டிசம்பர் 20 2015
ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 4ம் ஞாயிறு
Micah 5:1-4
Ps 80:2-3,
15-16, 18-19
Hebrews
10:5-10
Luke 1:39-45
லூக்கா நற்செய்தி
அக்காலத்தில்
மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர்
செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.
மரியாவின்
வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால்
துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.
அப்போது
எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என்
ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால்
துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்''என்றார்.
இயேசுவை அறிந்து கொண்டு / கண்டு கொண்டு மகிழ்ச்சி பெறுவது
நான்காவது திருவருகை கால ஞாயிறு நமக்கு எலிசபெத்தையும் , இன்னும் பிறக்காத
அவருடைய மகனையும் நமக்கு காட்டி, மேலும், இன்னும் மரியாவின் மாடியிலிருந்து
பிறக்காத குழந்தை இயேசுவையும் நமக்கு காட்டுகிறது. எலிசபெத் பரிசுத்த ஆவியின்
தூண்டுதலால், மரியாவின் கர்த்தரை தனது வயிற்றில் சுமப்பதை அறிந்து கொண்டு
சந்தோசமடைந்தார் ஆனால், எலிசபெத்தின் வயிற்றில் உள்ள குழந்தை எப்படி சந்தோசத்தில்
துள்ளியது ?
சிலர் அபார்ஷன்
செய்து கொள்வது ஒன்றும் தப்பில்லை, ஏனெனில் குழந்தை பிறந்து முதல் மூச்சு
எடுக்கும் போது தான், அவரிடம் ஆன்மா
இருக்கிறது என்று சொல்லும் பலர் சொன்னாலும், இன்னும் பிறக்காத ஜான் ,
இன்னும் பிறக்காத மீட்பர் இயேசுவை கண்டு
உணர்ந்து மகிழ்ச்சியால் துள்ளி குதித்தார்.?
இந்த விசுவாசம், கிறிஸ்துவின் பிரசன்னத்தை - மற்றவர்களின் உள்ளத்தில் கிறிஸ்து
இருப்பதை, திவ்ய நற்கருணையில் -, ஒவ்வொறு
குழந்தையும் கருவில் இருக்கும் பொழுதும், நாம் பரிசுத்த ஆவியில் முழுதும்
இருக்கும் பொழுது கிடைக்கின்றது. நமது
ஞானஸ்நாணத்தில் நமக்கு பரிசுத்த ஆவியினாவர் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. எனினும்
நாம் முழுமையாக சரணடைந்து,அவர் நம் மனதையும் , சிந்திக்கும் ஆற்றலையும் மாற்றும்
அதிகாரத்தை அவருக்கு கொடுத்தால் தான் , கடவுளின் ஆவி நமக்கு உண்மையை போதிக்கும்
ஜான் கருவிற்குள் இருக்கும்பொழுது வெளியில் நடக்கும் எதையும் அவரால் கண்டு உணர
முடியாது, இருந்தும், அவர் மகிழிச்சியால் துள்ளினார். இந்த போதனையின் மூலம் கடவுள்
நமக்கு செய்யும் நல்ல செயல்களை நம்மால் கண்டு உணர முடியவில்லை என்றாலும், நாம்
மகிழ்ச்சியோடு இருக்கலாம், ஏனெனில் நம் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை ஆண்டவர்
ஏற்படுத்து கிறார் என்பதை நாம் அறிகிறோம். கடவுள் என்ன எப்படி செய்கிறார் என்று
தெரிந்து கொள்ள தேவையில்லை. அவருடைய திட்டம் என்ன என்று கூட நாம் அறிந்து கொள்ள
தேவையில்லை அனால், நாம் சந்தோசமாக இருக்கலாம்.
பரிசுத்த ஆவியானவர் எலிசபெத்துக்கும் , கருவில் இருந்த ஜானுக்கும் கடவுளுடைய
அருள் மூலம் விசுவச்சத்தை கொடுத்து கிறிஸ்து எதிர்காலத்தில் செய்யபோகும்
நற்செயல்களை அவருக்கு அறிந்து கொள்ள உதவினார். நமக்கு திவ்ய நற்கருணை மூலம் கடவுள்
அதே அருளை கொடுக்கிறார்.
கிறிஸ்துவின் பிரசன்னத்தை நாம் கண்டு உணர்ந்து அதன் மூலம் பெரும் மகிழ்ச்சி
இந்த கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக கடவுள் நமக்கு கொடுக்கிறார். இந்த மகிழ்ச்சி இன்னும்
ஒரு வருடம் நம்மில் நில்லைது நிற்கும். நம் வாழ்வின் முறைகளோடு கலந்து விடும்.
அந்த மகிழ்ச்சிக்கு இடைவெளி எதுவும் கிடையாது. கடவுள் இரக்கத்துடன் நமக்காக
அனைத்தும் செய்கிறார் என்ற விசுவாசத்திலிருந்து இந்த மகிழ்ச்சி வருகிறது . நாம் பார்க்காவிட்டாலும்,
அவரின் பேரிரக்க குணத்தை நாம் முழுமையாக நம்புகிறோம். நாம் சில நேரங்களில்
துன்பபட்டாலும் , கவலையோடு இருந்தாலும், கிரிஸ்துவின் பிரசன்னத்தை, அவர் நம்மோடு
இருப்பதை நாம் கற்று உணர முடியும்.
அதன் பிறகு என்ன ? ஜானை போல நாமும் கிறிஸ்துவின் பிரசன்னத்தை அறிந்து கொண்டு,
மற்றவர்களோடு அதனை பகிர்ந்து கொள்வோம்.
© 2015 by Terry A. Modica
No comments:
Post a Comment