டிசம்பர் 6 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 2ம் ஞாயிறு
Baruch 5:1-9
Ps 126:1-6
Philippians
1:4-6, 8-11
Luke 3:1-6
லூக்கா நற்செய்தி
திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு
பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன்
சகோதரராகிய பிலிப்பு,இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன்
பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அன்னாவும் கயபாவும் தலைமைக்
குருக்களாய் இருந்தனர்.
அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான்
பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார்.
“பாவமன்னிப்பு
அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்'' என்று
யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.
இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய
நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “பாலைநிலத்தில்
குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப்
பாதையைச் செம்மையாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று
யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்;கரடுமுரடானவை
சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.''
மகிழ்ச்சி காலத்திற்கு
தயாராகுங்கள்
இந்த திருவருகை கால இரண்டாம் ஞாயிறு நற்செய்தி வாசகங்கள் நம்மை பரிசுத்த
வாழ்வின் வாழ்விற்கு தயார் செய்கின்றது: அன்பளிப்புகள் வாங்குவதிலும், கிறிஸ்துமஸ்
வாழ்த்து அட்டை அனுப்புவதிலும் நம் நேரத்தை செலவழிக்கும்பொழுது , கிறிஸ்துவின்
பிறப்பிற்காக நமது அனுதின வாழ்வில் எந்த தயாரிப்பை செய்து கொண்டிருக்கிறோம்?
வரும் செவ்வாய் டிசம்பர் 8ம் தேதி, இரக்கத்தின் ஆண்டின் ஜுபிலி வருடம்
ஆரம்பிக்கிறது. நம்முடைய உள்ளத்தை கடவுளின் இரக்கத்தினால் நிரப்ப பரிசுத்த ஆவி
ஆசைபடுகிறார். கடவுள் எவ்வளவு இறக்கம் உள்ளவர் என்பதை உங்களில் நிலை நிறுத்த ஆசைபடுகிறார். அதன் முலம் நீங்கள்
பாவம் செய்யும் சிந்தனை ஆவல் உள்ளதை ஏற்று கொண்டு நாம் கடவுள் வருகைக்காக நாம்
தயார்படுத்த வேண்டும் என்று பரிசுத்த ஆவி ஆசைபடுகிறார். இயேசு இந்த உலகின்
மீட்பராக நம்மில் பிறப்பார், அவரின் இரக்கத்தை நம் முலம் மற்றவர்களுக்கு
கொடுக்கிறார்.
இன்றைய பதிலுரை பாடலில், " ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால்
நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்" என்று பாடுகிறோம். இதனை சொல்லும்பொழுது
உண்மையாகவே நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்களா?
அதனை கஷ்டத்திலும், நாம் விசுவசித்தால் ஒழிய , மகிழ்ச்சி அடைய முடியாது
கடவுள் அவரது இரக்கத்தினால், மாபெரும் செயல்கள் நமக்காக செய்கிறார் என்று நாம்
முழுமையாக அறிந்து கொண்டால் தான், நம் விசுவாசம் வளரும். கண்டிப்பாக அவரது
இரக்கத்தை நாமாக பெர்ருகொள்ளவில்லை, அவராக கொடுக்கிறார். நமது பாவங்களுக்காக மனம்
வருந்தும் பொழுது , அவரது இரக்கம் நம்மை வந்து அடைகின்றது.
அதனால் தான், யோவான், " ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்" என்று எடுத்துரைத்தார்.
நாம் என்ன தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாம் இப்போது
கேட்க வேண்டிய கேள்வி. வாழ்க்கையில்
இருக்கும் கோணல்களை எப்படி நேராக்க போகிறோம்? கிறிஸ்துவோடு உள்ள நமது தொடர்பை
அறுக்கும் பாவம் என்ன ? என்ன மாதிரியான பாவ மன்னிப்பு நம் வாழ்வை நேராக்கும்?
உங்கள் மன துயரங்களை, சோர்வை தருகின்ற , உங்கள் வாழ்வில் கடவுளின் மகிழ்ச்சியை தடுக்கும் விசயம் என்ன ? நம்பிக்கை
இல்லாமல் இருக்கிறீர்களா? இயேசு என் வாழ்வின் பொறுப்பை எடுத்து கொள்வதற்கு நான்
என்ன செய்ய வேண்டும். ? எந்த தடைகளை , கடன்களை அகற்றினால் கடவுள் மேல் உள்ள
விசுவாசம் இன்னும் அதிகமாகும்?
என் வாழ்வில்
எது முறையற்று இருக்கிறது ? பரிசுத்த ஆவி என்னை பரிசுத்த வாழ்விற்கு அழைத்து
செல்ல நாம் ஜெபிப்போம் . என்னில் உள்ள கரடு முரடான குணங்களை , குறைகளை நீக்கி ,
இயேசு என்னை வைரத்தை திட்டுவது போல என்னை பளபளக்க செய்ய வேண்டும்.
இந்த திருவருகை காலம் முழுவதும், இரக்கத்தின் ஆண்டு முழுவதும், கடவுளின் மீட்பை முழுமையாக காண
, நமது வழிகளை சோதித்து ஆய்ந்தறிந்து , பரிசுத்த வாழ்விற்கு ஒரு திட்டத்தை
தயாரித்து , இன்னும் பரிசுத்தமாக இந்த ஆண்டின் இறுதியை சந்திப்போம்.
© 2015 by Terry
A. Modica
No comments:
Post a Comment