மே 22 2016 ஞாயிறு
நற்செய்தி மறையுரை
மூவொரு கடவுள் திருவிழா
Proverbs
8:22-31
Ps 8:4-9
(with 2a)
Romans 5:1-5
John
16:12-15
யோவான் நற்செய்தி
12“நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.
13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.
14அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.
15தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்றேன்.
(thanks to www.arulvakku.com)
எந்த பதிலுக்காக கடவுளிடம் வேண்டி நிற்கிறீர்கள் ?
உங்களுக்கு அறியாத ஒன்றை, கடவுள் நம்பிக்கையுடன் உங்களிடம் கொடுப்பார், என்று எதனை எதிர்பார்த்து
காத்து இருக்கிறிர்கள். ? இயேசுவிடம் நீங்கள் கேட்டு அதற்கு இன்னும் அவரிடமிருந்து
பதில் வரவில்லை. ? திருச்சபையின் போதனைகளில்
உங்களுக்கு புரியாதது எது ? அல்லது நீங்கள் அதனுடம் ஒத்து போகிறீர்களா ? இன்றைய
நற்செய்தியில், இயேசு, " நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது"
என்று கூறுகிறார் .
நாம் ஏன் இன்னும் தயாராகவில்லை ? ஏனெனில் பரிசுத்த ஆவி நம்மை தயார்படுத்த நாம்
அனுமதிக்க வேண்டும். கடவுள் நம்முள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நாம் அவரிடம்
சரணடைதல் வேண்டும். உண்மையில் இவையெல்லாம் நமக்கு ஆசிர்வாதமாக இல்லாமல், சுமையாகவே
இருப்பதால், நாம் உடனே இதனை ஒதுக்கி விடுகிறோம்.
இயேசு சொன்ன ஒவ்வொன்றும், பரிசுத்த ஆவியின் மூலம் தந்தையிடமிருந்து வந்தவை. கடவுள் நமக்கும் அதே ஆவியையு,ஞானத்தையும்,
உண்மையையும் அருளியுள்ளார். ஆவியின் செயலுக்கு நம்மையே அர்ப்பணிக்க வில்லை
என்றால், அந்த அன்பளிப்புகள் அனைத்தும் பயன் இல்லாமல் போய் விடும்.
மூவொரு கடவுளில், தந்தை நம் பாவங்களை மன்னிக்கிறார். இயேசு, அந்த மன்னிப்பை
நமக்கு வழங்குகிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மை தூய்மை படுத்தி, இனிமேல் பாவம்
செய்யாமல் இருக்க ஆற்றலை கொடுத்து அனுப்புகிறார்.
பாவ சங்கீர்த்தனத்தில், குருவானவர் இயேசுவின் பிரசன்னமாக இருக்கிறார், கிறிஸ்துவின்
உடலாக (திருச்சபை) குருவானவர் அங்கே இருக்கிறார். பாவ மன்னிப்பு குருவானவர்
பரிசுத்த ஆவியின் மூலம் கொடுக்கிறார். ஆனால், இது உங்கள் குற்ற உணர்வை எடுக்கிறது;
பாவ வாழ்விலிருந்து உங்களை எடுத்து விட்டு பரிசுத்த வாழ்விற்கு மாற்றுகிறது. பாவ சங்கீர்த்தன அருட் சாதனம் மூவொரு கடவுளின்
நேரடி தொடர்பாக இருக்கிறது , மூவொரு கடவுள் நம் மன வருத்தத்தை ஏற்று கொண்டு நமது
பரிசுத்த வாழ்வை இன்னும் அதிகமாக்குறார்.
இந்த அருளை பெறுவதற்கு , கடவுளுடன் நாம் இணைந்து
பணியாற்ற நாம் விருப்பம் கொண்டு தயாராய் செல்ல வேண்டும். நாம் போதனைகளை
பெறுவதற்கும், மனம் மாறுதலுக்கு உட்பட நம்மை தாழ்மை படுத்திக்கொள்ள வேண்டும்.
தந்தை கடவுளின் விருப்பத்தை இயேசுவுடன் இணைந்து
நாம் செய்ய நம்மையே உட்படுத்தி கொள்ளும் பொழுது நமக்கு பதில் தெரியாத கேள்விகள் அனைத்திற்கும்
பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு வெளிப்படும். நாம் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில்,
இயேசுவுடன் இணைந்து பரிசுத்த வாழ்வில் வளர்வோம்.
© 2016 by Terry A. Modica
No comments:
Post a Comment