Saturday, December 26, 2015

டிசம்பர் 27 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர் 27 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருக்குடும்ப திருவிழா

Sirach 3:2-6, 12-14 or
1 Samuel 1:20-22, 24-28
Ps 128:1-5 or Ps 84:2-3,5-6,9-10
Colossians 3:12-21 or 1 John 3:1-2, 21-24
Luke 2:41-52

லூக்கா  நற்செய்தி

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோதுவழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்
விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோதுசிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாதுபயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர்.
ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, மகனேஏன் இப்படிச் செய்தாய்இதோ பார்உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே''என்றார்.
அவர் அவர்களிடம், நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்றார்.
அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.

நமக்கு புரியாத உண்மையை விசுவசிப்பது

போப் இரண்டாம் ஜான் பால், "சந்தோஷ தேவ இரகசியத்தில் ஐந்தாம் ரகசியம் மகிழ்ச்சியும், நாடகமுமாக இருக்கிறது " என அவரது குறிப்பில் கூறி உள்ளார். இன்றைய நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல மரியாளும், சூசையப்பரும்  குழந்தை இயேசுவை காணாமால்  போய் கண்டுபிடிக்கப்பட்டதை  போப் இரண்டாம்  ஜான் பால் நினைவு கூர்ந்து இங்கே இப்படி எழுதுகிறார். "அங்கே இயேசு தெய்வ ஞானத்தில், கேள்விகள்   கேட்டும் , பதில் கூறியும்  இருந்தார் அங்கிருந்தே "போதகர்" என்ற பணியை தொடங்கிவிட்டார்.

இந்த செய்தி மூலம் போப் ஜான் பால் , இயேசு தம் வாழ்வை தந்தையின் நோக்கத்திற்கு செலவிட ஆரம்பித்துவிட்டார் , என்று குறிப்பிடுகிறார். அது தான் முதல் முயற்சி: எவ்வளவு சீக்கிரம் தந்தையின் மகனாக தன இறைசேவையை துவக்குவதை நாம் இங்கு காண்கிறோம்.

இரண்டாவது தேவ இரகசியத்தில், இரண்டாம் ஜான் பால் விளக்குகிறார், "நற்செய்தியின் அடிப்படையான, அழுத்தமான விஷயமான மனித உறவுகளுக்கே சவால் விடும் இரயரசின் தேவைகளை பற்றியது ", எந்த மாதிரியான உறவுகள் ? குடும்ப உறவுகள்! இன்றைய நற்செய்தியில், மரியாளும், சூசையப்பரும் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படும் சோதனையை எதிர் கொண்டனர் , அவர்கள் பயத்துடனும் கலக்கத்துடனும் இருந்தனர். அவர்களுடைய மகனுக்கு என்ன ஆனதோ என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

இன்றோ நாம் மரியாளும் சூசையப்பரும் போலும் இருக்கிறோம்.  இயேசுவின் வார்த்தைகளை புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். அவரின் போதனைகள் நாம் வாழ்வில் கடினமானவற்றை ஏற்று கொள்ள வேண்டும் என சொல்கிறது. நம் பகைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார். அநிதிக்கு எதிராக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார். கிறிஸ்துவ வாழ்விற்காக வாழ வேண்டும் என்றும் , அதற்காக நாம் கேலிக்கு உட்படுத்த பட்டாலும், இன்னொரு கன்னத்தை கட்டி இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும் என்றும், கடவுளின் வழிக்கு தேவையான அனைத்து செய்ய வேண்டும் என்று இயேசு நமக்கு போதிக்கிறார்.


ஆனால், நாமோ நமக்கு சரிபடாத, இலகுவாக இல்லாத விஷயங்கள் செய்து தான் நாம் பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் என்றால், அதற்கு ஏதாவது ஒரு சப்பை கட்டு காரணம் காட்டி நாம் விலகினால், திருச்சபபையின் போதனைகளை விட்டு விலகுகிறோம். எனினும், நாம் கிறிஸ்துவை உண்மையாகவே பின் செல்ல விரும்பினால், எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவர் பின் செல்ல நாம் தயாராய் இருந்தால், நாம் கிறிஸ்துவை போல மாறினால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள் .


இந்த புரிதல் இல்லாவிட்டாலும், இயேசுவின் வார்த்தைகளை அவை உண்மை என நம்ப வேண்டும். மரியாளும் சூசையப்பரும் போல, நமது மனதில் நமக்கு என்ன புரியவில்லை என்பதை கருத்தில் கொண்டு அதனை இன்னும் நமது சிந்தனையில் இறுத்தி கொண்டும் , பரிசுத்த வாழ்வை நோக்கி நாம் இன்னும் முன்னேறி செல்ல வேண்டும். அப்போது தான் நாம் முழுமையாக கிறிஸ்துவில் வாழ்ந்து மகிழ்ச்சியை நாம் கண்டுணர முடியும்.


© 2015 by Terry A. Modica

Friday, December 18, 2015

டிசம்பர் 20 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர் 20  2015  ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால  4ம் ஞாயிறு
Micah 5:1-4
Ps 80:2-3, 15-16, 18-19
Hebrews 10:5-10
Luke 1:39-45

லூக்கா  நற்செய்தி
அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.
அப்போது எலிசபெத்து உரத்த குரலில், பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்''என்றார்.


இயேசுவை அறிந்து கொண்டு / கண்டு கொண்டு மகிழ்ச்சி பெறுவது

நான்காவது திருவருகை கால ஞாயிறு நமக்கு எலிசபெத்தையும் , இன்னும் பிறக்காத அவருடைய மகனையும் நமக்கு காட்டி, மேலும், இன்னும் மரியாவின் மாடியிலிருந்து பிறக்காத குழந்தை இயேசுவையும் நமக்கு காட்டுகிறது. எலிசபெத் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால், மரியாவின் கர்த்தரை தனது வயிற்றில் சுமப்பதை அறிந்து கொண்டு சந்தோசமடைந்தார் ஆனால், எலிசபெத்தின் வயிற்றில் உள்ள குழந்தை எப்படி சந்தோசத்தில் துள்ளியது  ?


சிலர் அபார்ஷன் செய்து கொள்வது ஒன்றும் தப்பில்லை, ஏனெனில் குழந்தை பிறந்து முதல் மூச்சு எடுக்கும் போது தான், அவரிடம் ஆன்மா  இருக்கிறது என்று சொல்லும் பலர் சொன்னாலும், இன்னும் பிறக்காத ஜான் , இன்னும் பிறக்காத  மீட்பர் இயேசுவை கண்டு உணர்ந்து மகிழ்ச்சியால் துள்ளி குதித்தார்.?
இந்த விசுவாசம், கிறிஸ்துவின் பிரசன்னத்தை - மற்றவர்களின் உள்ளத்தில் கிறிஸ்து இருப்பதை,  திவ்ய நற்கருணையில் -, ஒவ்வொறு குழந்தையும் கருவில் இருக்கும் பொழுதும், நாம் பரிசுத்த ஆவியில் முழுதும் இருக்கும்  பொழுது கிடைக்கின்றது. நமது ஞானஸ்நாணத்தில் நமக்கு பரிசுத்த ஆவியினாவர் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் நாம் முழுமையாக சரணடைந்து,அவர் நம் மனதையும் , சிந்திக்கும் ஆற்றலையும் மாற்றும் அதிகாரத்தை அவருக்கு கொடுத்தால் தான் , கடவுளின் ஆவி நமக்கு உண்மையை போதிக்கும்

ஜான் கருவிற்குள் இருக்கும்பொழுது வெளியில் நடக்கும் எதையும் அவரால் கண்டு உணர முடியாது, இருந்தும், அவர் மகிழிச்சியால் துள்ளினார். இந்த போதனையின் மூலம் கடவுள் நமக்கு செய்யும் நல்ல செயல்களை நம்மால் கண்டு உணர முடியவில்லை என்றாலும், நாம் மகிழ்ச்சியோடு இருக்கலாம், ஏனெனில் நம் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை ஆண்டவர் ஏற்படுத்து கிறார் என்பதை நாம் அறிகிறோம். கடவுள் என்ன எப்படி செய்கிறார் என்று தெரிந்து கொள்ள தேவையில்லை. அவருடைய திட்டம் என்ன என்று கூட நாம் அறிந்து கொள்ள தேவையில்லை அனால், நாம் சந்தோசமாக இருக்கலாம்.

பரிசுத்த ஆவியானவர் எலிசபெத்துக்கும் , கருவில் இருந்த ஜானுக்கும் கடவுளுடைய அருள் மூலம் விசுவச்சத்தை கொடுத்து கிறிஸ்து எதிர்காலத்தில் செய்யபோகும் நற்செயல்களை அவருக்கு அறிந்து கொள்ள உதவினார். நமக்கு திவ்ய நற்கருணை மூலம் கடவுள் அதே அருளை கொடுக்கிறார்.

கிறிஸ்துவின் பிரசன்னத்தை நாம் கண்டு உணர்ந்து அதன் மூலம் பெரும் மகிழ்ச்சி இந்த கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக கடவுள் நமக்கு கொடுக்கிறார். இந்த மகிழ்ச்சி இன்னும் ஒரு வருடம் நம்மில் நில்லைது நிற்கும். நம் வாழ்வின் முறைகளோடு கலந்து விடும். அந்த மகிழ்ச்சிக்கு இடைவெளி எதுவும் கிடையாது. கடவுள் இரக்கத்துடன் நமக்காக அனைத்தும் செய்கிறார் என்ற விசுவாசத்திலிருந்து இந்த  மகிழ்ச்சி வருகிறது . நாம் பார்க்காவிட்டாலும், அவரின் பேரிரக்க குணத்தை நாம் முழுமையாக நம்புகிறோம். நாம் சில நேரங்களில் துன்பபட்டாலும் , கவலையோடு இருந்தாலும், கிரிஸ்துவின் பிரசன்னத்தை, அவர் நம்மோடு இருப்பதை நாம் கற்று உணர முடியும்.

அதன் பிறகு என்ன ? ஜானை போல நாமும் கிறிஸ்துவின் பிரசன்னத்தை அறிந்து கொண்டு, மற்றவர்களோடு அதனை பகிர்ந்து கொள்வோம்.


© 2015 by Terry A. Modica

Saturday, December 12, 2015

டிசம்பர் 13 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர் 13 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 3ம் ஞாயிறு

Zephaniah 3:14-18a
Isaiah 12:2-6
Philippians 4:4-7
Luke 3:10-18

லூக்கா நற்செய்தி

அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் போதித்துக்கொண்டிருந்தபோது, “நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.
அதற்கு அவர் மறுமொழியாக, “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்றார்.
வரிதண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று அவரிடம் கேட்டனர்.
அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்'' என்றார்.
படைவீரரும் அவரை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டனர்.
அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்'' என்றார்.
அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்'' என்றார்.

மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.


இறைசேவையில் மகிழ்ச்சி அனுபவிப்பது

மூன்றாம் திருவருகை கால ஞாயிறு நமக்கு மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை . ஏனெனில் கிறிஸ்துவின் மேல் உள்ள உண்மையான விசுவாசம் மகிழ்ச்சியை தான் கொடுக்கும். எல்லா நற்செய்தி வாசகங்களும்  மகிழ்ச்சியையும் , எதிர்பார்ப்பால் வரும் திரில் சந்தோசத்தையும் கொடுக்கின்றன. நற்செய்தி வாசகத்தில்  திருமுழுக்கு யோவான் கிறிஸ்துவின் வருகை பற்றிய நற்செய்தியை அறிவிக்கிறார்.  அதனை கேட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், கடவுள் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்புடனும் இருந்தனர்.


சந்தோசமாக இருப்பதே ஒரு இறைசேவை என்று உங்களுக்கு தெரியுமா ? நமது விசுவாசத்தை மகிழ்ச்சியாக இருப்பதான மூலம் நாம் அனைவருக்கும்  பகிர்ந்து கொள்ளுகிறோம். துயரமும், நம்பிக்கையின்மையும் உள்ள இடத்தில்  நாம் இறைசேவை செய்ய அழைக்கபட்டிருகிறோம்.
கடவுள் மேல் நம்பிக்கை கொள்வது தான் விசுவாசம், நம்பிக்கையில் நாம் தொடர்ந்து இருப்பது , நமக்கு மகிழ்ச்சியை தான் தரும். உங்களிடமோ , அல்லது மர்ரவரிடமோ, சந்தோசம் இல்லை என்றால், இயேசுவை முழுமையாக அந்த இடத்தை சந்தோசத்தால் நிரப்ப அவர் அழைக்கப்படவில்லை என்று அர்த்தம். துக்க நேரத்தில் இது ஒரு சாதாரமான விசயம் ஆகும், அல்லது விசுவாச குறைவு அல்லது விசுவாசம் வளர்க்க பட வேண்டும் என்று அர்த்தம் ஆகும். அதானால், எப்பொழுதுமே நாம் இயேசுவை அழைக்க வேண்டும்.

துன்ப நேரங்களில், கடவுளின் அன்பை நோக்கியும், அவரின் ஆறுதலை பெறுவதிலும் நமது செயல்கள் இருந்தால், நம்மால் விசுவாசத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். இதன் மூலம் இயேசுவின் பக்கம் உள்ள சந்தோசத்தையும், அவரின் ஒவ்வொரு போதனையிலும் உள்ள  மகிழ்ச்சியும் நமக்கு  தெரிய வரும்.

பகைவர்களை அன்பு செய்வதிலும், நமக்கு துன்பம் கொடுத்தவர்களுக்கு நல்லது செய்வதிலும், இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும் என்று இயேசு போதிக்கிறார். கடவுளின் பரிசுத்த அன்பும் மற்றவர்களோடு பகிர பட வேண்டும். இயேசு போதித்த அனைத்தும் , இயேசுவின் மகிழ்ச்சி தரும் அன்பும் நம்மை ஒன்று சேர்க்கிறது. நன்றாக நினைவில் கொள்ளுங்கள் , சிலுவையை சுமப்பதற்கும் தயாராக இருங்கள், அதன் மூலம் மகிழ்ச்சியின் விளைச்சலை பெறுவீர்கள் .

இயேசு எப்படி பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் என்று சொல்லி கொடுக்க வில்லை. ஆனால் பரிசுத்த வாழ்வு வாழும் ஆற்றலை நமக்கு கொடுத்தார் . அவரின் பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்தார். பரிசுத்த ஆவியின் செயல்பாடுகளை நம் மூலம் மற்றவர்கள் பார்க்கும் பொழுது, இயேசு தான் நம் மகிழ்ச்சிக்கான காரணம் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். நம் விசுவாசத்தின் மூலம் மனம் மாறுதல் அடைகின்றனர்.


© 2015 by Terry A. Modica

Saturday, December 5, 2015

டிசம்பர் 6 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


டிசம்பர் 6 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 2ம் ஞாயிறு

Baruch 5:1-9
Ps 126:1-6
Philippians 1:4-6, 8-11
Luke 3:1-6

லூக்கா நற்செய்தி

திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில்பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு,இத்துரேயாதிரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர்.

அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார்.

பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்'' என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.

இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்மலைகுன்று யாவும் தாழ்த்தப்படும்கோணலானவை நேராக்கப்படும்;கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.''

மகிழ்ச்சி காலத்திற்கு தயாராகுங்கள்

இந்த திருவருகை கால இரண்டாம் ஞாயிறு நற்செய்தி வாசகங்கள் நம்மை பரிசுத்த வாழ்வின் வாழ்விற்கு தயார் செய்கின்றது: அன்பளிப்புகள் வாங்குவதிலும், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்புவதிலும் நம் நேரத்தை செலவழிக்கும்பொழுது , கிறிஸ்துவின் பிறப்பிற்காக நமது அனுதின வாழ்வில் எந்த தயாரிப்பை செய்து கொண்டிருக்கிறோம்?

வரும் செவ்வாய் டிசம்பர் 8ம் தேதி, இரக்கத்தின் ஆண்டின் ஜுபிலி வருடம் ஆரம்பிக்கிறது. நம்முடைய உள்ளத்தை கடவுளின் இரக்கத்தினால் நிரப்ப பரிசுத்த ஆவி ஆசைபடுகிறார். கடவுள் எவ்வளவு இறக்கம் உள்ளவர் என்பதை உங்களில் நிலை  நிறுத்த ஆசைபடுகிறார். அதன் முலம் நீங்கள் பாவம் செய்யும் சிந்தனை ஆவல் உள்ளதை ஏற்று கொண்டு நாம் கடவுள் வருகைக்காக நாம் தயார்படுத்த வேண்டும் என்று பரிசுத்த ஆவி ஆசைபடுகிறார். இயேசு இந்த உலகின் மீட்பராக நம்மில் பிறப்பார், அவரின் இரக்கத்தை நம் முலம் மற்றவர்களுக்கு கொடுக்கிறார்.

இன்றைய பதிலுரை பாடலில், " ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்" என்று பாடுகிறோம். இதனை சொல்லும்பொழுது உண்மையாகவே நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்களா?  அதனை கஷ்டத்திலும், நாம் விசுவசித்தால் ஒழிய , மகிழ்ச்சி அடைய முடியாது கடவுள் அவரது இரக்கத்தினால், மாபெரும் செயல்கள் நமக்காக செய்கிறார் என்று நாம் முழுமையாக அறிந்து கொண்டால் தான், நம் விசுவாசம் வளரும். கண்டிப்பாக அவரது இரக்கத்தை நாமாக பெர்ருகொள்ளவில்லை, அவராக கொடுக்கிறார். நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் பொழுது , அவரது இரக்கம் நம்மை வந்து அடைகின்றது.

அதனால் தான், யோவான், " ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்"  என்று எடுத்துரைத்தார்.

நாம் என்ன தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாம் இப்போது கேட்க வேண்டிய கேள்வி.  வாழ்க்கையில் இருக்கும் கோணல்களை எப்படி நேராக்க போகிறோம்? கிறிஸ்துவோடு உள்ள நமது தொடர்பை அறுக்கும் பாவம் என்ன ? என்ன மாதிரியான பாவ மன்னிப்பு நம் வாழ்வை நேராக்கும்?

உங்கள் மன துயரங்களை, சோர்வை தருகின்ற ,  உங்கள் வாழ்வில் கடவுளின்  மகிழ்ச்சியை தடுக்கும் விசயம் என்ன ? நம்பிக்கை இல்லாமல் இருக்கிறீர்களா? இயேசு என் வாழ்வின் பொறுப்பை எடுத்து கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும். ? எந்த தடைகளை , கடன்களை அகற்றினால் கடவுள் மேல் உள்ள விசுவாசம் இன்னும் அதிகமாகும்?

என் வாழ்வில் எது முறையற்று  இருக்கிறது ?  பரிசுத்த ஆவி என்னை பரிசுத்த வாழ்விற்கு அழைத்து செல்ல நாம் ஜெபிப்போம் . என்னில் உள்ள கரடு முரடான குணங்களை , குறைகளை நீக்கி , இயேசு என்னை வைரத்தை திட்டுவது போல என்னை பளபளக்க செய்ய வேண்டும்.

இந்த திருவருகை காலம் முழுவதும், இரக்கத்தின்  ஆண்டு முழுவதும், கடவுளின் மீட்பை முழுமையாக காண , நமது வழிகளை சோதித்து ஆய்ந்தறிந்து , பரிசுத்த வாழ்விற்கு ஒரு திட்டத்தை தயாரித்து , இன்னும் பரிசுத்தமாக இந்த ஆண்டின் இறுதியை சந்திப்போம்.

© 2015 by Terry A. Modica