Saturday, February 6, 2016

பிப்ரவரி 7 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

பிப்ரவரி 7 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் பொதுகாலத்தின் 5ம் ஞாயிறு
Isaiah 6:1-2a, 3-8
Ps 138:1-5, 7-8
1 Corinthians 15:1-11
Luke 5:1-11

லூக்கா நற்செய்தி

ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கிவலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ``ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய்மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என்றார்.
சீமோன் மறுமொழியாக, ``ஐயாஇரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லைஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்'' என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவேமற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன.
இதைக் கண்ட சீமோன் பேதுருஇயேசுவின் கால்களில் விழுந்து, ``ஆண்டவரேநான் பாவிநீர் என்னை விட்டுப் போய்விடும்'' என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.
சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள்.
இயேசு சீமோனை நோக்கி, ``அஞ்சாதேஇது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்'' என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

அதிக நேரங்களில், கடவுள் நாம் கேட்காமலே , நமக்கு உதவி செய்கிறார். இன்றைய நற்செய்தியில் , இராயப்பருக்கும், ஜேம்சுக்கும் மற்ற சீடர்களுக்கும் நிறைய மீன் கிடைக்கும் என்று அவராகவே உதவி செய்தார்

இயேசுவின் நோக்கம் என்ன? இயேசுவிற்கு ஒரு படகு கொடுத்தால், அவர் அவர்களுக்கு கைம்மாறு செய்கிறாரா? உங்களுக்கும் நீங்கள் நல்லது செய்தால், அவர் பிரதிபலனாக ஏதாவது செய்வார் என்று நினைக்கிறீர்களா? 
கண்டிப்பாக அது பிரதிபலன் இல்லை. அதனை தாண்டி அதற்கு மிக பெரிய காரணம்
ஒன்று இருக்கிறது.
கிறிஸ்து நம்மோடு எப்படி கலந்து உரையாடுகிறார் என்று இந்த நற்செய்தி சொல்வது போல பாருங்கள்.
1. முதலில், மினவர்கள், இயேசுவை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தனர், அவரை "ஐயா" என்று அழைக்கின்றனர் ஏனெனில், இயேசு அவர்களுக்கு  போதகராக , அவர்கள் மாணவர்களாக இருந்தனர்.
2. இரண்டாவதாக, இயேசு அவர்கள் எதிர்பாராத நேரத்தில் , அவர்களுக்கு உதவி செய்தார்.
3. மூன்றாவதாக இயேசு அந்த அன்பளிப்பை , கடவுளின் அழைப்பாக மாற்றினார்.
4. நான்காவதாக, அந்த சீடர்கள்  அனைத்தையும் விட்டு விட்டு , கடவுளின் அழைப்ப ஏற்றனர்.
கடவுள் நம் வாழ்வில் நுழைந்தால், அது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க விழைகிறார். நாம் ஒரு சமுகத்தில் இருக்கிறோம். கடவுளின் குடும்பத்தில் இருக்கிறோம்; நாம் தனி ஒரு ஆளாக கடவுளோடு நட்பில் இருப்பதில்லை, கடவுளோடு நமது ஜெபத்திலும் , நற்கருனையிலும், ஜெப கூட்டத்திலும் , நாம் மற்றுவர்களோடும் , அவர்களின் நலன்களோடும் இணைந்து இருக்கிறோம்.
நீங்கள் கேட்கும் அணைத்து ஜெபங்களும் உங்களுக்காக மட்டும் கடவுள் கொடுக்கவில்லை, மற்றவர்களும் அதனால் பயன் அடைய வேண்டும் என்று மிக பெரிய திட்டத்தோடு தான் கடவுள் நமக்கு இல்லாம் செய்கிறார்.
நீங்கள் கேட்கும் வரங்களை கடவுள் கொடுக்க வில்ல என்றால், அவர் இன்னும் மிக பெரிய திட்டம் தயாரித்து கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம் . உங்கள் ஜெப தேவைகள் மற்றவர்களுக்கு எந்த பயன் கொடுக்கும் என்று ஆய்ந்து அதனை செய்கிறார்.
உங்கள் தனிப்பட்ட விருப்பங்களையும், ஆசைகளையும் கண்டிப்பாக கடவுள் அக்கறை கொள்கிறார். அதே போல மற்றவர்களின் விருப்பங்களையும் ஆசைகளையும் நிறைவேற்ற அவர் ஆசை கொண்டுள்ளார். மற்றவர்கள் கேட்டாலும்  கேட்காவிட்டாலும்,  கடவுள் அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற விரும்புகிறார். உங்கள் தேவைகளை அழைத்தலாக மாற்றுகிறார் , உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட இறை சேவை. அதன் அர்த்தம் என்ன வென்றால், கடவுளிடம் நீங்கள் கேட்ட நேரத்திலிருந்து , மற்றவர்களுக்கும் உதவ ஆரம்பிக்க கடவுள் உங்களை அழைக்கிறார்

நமது பிரச்சினைகள் முடியும் வரை, நாம் அதனை விட்டு வெளியே சிந்திக்க வேண்டும், மற்றவர்களை பற்றியும் நாம் அக்கறை கொள்ள வேண்டும். இதனால் கடினமான நேரங்களிலும், நாம் உள்ளத்தில் அமைதியும் , நம்பிக்கையும் கொள்வோம். இது தான் நம் அனுதின வாழ்வின் அழைத்தல் ஆகும்.

© 2016 by Terry A. Modica

No comments: