ஜூன் 5 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 10ம் ஞாயிறு
1 Kings
17:17-24
Ps
30:2,4-6,11-13
Galatians
1:11-19
Luke 7:11-17
லூக்கா நற்செய்தி
நயீன் ஊர்க் கைம்பெண் மகன் உயிர்பெறுதல்
11அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர்.
12அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.
13அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, “அழாதீர்” என்றார்.
14அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” என்றார்.
15இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.
16அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
17அவரைப்பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.
(thanks to www.arulvakku.com)
எல்லா பிரச்சினைக்கும் நம்பிக்கையுடன் அணுகுங்கள்
இன்றைய நற்செய்தியே , நமக்கு நம்பிக்கை கொடுக்கும்
செய்தியாகும். நற்செய்தியில் வரும் கைம்பெண்ணை அன்னை மரியாளாகவும் , இறந்த மகனை
யேசுவாகவும் நினைத்து கொள்ளுங்கள். கிறிஸ்துவின் மீட்பை இந்த நிகழ்வு முன்னெடுத்து
காட்டுகிறது.
விசுவசாத்தை விட்டு போனவர்களை, அல்லது பலர் பேச்சுக்கு ஆளானவர்களை, அல்லது சிலர் மிக பெரிய இயற்கை
அழிவிற்கு (நெருப்பு, வெள்ளம்) ஆட்பட்டு பல பொருட்களை இழந்தவர்களை , இந்த
நற்செய்தியில் வரும் இறந்த மகனை போல
நினைத்து கொள்ளுங்கள்.
"கடவுள் இவர்கள்
அனைவரையும் சென்று பார்த்துள்ளார்" என்பது நற்செய்தி. கிறிஸ்துவின் ஆவியானவர்
, அவர்களிடம் உள்ள எல்லா பயத்தையும், கோபத்தையும், பழி வாங்கும் எண்ணத்தையும் ,
விரக்தியையும் போக்கி விடும். "நான் சொல்கிறேன், எழுந்திடு" என்று இயேசு
சொல்கிறார். மோட்சத்தில் உள்ள கடவுள் நமக்கு புதிய வாழ்வை கொடுக்க இருக்கிறார்.
"எழுந்திடு"
என்பதற்கு அர்த்தம் என்னவெனில், நமது அனுதின நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும்
என்று அர்த்தம். மேலும், யாரும் பழித்தாலும், அவர்களுக்கு எதிராக நின்று போராட
வேண்டும். இது மாதிரி பிரச்சினை பண்ணுபவர்களை
விட்டு விலகி செல்ல வேண்டும். மேலும், இந்த பழிகளிலிருந்து விடுபட
பெருமக்களிடம் அறிவுரை பெற்று அதன் படி நடக்க வேண்டும்.
இரட்சிப்பில்,
எப்பொழுதுமே புதியதாக ஒன்று இருக்கும்: பிரச்சினைகளை கையாள புதிய முறை கிடைக்கும்,
புதிய வேலை கிடைக்கலாம், புதிய பங்கிற்கு சென்று சேரலாம், மாறிய வாழ்வுடன் வாழ,
மனதில் தெம்பும், உறுதியும் கிடைக்கும்
"எழுந்திடு" என்பது , தந்தை கடவுளின் அன்பும்
பாதுகாப்பையும் பற்றிய புதிய புரிதலை நமக்கு கொடுக்கிறது. துன்பத்தில்,
வேதனையிலும் , சாத்தானின் புண்களால் ஏற்பட்ட துயரத்தின் நடுவினில் நமக்கு கடவுளின்
அன்பு ஆறுதலாக இருக்கிறது. அந்த அன்பே நமக்கு மீட்பை கொடுக்கிறது. கடவுள் நமக்கு
நாம் எப்படி , எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆலோசனைகள் வழங்குகிறார். அதன் படி
நாம் நடக்காமல் , நம் வழியில் சென்று மீண்டும் துன்ப பட்டால், "எழுந்திடு
,புதிய நாள் தொடங்குகிறது " என்று கடவுள் மீண்டும் சொல்கிறார்.
இயேசு மீட்பர். அவர் எல்லா
தடைகளையும், கடந்து, இறப்பை , சாத்தானை வெற்றி
கொண்டார். நாம் நமது சொந்த நடத்தைகளால், தவறு செய்து, சாத்தானின் தூண்டுதலால்,
நம் வாழ்வை நாமே குழைத்து கொள்கிறோம். ஆனால், நமது தவறுகளையும் பொறுத்து கொண்டு,
இயேசு, நம்மோடு இருக்கிறார். நமக்கு உதவி செய்கிறார்.
நாம் கேட்காமலேயே இயேசு நமக்கு உதவி செய்கிறார்.
அவ்வளவு பேரிரக்கம் கொண்டவர்!. நாம் அவர் கொடுக்கும் உதவியை நிராகரித்தாலும், அவர்
உதவி செய்வதை நிறுத்துவதில்லை. மிகவும் அக்கறை உள்ளவர்.
நம்பிக்கை என்பது கடவுளின் நல்ல செயல்களை, அவரின்
பேரிரக்க மனப்பான்மையை எப்பொழதும் நினைவில் கொள்வது. நீங்கள் நம்பிக்கையில்
இன்னும் சிறப்பாக விசுவாசத்தை வளர்க்கும் பொழுது , இந்த நம்பிக்கையை, விசுவாசத்தை
உங்கள் அருகில் இருக்கும் அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள் , அவர்களுக்கும் இயேசு
சொல்லும் 'எழுந்திடு' வார்த்தையை கேட்க வையுங்கள்.
© 2016 by Terry A. Modica
No comments:
Post a Comment