Friday, November 6, 2015

நவம்பர் 8 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர் 8 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 32ம் ஞாயிறு
1 Kings 17:10-16
Ps 146:7-10 (with 1b)
Hebrews 9:24-28
Mark 12:38-44
மாற்கு நற்செய்தி
அக்காலத்தில் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, ``மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே'' என்று கூறினார்.
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.
அப்பொழுதுஅவர் தம் சீடரை வரவழைத்து, ``இந்த ஏழைக் கைம்பெண்காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமேஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' என்று அவர்களிடம் கூறினார்.


நீங்கள் கடவுள் மேல் எவ்வவளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்?
இயேசுவை பின் செல்வதற்கு மிகவும் அதிக நம்பிக்கை தேவை, ஏனெனில், இயேசு நம்மை நாம் எதிர்பாராத இடத்திற்கு அழைத்து செல்வார். அதனால், நாம் மிகவும் கடினமான தியாகம் செய்ய வேண்டி இருக்கும், புதிய வளர்ச்சி இருக்கும், நமக்கு மிகவும் சுலபமான பழக்கமான வாழ்வை விட்டு வேறு கடினமான வாழ்க்கையை ஏற்று கொள்ள வேண்டி இருக்கும்.
இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் வரும் இரண்டு கைபென்களை பாருங்கள். நமது பொது அறிவிற்கு, அவர்கள் இருவரும், அவர்களால் முடியாததை , அவர்கள் கொடுத்தார்கள். கடவுள் கண்டிப்பாக அவர்களின் தேவைகளை கொடுப்பார் என்று அவர்கள் நினைத்தார்களா? அப்படி ஒன்றும் இல்லை. ஆனால், கடவுள் மேல் உள்ள அன்பால், அவரின் அன்பின் மேல் உள்ள நம்பிக்கையில் கொடுத்தார்கள்.
உண்மையான அன்பின் வெளிப்பாடு நம்பிக்கை  - அதுவும் நாம் கடவுளை நம்புபோது.
நம்மிடம், அவ நம்பிக்கை உள்ள மக்கள் அவர்கள் நிருபிக்கும் பொழுது, அந்த துன்பத்திலிருந்து நம்மை கடவுள் உதவி செய்து மீட்டு விடுவார் என்று நாம் நம்பிநாள்,  நாம் எந்த வித கவலை இன்றி , தாராளாமாக நாம் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்தலாம். எந்த வித சங்கடமும் இன்றி நாம் மற்றவர்களை அணுகலாம். கடவுளிடத்தில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை பொருத்து நம் அனுகு முறை இருக்கிறது.
ஒவ்வொரு கைம்பெண்ணும் தன்னிடம் இழப்பதற்கு வேறு ஒன்றும் இல்லாத பொழுது கொடுத்தார்கள், நமக்கு துன்பம் கொடுப்பவரிடம், ஒதுக்கி தள்ளி வைப்பவர்களிடம் நாம் அன்பு செலுத்த முடியாது. இருந்தாலும், இயேசு நம்மிடம் சொல்கிறார். அவர்களை  மன்னித்து , அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் என்று சொல்கிறார். ஒரு படி மேலே போய் செய்யுங்கள் என்று இயேசு நம்மிடம் கூறுகிறார்.
சில நேரங்களில், அன்பு செய்ய மிகவும் கடினமான நபராக இருப்பவரிடம், நாம் நல்லது செய்வது , ஒரு எல்லை வரை செய்யலாம். இயேசு என்ன செய்தார் என்று பாருங்கள், பெரிய வெள்ளி  வரை, அவரை கேலியும் கிண்டலும் செய்தவர்களை விட்டு விலகியே சென்றார். இயேசு அவர்களை அன்பு செய்வதை நிறுத்தினாரா ? அக்கறையுடன் அணுகினார். அவர்கள் மேல் கவலை கொண்டார். கிறிஸ்துவை பின் செல்வது என்பது, நாம் கடவுளின் சரியான நேரத்தை நாம் கவனித்து கொண்டு இருக்க வேண்டும், எப்பொழுது அவர்களுடன் அக்கறையாக பேசுவது, அல்லது, அந்த இடத்தை விட்டு நகர்ந்து போவது. என்று நாம் கவனித்து நடந்து கொள்ள வேண்டும்.
சில நேரங்களில், அன்பு செய்ய கடினமானவர்களிடம் , நாம் நல்லது செய்யும்பொழுது, அவர்கள் மனம் திரும்ப ஒரு வாய்ப்பாக . மாறுகிறது. அவர்கள் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அவர்கள் குறைகளை போக்க நாம் உதவாமல், அவர்கள் அதனால் துன்பம் பட நாம் அனுமதிக்க வேண்டும். நாம் மனம் வருந்தாமல் இருந்தால், கடவுள் நாம் பாவங்களை துடைப்பாரா? என்று எண்ணிப்பாருங்கள். சில நேரங்களில் கடவுள் நாம் மனம் திருந்தினால் கூட ;;கடவுள் உடனே நம் குறைகளை ஒழித்து கட்டுவது இல்லை. மற்றவர்கள் சேதம் விளைவித்தால், நாம் அதிலிருந்து என்ன கற்று கொண்டோம். ?
மற்றவர்களை அன்பு செய்வது, எப்பொழுதுமே நாம் சில விசயங்களில் தியாகம் செய்து, கடவுள் நம்மை தேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பது, மேலும், அவர் நம் காயங்களை குணப்படுத்துவார், நம்மை மீட்பார், மேலும் ஆசிர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் நாம் தொடர வேண்டும். அன்பிற்காக நமது ஜாடியிலிருந்து நாம் எதை எடுத்து கொடுத்தாலும், அந்த ஜாடி எப்பொழுதுமே காலியாகாது.

© 2015 by Terry A. Modica

No comments: