மே 15 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பரிசுத்த ஆவியின் திருவிழிப்பு திருவிழா
Acts 2:1-11
Ps 104:1,
24, 29-31, 34
1 Cor
12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John
20:19-23 (or John 14:15 -16,
23b-26)
யோவான் நற்செய்தி 14: 15-16, 23-26
தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும்
கற்றுத்தருவார்.
அக்காலத்தில் இயேசு தம்
சீடருக்குக் கூறியது: ``நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக்
கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை
உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.
என்மீது அன்பு
கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு
கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு
கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை.
நீங்கள் கேட்கும்
வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய
தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
என் பெயரால் தந்தை
அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.''
(thanks to www.arulvakku.com)
ஆவியின் ஆற்றலால் இயேசுவோடு இணைவோம்
இன்றைய நர்செய்தியில்- யோவான் (20:19-23) - "உங்களுக்கு
அமைதி உரித்தாகுக" என்று இரண்டு முறை இயேசு கூறுகிறார் . முதலில் அவரின் சீடர்களுக்கு
, அவர்கள் கவலையில் இருந்து விடுபட்டு, இயேசுவை அந்த குழப்பமான நேரத்தில் சரியாக
கண்டு கொள்ள இயேசு இவ்வாறு கூறினார்.
பிறகு, அவரின் இறைபணியை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என கூறி , "உங்களுக்கு அமைதி
உரித்தாகுக" என்று இயேசு கூறுகிறார். கடவுளுக்காக இந்த உலகில் இறைபணி செய்யும்போது
, பரிசுத்த ஆவியில் நாம் வாழும்போது நமக்கு கிடைக்கும் கனி தான் 'அமைதி'.
இயேசு நம்மமோடு இருக்கிறார் என்பதே நமக்கு சமாதானத்தையும் அமைதியையும் தரும்.
இயேசுவை பற்றி மற்றவர்களிடம் சொல்லும்பொழுதே நமக்குள் அமைதி பெறுவது என்பதே ஒரு
சவால் தான். இயேசுவை நாம் அறிவிக்கும்போழுது நாம் குறைவான தகுதியோடு இருக்கீறோம் என்றும்
, அதிக உற்சாகத்தோடும் இருக்கிறோம். நம்மை யாராவது கேலி செய்வோர்களோ அல்லது
நிரகரிப்பார்களோ என்றும் நாம் பயம் கொள்கிறோம். அதனால் தான் இயேசு நமக்கு பரிசுத்த
ஆவியை கொடுத்தார்.
கடவுள் நம்மை என்ன செயல் செய்ய சொல்கிறாரோ அதனை செய்வதற்கு தேவையான
அனைத்தையும் பரிசுத்த ஆவி நமக்கு கொடுக்கிறார். அதனால் நாம் எந்த தகுதியும்
குறைந்தவர்கள் அல்ல, மேலும், மக்கள் நம்மை நிராகரித்தாலும், நம்மை ஆவியானவர்
ஆறுதல் படுத்தவும் செய்கிறார்.
சமாதானமும் அமைதியையும் பரிசுத்த ஆவி நமக்கு அருளுகிறார். இயேசுவோடும், அவரின்
பரிசுத்த ஆவியீன் ஆற்றலோடும் நாம் இணைந்து இருப்பதற்கு நமக்கு கிடைக்கும் மிக
பெரிய அன்பளிப்பு நமது உள்ளார்ந்த அமைதியாகும். யார் என்ன செய்தாலும், எந்த
மாதிரியான எதிர்ப்புகள் வந்தாலும், அல்லது எதுவும் வராமல் இருந்தாலும், நம்
உள்ளத்தில் பேரமைதி இருக்கும். அது பரிசுத்த ஆவியின் கனி.
நற்செய்தியின் வாசகத்தில் இறுதியில், இயேசு, முதல் சீடர்களுக்கு, முதல்
கத்தோலிக்க குருக்களுக்கு , பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுக்கிறார். பாவ
சங்கிர்த்தன அருட்சாதனத்தை நமக்கு வழங்குகிறார். இதன் மூலம் இயேசுவே குருவின் மூலமாக
நம்மிடம் வருகிறார்.
பாவ உலகில் இருக்கும் பொழுதே, ஆவியின் மன்னிக்கும்
ஆற்றல், நம்மை எல்லாம் அமைதியில் இருக்க வைக்கிறது. மன்னிப்பதும் மிக கஷ்டமான
காரியம் தான், ஆனால், கிறிஸ்துவின் ஆவியுடன் , நம்மால் மன்னிக்க முடியும். நம்மை
காயபடுத்துபவர்களை நம்மால் மன்னிக்க முடியும். அவர்கள் மனம் திருந்தாவிட்டாலும்
கூட நம்மால் மன்னிக்க இயலும். இது தான் நமக்கு அமைதியை தருகிறது.
No comments:
Post a Comment