Friday, June 17, 2016

ஜூன் 19 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூன் 19 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 12ம் ஞாயிறு
Zec 12:10-11; 13:1
Ps 63:2-6, 8-9
Gal 3:26-29
Luke 9:18-24

லூக்கா நற்செய்தி
இயேசுவைப்பற்றிய பேதுருவின் அறிக்கை
(
மத் 16:13 - 19; மாற் 8:27 - 29)

18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம்
நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?”
 என்று அவர் கேட்டார்.

19அவர்கள் மறுமொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்என்றார்கள்.

20
ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?”
 என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியாஎன்று உரைத்தார்.

21இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
இயேசு தம் சாவை முதன் முறை முன்னறிவித்தல்
(
மத் 16:20 - 28; மாற் 8:30; 9:1)
22மேலும் இயேசு
மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்
 என்று சொன்னார்.

23பின்பு அவர் அனைவரையும் நோக்கி,
என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.

24ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.

(Thanks to www.arulvakku.com)
உண்மையிலே இயேசு யார் ?
 நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?”  இந்த கேள்வியை தான் நம்மிடமும் இயேசு இன்றைய  நற்செய்தியில் கேட்கிறார். இயேசு தான் உண்மையான கடவுள், உங்கள் மெசியா , உண்மையாக உங்கள் அன்பும், போதகரும், வழிகாட்டுபவரும் இயேசு என்று உங்கள் வாழ்வு  காட்டுகிறதா ? உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் இயேசு தான் எல்லாம் என்று காட்டுகிறீர்களா?

நமக்கு நேரம் நன்றாக இருக்கும் பொழுது, நமக்கு கிடைத்த எல்லா நலன்களுக்கும், பலன்களுக்கும் இயேசு தான் காரணம் என்று நாம் சொல்கிறோமா?  உங்களை யாராவது கேலி செய்யும்போழுதோ அல்லது மற்றவர்களால் நீங்கள் காயமுரும்போழுது , இயேசு உங்கள் வலியெல்லாம்  எடுத்து கொண்டார், அவர்களின் பாவங்களை சிலுவைக்கு எடுத்து சென்றுவிட்டார்,  அதனால் மன்னித்து விடுவீர்களா? நீங்கள் கோபம் படும் பொழுது, அது நியாமான கோபமோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக கோபபட்டாலும், வெறுப்பான வார்த்தைகளை சொல்கிறீர்களா ? அல்லது இயேசுவிடம் வேண்டி உங்களுள் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என கேட்பிர்களா ?
இயேசு தான் கடவுள் என நம் உதடுகள் சொன்னாலும், நமது வாழ்வோ அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஒரு செய்தியை வெளி உலகிற்கு . சொல்லுகிறது, அதனால் நாம் மிகவும் கவனமாக செயல் பட வேண்டும். மன தெளிவோடும், நமது வார்த்தைகளும் செயல்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என கவனமாக செயல் பட வேண்டும். மேலும், எப்பொழுதெல்லாம் நாம் இதற்கு மாறாக செயல்படுகிறோம் என்பதனையும் கவனித்து மாற்றி கொள்ள வேண்டும்.

எப்பொழுதுமே, நம் உள்ளத்தில் உள்ள வலியினாலும் வேதனையினாலும் அல்லது ஏதாவது ஒரு செயலுக்கு எதிர் செயலாகவும் நாம் பாவம் செய்கிறோம். நமது அனுதின நடவடிக்கைகளை நாம் கூர்ந்து கவனித்து வந்தால், இயேசு யார் என்ற நம் புரிதலுக்கு எது தடையாக இறுக்கிறது என்பது நமக்கு தெரிய வரும். அதனை களைந்து இயேசு அன்பை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும் , அவரின் குனபடுத்துதலை நாம் பெற முடியும்.

"உண்மையான இயேசுவை என் வாழ்வு வெளிபடுத்துகிறதா? " இந்த கேள்வியை நாம் அனுதினமும் கேட்டு கொள்ள வேண்டும். இதற்கு பதில், நமக்கு எந்த விசயத்தில் எல்லாம் நாம் முயற்சி செய்து மாற வேண்டும் என்று கிடைக்கும். அதன் மூலம் இயேசு யார் என்பது இன்னும் நன்றாக நமக்கு தெரிய வரும். இந்த பதில்கள் நாம் ஏன் இன்னும் நல்ல முயற்சியுடன் மன மாற்றத்தை உருவாக்க முடியும், என்பதை காட்டும். நம் வாழ்வு , நம் பேச்சிற்கு எதிர் மறையாக இருக்கும் பொழுது மக்கள் நம்மை நம்ப மாட்டார்கள் . ஏனெனில் நமது வாழ்வே நாம் இயேசுவை நம்ப வில்லை என்று சொல்லிவிடும்.

இயேசு யார்? உங்களை இயேசுவிற்கு மிகவும் அதிகமாக தெரியும். உங்கள் மேல் முழுதும் அக்கறை கொள்கிறார். உங்களுக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ , அவர் உங்களை அன்பு செய்கிறார். மேலும் எபொழுதும் உதவி செய்கிறார். அந்த உதவியை நீங்கள் பார்க்காமல் கூட இருக்கலாம். எப்பொழும் இயேசு உங்களை கைவிடமாட்டார்.
இதனை ஓரளவிற்கு நாம் நம்பினால், நாம் எந்த பிரச்சினையாக இருந்தாலும், பாதுகாப்பாக உணர முடியும். மேலும் அவரின் அன்பில் என்றும் நிலைத்திருக்க எல்லா முயற்சிகளும் செய்வோம். நம் அனுதின சிலுவைகளை அவரிடம் எடுத்து சென்று , பிறரை அன்பு செய்வதில் நாம் கிறிஸ்துவை பின் பற்றுவோம்.

© 2016 by Terry A. Modica

No comments: