Friday, May 27, 2016

மே 29 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 29 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் திரு உடல்   திரு இரத்த பெருவிழா

Genesis 14:18-20
Ps 110:1-4
1 Corinthians 11:23-26
Luke 9:11b-17

லூக்கா நற்செய்தி
11அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.
12பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்என்றனர்.

13இயேசு அவர்களிடம்
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்
 என்றார். அவர்கள், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்என்றார்கள்.
14ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி
இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்
 என்றார்.

15அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.

16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.

17அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
(thanks to www.arulvakku.com)
ஐந்தாவது அப்பம்
"அன்பானது இந்த ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுக்கும் சமமானது,எப்பொழு நீங்கள் அன்பை கொடுக்க ஆரம்பிக்கிறீர்களோ அப்பொழுதுதான் அது பல மடங்காகும்."  கலிலேய கடற்கரையில் உள்ள பேராலாயத்தில்  இந்த வசனம் எழுதப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் தான் இயேசு இந்த அதிசயத்தை நிகழ்த்தினார். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பல மடங்காக பெருக்கி அங்கு வந்தவர்கள் அனைவற்குக்கும் வயிறார உணவளித்தார்.

அந்த பேராலயத்தின் பீடத்தில்,மொசைக் கல்லில் நாம் அப்பங்களையும்,மீன்களையும் செதுக்கி வைத்திருப்பதையும் பார்க்கலாம்.இந்த ஆலயம், கிபி.480ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால்,அங்கே நான்கு அப்பங்கள் மட்டும் தான் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஏன் ?
அந்த ஐந்தாவது அப்பம், திவ்ய நற்கருனையாக  இயேசு ஒவ்வொரு திருப்பலியிலும் நம்மிடம் வருகிறார்.
(இந்த பேராலயத்தின் பீட படத்தை இந்த லிங்கில் பார்க்கலாம். http://holyland.gnm.org/page056.)
திவ்ய நற்கருணை இயேசுவின் உண்மையான பிரசன்னம்.  இது இயேசு உடல் திருச்சபை ஆனதை விட திவ்ய நற்கருணை பெரிது. திவ்ய நற்கருணை பல மடங்காக பெருகும் அதிசயத்தை கொண்டது.  கடவுளிடமிருந்து நமக்கு கிடைக்காதது எதுவாகினும், பரிசுத்த ஆவியின் மூலம் இயேசு நமக்கு கொடுக்கிறார். மேலும் நாம் திருப்பலியில் பங்கு கொள்ளும்பொழுது நம்மிடம் உள்ள குறைகளை இயலாமையை போக்கி நமது திறமைகளை பல மடங்காக பெருக்க வேண்டும் என இயேசுவிடம் வேண்டி பெறுவோம்.

நமக்கு தேவையான அனைத்தையும் இயேசு கொடுப்பார் என நாம்  நம்பலாம்,சரியான நேரத்தில்  , ஏதோ ஒரு வழியில் நமக்கு கிடைக்கும் , அது நம் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் நாம் நம்பலாம்.
உங்களுக்கு போதுமான அன்பு உங்கள் வாழ்வில் இல்லையா ?   நம்மில் பலர் ஆம் என்று  தான் சொல்வர். ஏனெனில் கடவுள் ஒருவர் தான் நமக்கு தேவையான முழு அன்பும் கொடுக்க முடியும். யார் எவ்வளவு அதிகம் உங்களோடு நெருக்கமாக இருந்தாலும், , உங்களுக்கு நம்பிக்கையானவர்களாக இருந்தாலும், கிறிஸ்துவோடு அவர்கள் நெருக்கமாக இருந்தாலும், கடவுள் கொடுக்கும் முழு அன்பை அவர்களால் கொடுக்க இயலாது.
திவ்ய நற்கருணை தான் இந்த உலகில், கடவுளின் அன்பை நமக்கு நேரிடையாக கொடுப்பது.இந்த திவ்ய நற்கருனையோடு நாம் எப்படி இணைவது என்று நமக்கு புரிந்து கொள்ளமுடியவில்லை ,அதனால் தான் கடவுளின் முழு அன்பை நம்மால் உணர முடியவில்லை .  நம் வாழ்வை மாற்றும் திவ்ய நற்கருணையை முழுதுமாக நாம் பெற, நாமே திவ்ய நற்கருனயாக மாற வேண்டும். மற்றவர்களுக்காக தியாக செய்து கொடுக்கப்பட்ட அன்பு தான் திவ்ய நற்கருணை . உங்களுக்கு தேவையான அன்பு கிடைக்கவில்லை என்றால், அதிக அன்பை கொடுங்கள் -- எந்த அன்பை பெறுவதற்காக ஏங்குகிறிர்களோ அந்த அன்பாக இருங்கள் . மற்றவர்களுக்கு திவ்ய நற்கருனையாக இருங்கள்.

© 2016 by Terry A. Modica

Friday, May 20, 2016

மே 22 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 22 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
மூவொரு கடவுள் திருவிழா
Proverbs 8:22-31
Ps 8:4-9 (with 2a)
Romans 5:1-5
John 16:12-15

யோவான் நற்செய்தி

12நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.

13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

14அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.

15தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்என்றேன்.
(thanks to www.arulvakku.com)
எந்த பதிலுக்காக கடவுளிடம் வேண்டி நிற்கிறீர்கள் ?
உங்களுக்கு அறியாத ஒன்றை, கடவுள் நம்பிக்கையுடன்  உங்களிடம் கொடுப்பார், என்று எதனை எதிர்பார்த்து காத்து இருக்கிறிர்கள். ? இயேசுவிடம் நீங்கள் கேட்டு அதற்கு இன்னும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. ?  திருச்சபையின் போதனைகளில் உங்களுக்கு புரியாதது எது ? அல்லது நீங்கள் அதனுடம் ஒத்து போகிறீர்களா ? இன்றைய நற்செய்தியில், இயேசு, " நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது" என்று கூறுகிறார் .
நாம் ஏன் இன்னும் தயாராகவில்லை ? ஏனெனில் பரிசுத்த ஆவி நம்மை தயார்படுத்த நாம் அனுமதிக்க வேண்டும். கடவுள் நம்முள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நாம் அவரிடம் சரணடைதல் வேண்டும். உண்மையில் இவையெல்லாம் நமக்கு ஆசிர்வாதமாக இல்லாமல், சுமையாகவே இருப்பதால், நாம் உடனே இதனை ஒதுக்கி விடுகிறோம்.
இயேசு சொன்ன ஒவ்வொன்றும், பரிசுத்த ஆவியின் மூலம்  தந்தையிடமிருந்து வந்தவை. கடவுள் நமக்கும் அதே ஆவியையு,ஞானத்தையும், உண்மையையும் அருளியுள்ளார். ஆவியின் செயலுக்கு நம்மையே அர்ப்பணிக்க வில்லை என்றால், அந்த அன்பளிப்புகள் அனைத்தும் பயன் இல்லாமல் போய் விடும்.
மூவொரு கடவுளில், தந்தை நம் பாவங்களை மன்னிக்கிறார். இயேசு, அந்த மன்னிப்பை நமக்கு வழங்குகிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மை தூய்மை படுத்தி, இனிமேல் பாவம் செய்யாமல் இருக்க ஆற்றலை கொடுத்து அனுப்புகிறார்.
பாவ சங்கீர்த்தனத்தில், குருவானவர் இயேசுவின் பிரசன்னமாக இருக்கிறார், கிறிஸ்துவின் உடலாக (திருச்சபை) குருவானவர் அங்கே இருக்கிறார். பாவ மன்னிப்பு குருவானவர் பரிசுத்த ஆவியின் மூலம் கொடுக்கிறார். ஆனால், இது உங்கள் குற்ற உணர்வை எடுக்கிறது; பாவ வாழ்விலிருந்து உங்களை எடுத்து விட்டு பரிசுத்த வாழ்விற்கு மாற்றுகிறது.  பாவ சங்கீர்த்தன அருட் சாதனம் மூவொரு கடவுளின் நேரடி தொடர்பாக இருக்கிறது , மூவொரு கடவுள் நம் மன வருத்தத்தை ஏற்று கொண்டு நமது பரிசுத்த வாழ்வை இன்னும் அதிகமாக்குறார்.
இந்த அருளை பெறுவதற்கு , கடவுளுடன் நாம் இணைந்து பணியாற்ற நாம் விருப்பம் கொண்டு தயாராய் செல்ல வேண்டும். நாம் போதனைகளை பெறுவதற்கும், மனம் மாறுதலுக்கு உட்பட நம்மை தாழ்மை படுத்திக்கொள்ள வேண்டும்.
தந்தை கடவுளின் விருப்பத்தை இயேசுவுடன் இணைந்து நாம் செய்ய நம்மையே உட்படுத்தி கொள்ளும் பொழுது நமக்கு பதில் தெரியாத கேள்விகள் அனைத்திற்கும் பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு வெளிப்படும். நாம் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில், இயேசுவுடன் இணைந்து பரிசுத்த வாழ்வில் வளர்வோம்.