Friday, February 26, 2016

பிப்ரவரி 28 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


பிப்ரவரி 28 2016 ஞாயிறு  நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு 

Exodus 3:1-8a, 13-15
Ps 103: 1-4, 6-8, 11
1 Corinthians 10:1-6, 10-12
Luke 13:1-9
லூக்கா நற்செய்தி

மனம் மாறாவிடில் அழிவு

1அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.

2அவர் அவர்களிடம் மறுமொழியாக
இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?

3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?

5
அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்”  என்றார்.

காய்க்காத அத்திமரம்

6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: 
ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.

7எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார்.

8தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.

9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்என்று அவரிடம் கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இரக்கத்தின் அன்பளிப்பு
சிலர் உங்களை துன்புறுத்தியும், மோசமாக நடந்து கொண்டும் இருப்பவர்களை , அவர்களுக்கு ஏதாவது துன்பம் நேரவேண்டும் என்று நாம் நினைப்போமா? அப்படி நேரும்போது நாம் சந்தோஷ படவே செய்வோம். நியாயம் வென்றது என்று நாம் நினைப்போம்.
இயேசு இதனை இந்த வார  நற்செய்தியில் பேசுகிறார். நாம் யாரையும் "மிக பெரிய பாவி" என்று சொல்லி விட முடியாது. அவர்கள் கிறிஸ்தவத்திற்கு எதிராக சில செயல்கள் செய்தாலும், மிக பெரிய அழிவை உண்டாக்கி விட்டாலும், சாத்தானின் செயல்கள் செய்தாலும் , நீங்கள் அவரை மிக பெரிய பாவி என்று சொல்லி விட முடியாது என்று இயேசு சொல்கிறார்.
ஒவ்வொரு மனிதனும் கடவுளை போல படைக்கபட்டிருக்கிறோம், மிகவும் மோசமான மனிதனும் கடவுளை போல தான் படைக்க பட்டிருக்கிறான் , கிறிஸ்துவுக்கு எதிராக செயல்களில் ஈடுபடுபவரும், இயேசுவால் அன்பு செய்யபடுகிறார். அவர்களுக்காகவும் இயேசு சிலுவையில் மரணமடைந்தார். கடவுள் அவர்களை எதற்காக படைத்தாரோ , அதனை செய்யாமல் அவர்கள் இருப்பது ஒரு துன்ப செயல். ஏனெனில் அவர்களின் செயல், மற்றவர்களை துன்புறுத்துகிறது. ஆனால், யாரும் அவர்களை மனம் திரும்பி கிறிஸ்துவிற்குள் திரும்ப அழைக்கவில்லை என்றால், அதை விட மிக பெரிய அழிவிற்கு கொண்டு செல்லும்.
யாருமே சாத்தானின் மனிதர்கள் கிடையாது. சாத்தானின் செயல்கள் செய்பவர்கள் , அவர்களின் உண்மையான அடையாளத்தை ஒதுக்கி   விட்டு செய்பவர்கள் ஆவர். சாத்தானின் செயல்களுக்கு ஆட்பட்டு , சாத்தானின் காட்டும் வழி தான் வாழ்வதற்கு நல்ல வழி என்று நினைக்கிறார்கள். பாவங்களையெல்லாம் அழித்து வெற்றி பெற்ற இயேசு ஒருவரால்,  அவர்கள் மிட்படைவர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்காக நாம் வருத்தப்படவேண்டும். - இது தான் இரக்கத்தின் அன்பளிப்பு. அவர்களின் ஆன்மாவிற்கு ஏற்படும் அழிவை கண்டு இயேசுவுடன் சேர்ந்து நாமும் இரக்க பட வேண்டும். -- அது தான் மிகவும் மதிப்பு வாய்ந்த இரக்கத்தின் அன்பளிப்பு ஆகும்.

ஒருவரின் ஆன்ம அழிவிற்கு நாம் அக்கறை கொள்ள வில்லை என்றால், நாம் பாவம் செய்கிறோம். இயேசு சிலுவையில் அவர்களுக்காக என்ன செய்தாரோ அதனை உதறி தள்ளி விடுகிறோம். நம் சொந்த ஆன்மாவிற்கும் சேதம் ஏற்படுத்துகிறோம்.
உங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் அனைவரும், இன்றைய நற்செய்தியில் வரும் அத்தி மரத்தை போன்றவர்கள். உங்களால் அவர்களை ஒரு வழிக்கு கொண்டு வர முடியும் என்றால், அவர்களின் மண்ணை உழுது பயனுள்ளாதாக மாற்ற வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அவர்களின் ஆன்மாவை , அன்பினாலும், நற்செய்தியின் உண்மையாலும் அவர்களுக்கு உரமிட்டு, நமது செயல்களாலும் , அவர்களை கிறிஸ்துவுக்கு அழைத்து வர வேண்டும். மேலும், இயேசு உங்கள் சமாதான வார்த்தைகள் மூலம் அவர்களை சரியான பாதையில் வளர உதவிட வேண்டும் என்றும் விரும்புகிறார்.
மேலும், நோய்வாய்ப்பட்ட , ஆரோக்கியமில்லாத மரத்தை நீண்ட காலம் வைத்திருக்க இயேசு விரும்புவதில்லை என்பதையும் நாம் உற்று நோக்க வேண்டும். நம்மால் முடிந்த அனைத்தும் செய்த பின்பு, சாத்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் மனம் மாற விரும்பவில்லை என்றால், அந்த தோட்டத்திற்கு நாம் செய்யும் ஒரு நல்ல செயல், அந்த மரத்தை வெட்டி விடுவது தான். இதன் அர்த்தம் என்ன என்றால், அவர்களை விட்டு நாம் செல்வது, அல்லது, நமக்கு மேல் உள்ள குருக்கள், அல்லது வேறு சிலரிடம் அழைத்து செல்வது , மேலும், அவர்கள் செயலுக்கான பிரதிபலனை அவர்களே அனுபவிக்க விட்டு விடுவது ஆகும். இதனையும் அதிக அக்கறையுடனும் அன்புடனும் செய்தல் வேண்டும். இந்த உரங்கள் எல்லாம் ஒரு கனியும் கொடுக்க வில்ல என்றால், அந்த மரம் கிழே விழுந்து, புதிய வளர்ச்சிக்கு உரமாக ஆகிவிடும்.


© 2016 by Terry A. Modica

No comments: