ஜூன் 26,
2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு
1 Kings
19:16b, 19-21
Ps 16:1-2,
5, 7-11
Gal 5:1,
13-18
Luke 9:51-62
லூக்கா நற்செய்தி
5. எருசலேம் நோக்கிப் பயணம்
இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த சமாரியர்
51இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,
52தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
53அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
54அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள்.
55அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.
56பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்கள்
(மத் 8:19 - 22)
(மத் 8:19 - 22)
57அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.
58இயேசு அவரிடம்,
“நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை”
என்றார்.
59இயேசு மற்றொருவரை நோக்கி,
“என்னைப் பின்பற்றிவாரும்”
என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார்.
60இயேசு அவரைப் பார்த்து,
“இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்”
என்றார்.
61வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார்.
62இயேசு அவரை நோக்கி,
“கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல”
என்றார்.
(thanks to www.arulvakku.com)
நிராகரிப்பை எப்படி எதிர்கொள்வது
நீங்கள் எப்படி நிராகரித்தலை கையாள்வீர்கள்? இன்றைய நற்செய்தி , சீடர்கள் எப்படி நிராகரித்தலை
எதிர்கொண்டார்கள் என்று காட்டுகிறது. இயேசு கேட்டு கொண்டது போல , சீடர்கள் அந்த
சமாரியர் ஊருக்கு இயேசு வருவதற்கு முன்னே
சென்றார்கள். அங்கே உள்ள மக்களை ஒன்றாக கூட்டி இயேசுவின் வருகைக்கு தயார் படுத்த
சென்றார்கள். சமாரியர்கள் யூதர்கள் மேல் எதிராக ஒரு முடிவு எடுத்து இருந்ததால்,
இயேசுவை அங்கே வருவதை, போதிப்பதை அவர்களால்
ஏற்க முடியவில்லை. அவர்கள் இருதயம் கண்டிப்பாக இயேசு சொல்ல வந்ததை நெருக்கத்தோடு
ஏற்று கொண்டிருக்கும். ஆனால், அந்த வாய்ப்பை, இந்த உலகை காக்க வந்த மெசியாவை ,
அவர் நிராகரித்து விட்டனர்.
நீங்கள் இயேசுவை உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கொண்டு செல்லும் பொழுது ,
நீங்கள் எப்படி உணர்வீர்கள் ? சிலர் நீங்கள் சொல்வதை கேட்காத பொழுது , நீங்கள்
என்ன மாதிரியாக அடுத்த செயலை செய்வீர்கள்? அல்லது நீங்கள் திருச்சபையின் போதனையை
விளக்கி சொல்ல முற்படும்பொழுது , மற்றவர்கள் அதனை புரிந்து கொள்ள முயற்சிக்காத
பொழுது நீங்கள் எப்படி உணர்வீர்கள் ?
இயேசுவோடு சென்ற சீடர்களும்,நிராகரிப்பை கண்டிப்பாக நம்மை போலவே பிடிக்காமல்
இருந்தனர். இயேசுவின் தோழர்களான ,அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக்
கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து
தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள்.
இயேசு இதற்கு முன்னதாகவே, "உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள்
அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது
நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். "
என்று சீடர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். இப்போது எதை போதித்தாரோ அதனையே தம்
வாழ்விலும் செய்து காண்பித்தார்.
சமாரியரின் ஊரை விட்டு வெளியேறினார்., அவர்களுக்கு, இயேசுவின் உண்மையும்,
போதனையும் தேவையாக இருந்தும், அந்த ஊரின் மேல், இயேசுவின் நம்பிக்கையை திணிக்கவில்லை.
இயேசுவை பின் செல்ல, நாம் நிறைய விசயங்களை விட்டு கொடுக்க வேண்டும். நம்மை
நிராகரித்தவர்கள் மேல் நாம் கோபம் கொண்டிருப்பதையும் விட்டு விட வேண்டும். மற்றவர்கள்
ஏன் நமது மூடை மாற்ற நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்.? நமது காலணிகளை துடைப்பது
என்பது, நமது கெட்ட எண்ணங்களை, கோபத்தை தூக்கி எரிந்து விட்டு , நமது சந்தோஷ மன
நிலையை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.
இன்றைய நற்செய்தியின் முடிவில், இயேசுவை பின் செல்வது என்பது , திரும்பி
பார்க்காமல் முன்னேறி செல்ல வேண்டியது என்று சொல்கிறார். நாம் எப்போதுமே, ஏதோ ஒரு
விசயத்தை விட்டு விலகி செல்கிறோம். -- நிராகரிப்பை விட்டு விலகி செல்கிறோம், அன்பு
செய்யாத ஒருவரை விட்டு விலகி செல்கிறோம், நாம் கொடுக்கும் போதனைகளை ஏற்று கொள்ளாத
ஒருவனை விட்டு விலகி செல்கிறோம். -- அதன் மூலம் நாம் இயேசுவின் அன்பை அரவனைத்து
கொள்கிறோம்.
நாம் முன்னோக்கி செல்ல, இயேசுவை நம் இருதயத்தில் வரவழைக்க,
இருதயத்தை தயார்படுத்த, பரிசுத்த ஆவியின் துணை நமக்கு வேண்டும். அவரால் தான் நம்மை
தயார் படுத்த முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். யாரையாவது
இயேசுவிடத்தில் கொண்டு செல்ல நாம் முயற்சி
செய்யும் பொழுது, நாம் முயற்சி செய்யும் பொழுது ஜெயிக்க வில்லை என்றால்,
நாம் உண்மையாக தோற்கவில்லை, மாறாக, நாம் விதை விதைக்கிறோம், ஆனால், இன்னும் அறுவடை
செய்ய வில்லை. பரிசுத்த ஆவி அந்த வேலையை தொடரட்டும், நாம் வேறு இடத்திற்கு
செல்வோம்.
© 2016 by Terry A. Modica
No comments:
Post a Comment