டிசம்பர் 13 2015 ஞாயிறு
நற்செய்தி மறையுரை
திருவருகை கால 3ம் ஞாயிறு
Zephaniah
3:14-18a
Isaiah
12:2-6
Philippians
4:4-7
Luke 3:10-18
லூக்கா நற்செய்தி
அக்காலத்தில் திருமுழுக்கு யோவான்
போதித்துக்கொண்டிருந்தபோது, “நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.
அதற்கு அவர் மறுமொழியாக,
“இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு
பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்''
என்றார்.
வரிதண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து,
“போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று அவரிடம் கேட்டனர்.
அவர்,
“உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும்
தண்டாதீர்கள்'' என்றார்.
படைவீரரும் அவரை நோக்கி,
“நாங்கள் என்ன செய்ய வேண்டும்?''
என்று கேட்டனர்.
அவர்,
“நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்;
யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்;
உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்''
என்றார்.
அக்காலத்தில் மக்கள் மீட்பரை
எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று
எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து,
“நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்;
ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய
மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும்
நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில்
கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில்
சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்''
என்றார்.
மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு
நற்செய்தியை அறிவித்தார்.
இறைசேவையில் மகிழ்ச்சி அனுபவிப்பது
மூன்றாம் திருவருகை கால ஞாயிறு நமக்கு மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை .
ஏனெனில் கிறிஸ்துவின் மேல் உள்ள உண்மையான விசுவாசம் மகிழ்ச்சியை தான் கொடுக்கும். எல்லா
நற்செய்தி வாசகங்களும் மகிழ்ச்சியையும் ,
எதிர்பார்ப்பால் வரும் திரில் சந்தோசத்தையும் கொடுக்கின்றன. நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் கிறிஸ்துவின் வருகை பற்றிய
நற்செய்தியை அறிவிக்கிறார். அதனை கேட்ட
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், கடவுள் என்ன செய்ய போகிறார் என்ற
எதிர்பார்ப்புடனும் இருந்தனர்.
சந்தோசமாக இருப்பதே ஒரு இறைசேவை
என்று உங்களுக்கு தெரியுமா ? நமது விசுவாசத்தை மகிழ்ச்சியாக இருப்பதான மூலம் நாம்
அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
துயரமும், நம்பிக்கையின்மையும் உள்ள இடத்தில்
நாம் இறைசேவை செய்ய அழைக்கபட்டிருகிறோம்.
கடவுள் மேல் நம்பிக்கை கொள்வது தான் விசுவாசம், நம்பிக்கையில் நாம் தொடர்ந்து
இருப்பது , நமக்கு மகிழ்ச்சியை தான் தரும். உங்களிடமோ , அல்லது மர்ரவரிடமோ,
சந்தோசம் இல்லை என்றால், இயேசுவை முழுமையாக அந்த இடத்தை சந்தோசத்தால் நிரப்ப அவர்
அழைக்கப்படவில்லை என்று அர்த்தம். துக்க நேரத்தில் இது ஒரு சாதாரமான விசயம் ஆகும்,
அல்லது விசுவாச குறைவு அல்லது விசுவாசம் வளர்க்க பட வேண்டும் என்று அர்த்தம்
ஆகும். அதானால், எப்பொழுதுமே நாம் இயேசுவை அழைக்க வேண்டும்.
துன்ப நேரங்களில், கடவுளின் அன்பை நோக்கியும், அவரின் ஆறுதலை பெறுவதிலும் நமது
செயல்கள் இருந்தால், நம்மால் விசுவாசத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். இதன்
மூலம் இயேசுவின் பக்கம் உள்ள சந்தோசத்தையும், அவரின் ஒவ்வொரு போதனையிலும்
உள்ள மகிழ்ச்சியும் நமக்கு தெரிய வரும்.
பகைவர்களை அன்பு செய்வதிலும், நமக்கு துன்பம் கொடுத்தவர்களுக்கு நல்லது
செய்வதிலும், இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும் என்று இயேசு போதிக்கிறார். கடவுளின்
பரிசுத்த அன்பும் மற்றவர்களோடு பகிர பட வேண்டும். இயேசு போதித்த அனைத்தும் ,
இயேசுவின் மகிழ்ச்சி தரும் அன்பும் நம்மை ஒன்று சேர்க்கிறது. நன்றாக நினைவில்
கொள்ளுங்கள் , சிலுவையை சுமப்பதற்கும்
தயாராக இருங்கள், அதன் மூலம் மகிழ்ச்சியின் விளைச்சலை பெறுவீர்கள் .
இயேசு எப்படி பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் என்று
சொல்லி கொடுக்க வில்லை. ஆனால் பரிசுத்த வாழ்வு வாழும் ஆற்றலை நமக்கு கொடுத்தார் .
அவரின் பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்தார். பரிசுத்த ஆவியின் செயல்பாடுகளை நம் மூலம்
மற்றவர்கள் பார்க்கும் பொழுது, இயேசு தான் நம் மகிழ்ச்சிக்கான காரணம் என்று
அவர்கள் அறிந்து கொள்வார்கள். நம் விசுவாசத்தின் மூலம் மனம் மாறுதல் அடைகின்றனர்.
© 2015 by Terry
A. Modica
No comments:
Post a Comment