Friday, May 6, 2016

மே 8 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை



மே 8 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் விண்ணேற்ற பெருவிழா
Acts 1:1-11
Ps 47:2-3, 6-9
Ephesians 1:17-23
Matthew 28:16-20 

மத்தேயு நற்செய்தி

இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49; யோவா 20:19 - 23; திப 1:6 - 8)
16பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.

17அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.

18இயேசு அவர்களை அணுகி, 
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.
19எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
 என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இயேசு ஏன்  விண்ணகம் சென்றார்?
இயேசு உயிர்த்தெழுந்தது முதல், அவர் தன் இறைபணியை தொடர்ந்து செய்திருந்தால், எத்தனை மக்கள் மனம் மாறியிருப்பார்கள் ? என்று கற்பனை பண்ணி பாருங்கள். இயேசு இறந்ததை பார்த்த பரிசேயர்கள் கூட இயேசுவின் காலடியில் கூட விழுந்திருப்பார்கள் .
எனினும்,கடவுளின் இவ்வுலக மீட்பின் திட்டம் நாம் நினைப்பதை விட பெரியது. இயேசு இந்த பூமயில் நடந்த பொழுது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். பிறகு தன்னையே திவ்ய நர்கருனையாக சீடர்களுக்கு கொடுத்த பிறகு அவர் ஒவ்வொரு மனிதனும் அந்த அன்பளிப்பை முழு அன்புடனும், ஆர்வத்துடனும் பெறுகிற பொழுது, அங்கு இயேசு மனிதனாக மாறுகிறார். நாம் இயேசுவை திவ்ய நற்கருணையில் பெரும் பொழுது நாம் அவரின் இறைபனியோடு நம்மை இணைத்து கொள்கிறோம்.
இன்றைய  நற்செய்தியில் பார்ப்பது போல, இயேசு விண்ணகம் செல்வதற்கு முன்பு, ஒவ்வொரு சீடருக்கும் கட்டளை கொடுக்கிறார். -- உங்களுக்கும் சேர்த்து தான் - அவர் கட்டளை கொடுக்கிறார். "கட்டளை"  என்பது இங்கே , இயேசுவின் பணியை  நாம் தொடர்ந்து செய்ய வேண்டும் , அந்த இறைபணியை அனைவரும் இணைந்து செய்தல் வேண்டும். இந்த 'கட்டளியிட்டு அனுப்புதல்' என்பது ஒவ்வொரு திருப்பலியிலும் இறுதியில் நடக்கிறது. இயேசு , குருவின் மூலமாக நமக்கு கட்டல்லியிட்டு அனுப்பிகிறார். கடவுளை அன்பு செய்யவும் , இந்த உலகில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவும், நம்மை குருவானவர் ஆசிர்வதித்து அனுப்புகிறார்.
மனிதானாக, இந்த உலகை மாற்ற நாம் தகுதிகள் குறைந்து உள்ளோம். அதனால் இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை அளித்தார், நாம் நமது ஆவியை , பரிசுத்த ஆவியுடன் இணைந்து, கடவுளை நம்பி நாம் இறைபணி ஆற்றும்பொழுது, நம்மில் தகுதி இல்லை என்பது ஒரு குறையே இருக்காது. கிறிஸ்துவின் கைகளாக , அவரின் கால்களாக , இயேசுவின் குரலாக மாறி, இந்த உலகில் இறைபணி செய்ய நாம் நமது முயற்சியை செய்து பரிசுத்த வாழ்வில் வளர தயாராய் இருக்கிரோமா ?
இயேசு விண்ணகத்திற்கு சென்று விட்டதால், அவருடைய கைகளாக நம் கைகள் இருக்கிறது, அவரின் குரலாக நம் குரல் இருக்கிறது.
இந்த உலகில் இருக்கிற சாத்தானால் நீங்கள் வருத்தமாக இருக்கின்றீர்களா ?  கடவுள் இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்ற பெரிய திட்டம் வைத்திருக்கிறார்.
அநிதியாக நடைபெறும் தொலைக்காட்சி நிகழ்வுகள் ? வேலையிடத்தில் நடைபெறும் அதர்மங்கள்? பங்கில் இருக்கும் பிரிவுகள் , நமது தலைவர்கள் நம்மை அவமானபடுத்துவது? இது போன்ற சாத்தானின் செயல்களால் வருத்தபடுகிரீர்களா ? இயேசு உங்களை விட மிகவும் கவலை படுகிறார், இந்த செயல்களால் இன்னும் வருத்தபடுகிறார். மேலும் உங்கள் மூலமாக இதனை அப்புறபடுத்த விரும்புகிறார்.
இயேசு விண்ணகம் சென்று , பரிசுத்த ஆவியை இந்த உலகத்திற்கு அனுப்பியதிலிருந்து , கடவுள் அவரது இறைபணியை நம் மூலம் செய்ய நம்மை தேர்வு செய்திருக்கிறார். முதலில் நம் வீட்டில், பிறகு நமது பங்கில், மேலும் பல இடத்தில்.
என்னோடு இணைந்து , ஆண்டவரின் விண்ணேற்றம்  பெருவிழாவில் இந்த ஜெபத்தை சொல்லுங்கள்:
எங்கள் கடவுள் இயேசுவே, உங்கள் பரிசுத்த ஆவியை என்னில் நிரப்புங்கள், எந்த திறமைகளை , ஆற்றலை நான் உபயோகிக்க வேண்டுமோ, அதனை எனக்கு கொடுங்கள், அதனை எப்பொழுது எங்கே உபயோகிக்க வேண்டும் என காட்டுங்கள், அறிவுறுத்துங்கள். மேலும், எனது கர்வத்திளிருந்தும், பயத்திலிருந்தும் , மற்ற பாவங்களிலிருந்தும் நான் மாறி வர எனக்கு உதவி செய்தருளும். இவைகளெல்லாம் உன் இறைபணி செய்ய தடையாக இருக்கும், எனவே அதனை அகற்றிவிடும். ஆண்டவரே நான் உனது கைகளாக, கால்களாக , குரலாக இருக்க ஆசைபடுகிறேன். ஆமென்.


© 2016 by Terry A. Modica

No comments: