பிப்ரவரி 21 2016 ஞாயிறு நற்செய்தி
மறையுரை
தவக்கால 2ம் ஞாயிறு
Genesis
15:5-12, 17-18
Ps 27:1,
7-9, 13-14
Philippians
3:17--4:1
Luke
9:28b-36
லூக்கா நற்செய்தி
28இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள்
ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம்
வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்.
29அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம்
மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய்
மின்னியது.
30மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்
கொண்டிருந்தனர்.
31மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில்
நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
32பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய்
இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற
இருவரையும் கண்டார்கள்.
33அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே,
நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும்
எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று
தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.
34இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம்
வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள்
அஞ்சினார்கள்.
35அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே.
இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.
36அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார்.
தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி
காத்தார்கள்.
(Thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னுடைய உண்மையான அடையாளத்தை அங்கே காட்டுகிறார்.
மேலும் தந்தை கடவுள், “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே.
இவருக்குச் செவிசாயுங்கள்” என்று கூறியதை நாம் கேட்கிறோம்.
கிறிஸ்துவின் வார்த்தைகளை ஒவ்வொரு முறை கேட்கும்போழுதும், பரிசுத்த ஆவியின்
துணையுடன் கிறிஸ்துவின் வார்த்தைகளை புரிந்து கொள்ளும்பொழுது , நாம் கிரிஸ் துவை
அவரது முழு அடையாளத்தையும் தெரிந்து கொள்கிறோம். மேலும் அவரது வழிகாட்டுதலையும்
தெரிந்து கொள்கிறோம்.
கிறிஸ்துவை அவரின் வார்த்தைகளை நாம் கேட்கும்பொழுது, கிறிஸ்துவின் ஒளியை நாம்
உள் வாங்கி நம்மில் உள்ள இருளை எடுத்து கொள்ள நாம் அனுமதிக்கிறோம். அதன் மூலம்
நம்மை சுற்றி உள்ளவர்கள் இயேசுவை அனுபவிப்பார்கள். ஏனெனில் அவர்கள் இயேசுவை
நம்மிடம் காண்கின்றனர். நமது செயல்களிலும், இரக்கத்திலும், மன்னிப்பிலும், அவர்கள்
இயேசுவை நம் மூலம் காண்கிறார்கள். இது தான் மனம் மாறுதல் !
இந்த தவக்காலத்தில் தான், நாம் கிறிஸ்துவின் ஒளி நம் இருளை அகற்றும் வாய்ப்பாக
எடுத்து கொண்டு, அதில் நாம் கவனத்தை செலுத்தும் காலம் ஆகும். நாம் மனம் வருந்தி,
மன்னிப்பை கோரும் பொழுது, பரிசுத்த ஆவியின் ஆற்றல் மூலம் நாம் நல்ல வழியில் மாறி ,
இயேசுவின் ஒளி நம்மில் ஒளிர செய்கிறார். அவரோடு இணைந்து இன்னும் நாம் மிளிர்வோம்.
மேலும், இந்த உலகை மீட்பதற்கு நாம் இயேசுவோடு இணைகிறோம். இந்த இறை சேவையில்,
கண்டிப்பாக கஷ்டப்படவேண்டும். பெரிய வெள்ளியின் வழியும், துன்பமும், ஈஸ்டர் அன்று
வெற்றியானது என்று நமக்கு தெரியும்.
சோதனைகளிலும், தியாகத்திலும் -- நம் சொந்த சிலுவைகள் - இதில் தான் நம்
பரிசுத்தம் இந்த உலக வாழ்வை . இயேசுவை கல்வாரி வரை பின் செல்ல நீங்கள் தைரியாமாக
இருக்கிறீர்களா? ஈஸ்டர் வெற்றியை அடைய இது தான் ஒரே வழி! நமது சோதனைகளில் தான்
இயேசுவின் இரத்தம் மீண்டும் சிந்துகிறது. நமது வழியெல்லாம் அவரின் வெளியாகிறது.
நாம் இயேசுவோடு ஏற்கனவே சிலுவையில் இருக்கிறோம். நம்மை ஏமாற்றியாவர்களுக்காகவும் ,
துன்புருத்தியவர்களுக்காகவும், ஏன் நாம் இயேசுவை இன்னும் அரவணைத்து அவரோடு இணைந்து
செயல்பட்டால் என்ன ?
நம்மை அன்பு செய்யாதவர்களிடம் அன்பு செலுத்துவது,
நம்மை தவறாக நடத்தியவர்களை மன்னித்து , சாத்தானை இந்த இறையரசில் இருந்து நீக்குவோம்.
இயேசுவின் ஒளியை இருளில் வாழ்வபர்களுக்கு வெளிபடுத்துவோம்.
© 2016 by Terry A. Modica
No comments:
Post a Comment