Friday, September 23, 2016

செப்டம்பர் 25, 2016 ஞாயிறு நற்செய்தி, மறையுரை (homily)


செப்டம்பர் 25, 2016   ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின்  26ம் ஞாயிறு
Amos 6:1a, 4-7
Ps 146:(1b) 7-10
1 Timothy 6:11-16
Luke 16:19-31

லூக்கா நற்செய்தி

செல்வரும் இலாசரும்
19செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
20இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.

21அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

22அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

23அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.

24அவர், ‘தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்என்று உரக்கக் கூறினார்.

25அதற்கு ஆபிரகாம், ‘மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.

26அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாதுஎன்றார்.

27அவர், ‘அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.

28எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமேஎன்றார்.
29அதற்கு ஆபிரகாம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்என்றார்.

30அவர், ‘அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்என்றார்.

31ஆபிரகாம், ‘அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்என்றார்.

(thanks to www.arulvakku.com)

நம்மை தாராள குணம் கொண்டவராக மாற்றுவது எது ?

இன்றைய நற்செய்தியில் வரும் பணக்காரனின் பாவம் என்ன?  அவர் இறந்த பிறகு எது அவரை துன்புறுத்தியது? பணக்காரனாக இருப்பது ஒன்றும் பாவம் இல்லை; லாசருடன் அவருக்கு உள்ளதை பகிர்ந்து கொள்ளாமல் இருந்ததே அவர் செய்த பாவம் ஆகும். அவருக்கு , பகிர்ந்து கொள்ள பல வாய்ப்புகள் இருந்தும் அவர் பகிர்ந்து கொள்ளாததே அவர் செய்த பாவம்.

மரணம் ஒன்றும் நமது வாழ்வின் முடிவல்ல; மரணத்தின் மூலம் நமது ஆன்மா முழுதுமாக கடவுள் அன்பில் வாழும் வாய்ப்பை பெறுகிறோம். கடவுள் உண்மையில் யார், அவர் நமக்கு கொடுத்த எல்லா கொடைகளையும், அன்பையும் முழுதும் அறிந்து கொள்ள மரணம் உதவுகிறது. அந்த திறமைகளை, கொடைகளையும் சரியாக உபயோகபடுத்தினோமா என்றும் மரணம் நமக்கு தெரியபடுத்தும்.

எப்பொழுதெல்லாம் நமக்கு அளிக்கப்பட்ட திறமைகளை, கொடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறோமோ, அப்பொழுது நாம் கடவுளின் இறையரசில் முதலீடு செய்கிறோம். கடவுளின் பொருளாதாரத்தில், நம் முதலீடு எப்பொழுதுமே நல்ல பலனை தரும். நாம் கொடுப்பதை விட அதிகமாக நாம் பெறுகிறோம், அதன் மூலம் இன்னும் பலருக்கு பகிர முடியும்.

அதற்கு மாறாக, நம்மிடம் உள்ளதை பகிராமல் இருக்கும் பொழுது, இருட்டு அறையில் பூட்டப்பட்டு இருக்கும் மலரை போன்று தான் இருக்கும். சீக்கிரம் வாடிவிடும். இருளில் அதனால் வளர முடியாது. நம்மிடம் மட்டுமே வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் உபயோகமற்று போய்விடும், மேலும், விசமாக கூட மாறி விடும். உணர்வு பூர்வமாகவும், தெய்வீக வாழ்விலும் ஒரு தடை ஏற்பட்டு விடும். கொடிகள் அனைத்தும் கேட்டு போய் விடும். நமது சுய நலம்,  தாராள குணத்தின் தந்தையான கடவுளடன் உள்ள தொடர்பை துண்டித்து விடும்.
ஒவ்வொரு நாளும்-- கடவுளிடமிருந்து நமக்கு கிடைத்த கொடைகளை --  நாம் பகிர்ந்து கொள்ள பல வாய்ப்புகள் நமக்கு  கிடைக்கிறது.

இன்றைய நற்செய்தியில் வரும் பணக்காரன் இலாசரை விட்டு விலக காரணம், இலாசர் தொழு நோயினால் அவர் தோல் முழுதும் புண்களாக இருந்தது, மேலும் அது ஒரு தோற்று நோய்.

இதிலிருந்து ஒரு கேள்வி எழுகிறது: ஒரு சிலரை பார்க்கவும், அவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும், நாம் அசூசையாக நினைக்கிறோமா? அல்லது நம்மில் உள்ள பயம் நம்மை தள்ளி நிற்க வைக்கிறதா?. அல்லது பொறாமையும், மன்னிக்கமுடியாத கோபமும் நம்மை அவர்களிடமிருந்து தள்ளி வைக்கிறதா ? கடவுளுடன் இணைந்து , எல்லையில்லா மகிழ்ச்சியிலும், நிலையான வாழ்விலும் நாம் அனுபவம் பெற, இப்படியே நாம் இருக்க கூடாது. அன்பினால் நாம் ஊக்கம் அடைந்து , கடவுளின் பகிர்தலில் நாம் ஈடு படவேண்டும். அன்பிற்கு எல்லை இல்லை; எப்போழுதுமே தாராள குணம் உடையது.

இரண்டாவது வாசகத்தில்,   " விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு" என்று சொல்வதை நாம் கேட்கிறோம். யாரோடு நாம் போராடுகிறோம்? நம்மோடு?  நீங்கள் தாரளமாக இருக்க கிடைத்த வாய்ப்பை முன்பை விட இன்று சரியாக பயன் படுத்தி இன்னும் புனிதமாக இருக்கிறீர்களா? தெய்வீகத்தில் இன்னும் உறுதியாக இருகிறீர்களா? அதன் மூலம் இன்னும் அன்புடனும் தாராள குணத்துடன் இருக்க முடியும்?

© 2016 by Terry A. Modica


Friday, September 16, 2016

செப்டம்பர் 18,2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை (homily)

செப்டம்பர் 18,2016  ஞாயிறு நற்செய்தி மறையுரை (homily)
ஆண்டின்  25ம் ஞாயிறு
Amos 8:4-7
Ps 113:1-2, 4-8
1 Timothy 2:1-8
Luke 16:1-13

லூக்கா நற்செய்தி

முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்
1இயேசு தம் சீடருக்குக் கூறியது: 
செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.

2தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாதுஎன்று அவரிடம் கூறினார்.

3அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.

4வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

5பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார்.

6அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்என்றார்.

7பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை கோதுமைஎன்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்என்றார்.

8நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

9ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.

10மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.

11நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?

12பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?

13எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது.
 (thanks to www.arulvakku.com)

கடவுளின் பொருளாதாரம்

ஏழ்மையான பல புனிதர்களின் வாழ்வை நாம் மாதிரியாக பார்த்து விட்டு, அது தான்
பரிசுத்தத்திற்கு வழி என்று நாம் நினைத்துவிட முடியாது. இன்றைய ஞாயிறின் நற்செய்தி, ஒருவர் செல்வந்தராக இருந்தும், பரிசுத்தமாக வாழ முடியும் என்று .சொல்கிறது.

நமது செல்வங்கள் எல்லாம் கடவுளின் அன்பளிப்பு என்றும் , அவை அனைத்தும் இறையரசு வளர உதவியாக இருக்க வேண்டும் என்றும் நாம் அறிந்து புரிந்து நடந்தால், நாம் பரிசுத்தராக இருக்கிறோம். ஆனால், அந்த செல்வத்தின் மீதும் , பணத்தின் மீதும் ஒட்டி கொண்டு அவையெல்லாம் நம் சொந்த ஆசைகளுக்கு உபயோக படுத்தினால், நாம் கடவுளிடமிருந்து பிரிந்து கொள்கிறோம், ஏனெனில், கடவுளின் வார்த்தைகள், தாராளமாக நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.

செல்வம் சேர்ப்பதை மட்டுமே நாம் குறிக்கோளாக கொண்டு , மற்றவர்களுக்கு நாம் பகிர்ந்து அளிக்காமல் இருந்தால், கடவுள் நமக்கு தலைவர் இல்லை. இது செல்வத்திற்கு மட்டும் பொருந்தாது, மேலும் நம்மிடம் உள்ள திறமைகள் ஆற்றல்கள் அனைத்திற்கும் பொருந்தும்..
நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு அருள்,திறமை . வழங்கபட்டிருக்கிறது . உங்கள் திறமைகளை , ஆற்றல்களை எந்த அளவிற்கு நீங்கள் மற்றவர்களின் பயனுக்காக உபயோகிக்க தயாராய் இருக்கிறீர்கள் ?

"நேர்மையற்ற செல்வம்" என்று இயேசு நற்செய்தியில் சொல்வது , "மற்றவர்களுக்கு சொந்தமான"  செல்வம் ஆகும். நாம் மற்றவர்களின் பணத்தை (எடுத்து காட்டாக, வங்கி கடன் ) நமது சொந்த ஆசைக்கு உபயோகபடுத்தி, கடவுளின் இறையரசை மகிமை படுத்தவில்லை என்றால், நாம் இயேசுவின் நம்பிக்கைக்கு உரிய வேலையாள் இல்லை. (எடுத்து கட்டாக, மிக பெரிய வீட்டை கடன் வாங்கி , அதனை திருப்ப செலுத்த நாம் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தால், மற்றவர்களை அன்பு செய்ய நமக்கு நேரம் இல்லாமல் போகும் )

அதே போல, நமது நேரத்தை நமது சொந்த ஆசைகளுக்காக செலவழித்து மற்றவர்கள் நமக்காக காக்க வைத்தோமானால், நாம் இறையரசிற்கு நம்பிக்கை ஆனவர்கள் இல்லை. இயேசு உங்கள் மூலமாக மற்றவர்களை ஆசிர்வதிக்க ஆசைபடுகிறார். அவருடைய அன்பளிப்பை உங்கள் மூலம் பகிர்ந்து அளிக்க விரும்பிகிறார். அதற்கான அழைப்பை உங்களுக்கு இயேசு கொடுத்துள்ளார். இந்த இறைவனின் பொருளாதார கொள்கையை , அதனை நாம் நிராகரித்தால் , இயேசு " உங்களுக்கு தேவையானதை யார் கொடுப்பார்?" என்று கேட்கிறார்.

நம்முடையது  எது? , நாம் கடவுளின் நம்பிக்கைக்கு உரிய வேலையாளாய் இருந்தால், அதுவே நமது நித்திய வாழ்விற்கு பெரும் செல்வம் ஆகும். ஆவியின் செல்வம் ஆக இருக்கும், கடவுள் நம்மை அங்கீகரிப்பார், முழு அன்புடனும், கடவுளை போற்றுவோம்.
செல்வத்துடன் பரிசுத்தமாக இருக்க, மற்றவர்களின்  அன்பிற்கு நாம் நம்பிக்கை உ ள்ளவனாக இருக்க வேண்டும், -கடவுள் அவர்கள் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாரோ -- அதே அன்பை நாமும் மற்றவர்கள் மேல் காட்ட வேண்டும். நம்மிடம் உள்ள உலக சொத்துக்கள், மற்று நித்திய வாழ்வின் செல்வ களஞ்சியங்கள் (விசுவாசம், ஞானம், நம்பிக்கை, இன்னும் பல) , அனைத்தையும் நாம் பகிர்ந்து கொள்ள, நாம் கடவுளின் நம்பிக்கைக்கு உரிய வேலையாட்களாய் இருப்போம்.


© 2016 by Terry A. Modica