்றியே சிந்தித்து கொண்டு இருந்தால், கிறிஸ்துவை
நோக்கி இருக்க வேண்டிய மனது வேறு பக்கம் சென்று விடும். விசுவாசத்தில் நாம்
வாழவில்லை. நாம் ஆவியில் நிலைத்து இல்லாமல், அதிலே குறைந்து விடுகிறோம் என்பதை
இயேசு நமக்கு எச்சரிக்கையாக சொல்கிறார். இப்படியான சூழ் நிலையில் நாம் விசுவாசத்தை
இழக்கிறோம். நாம் கிறிஸ்துவை எப்போதுமே முன்னுறுத்தி இருப்பதில்லை. பரிசுத்த ஆவியின் ஆலோசனைகளை கேட்க நாம் முயல்வதில்லை.
ஆனால், நாம் இயேசுவிடம், நம் வாழ்வின் பிரச்சினகளில்ருந்து வெளியே வர உதவி கோரினால்,
அவர் அதனை செய்வார், நாம் உற்சாகமடைவோம் , இயேசுவின் பாதுகாப்பில் நாம்
இருக்கிறோம் என்ற நம்பிக்கையில் நாம் மகிழ்வோடு இருபோம், நமக்கு எதிரே எந்த
பிரச்சினை வந்தாலும், கடவுள் மேல் நாம் நம்பிக்க கொண்டால், கடவுள் காப்பாற்றுவார்.
நம் பிரச்சினைகள் நமக்கு பயம் கொடுக்கிறது.
விசுவாசம் தான், நாம் இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்வதற்கும், சந்தோசமாக நமது
வாழ்வை தொடர்வதற்கும் உதவி செய்கிறது. இந்த விசுவாசத்தை நிலை நிறுத்துவதற்கு நாம்
முறையான தொடர்ந்து முயற்சி செய்து விசுவாசத்தில் நாம் தொடர்ந்து இருக்க வேண்டும்.
ஆனால், ஆவியில் குறைந்து இருப்பது, மிகவும் சோர்வான வாழ்வை வாழ வைக்கிறது.
© 2015 by Terry
A. Modica
No comments:
Post a Comment