செப்டம்பர் 4, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு
Wisdom
9:13-18b
Ps 90:(1)
3-6, 12-17
Philemon
9-10, 12-17
Luke
14:25-33
லூக்கா நற்செய்தி
இயேசுவின் சீடர் யார்?
(மத் 10:37 - 38)
(மத் 10:37 - 38)
25பெருந்திரளான மக்கள் இயேசுவோடு
சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது:
26“என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக்
கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது.
27தம் சிலுவையைச் சுமக்காமல் என்
பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.
28“உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும்
செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப்
பார்க்கமாட்டாரா?
29இல்லாவிட்டால் அதற்கு
அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும்
ஏளனமாக,
30‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே!
31“வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு
எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில்
உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா?
32எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே
தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?
33அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம்
விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
(thanks to www.arulvakku.com)
முன்னுரிமை
கடவுள் உடன் உள்ள உறவை விட ,
உங்கள் வாழ்வில் எதற்கு முன்னுரிமை
கொடுக்கிறீர்கள் ? இதனை தான் இயேசு இன்றைய
நற்செய்தியில் பார்க்க விரும்புகிறார். எந்த மக்களை ? எந்த வேலைக்கு? எந்த
சோதனைக்கு? எந்த நட்பிற்கு ? எந்த
இலக்கிற்கு ? எந்த மாதிரியான அனுதின செயல்களுக்கு நீங்கள் முன்னுரிமை
கொடுக்கிறீர்கள்?
உங்கள் சிலுவைகள் எதனை விட்டு விலக
நினைக்கிறீர்கள்? நீங்கள் அதிலிருந்து விலகினால் , இயேசுவை அவர் சிலுவையை விட்டு
நீங்களும் விலகி செல்கிறீர்களா ? (எது மாதிரியான அன்பின் தியாகத்தை நீங்கள் செய்ய
விரும்பில்லை? )
இயேசுவின் சீடராக இருப்பதற்கு,
நாம் அதிக முன்னுரிமை கொடுக்க வில்லை என்றால் -- அவரிடமிருந்து கற்று கொண்டு, அவரை
போல மாற முழுதும் நாம் முயற்சி செய்ய வேண்டும். -- அப்படி நடக்க வில்லை என்றால்,
நாம் இந்த வாழ்விற்கு சரியாக தயார் செய்ய வில்லை என்று அர்த்தம்.
இதனையே மாறாக சொல்வதானால், நாம் இந்த நல்ல நோக்கத்தை மையபடுத்தி நம் வாழ்வில் ஒவ்வொரு அடியும்
எடுத்து வைக்க வேண்டும், ஆனால், கிறிஸ்துவுடன் உள்ள நட்பு , நமது முன்னுரிமை ஆக
இல்லை என்றால், அவரின் வழிகாட்டுதலை,
ஆசிர்வாதத்தை, அதிசயங்களை நாம் விட்டு விடுவோம். இந்த உலக காரியங்களாலும் பாவத்திளும் நாம்
திசை திரும்பி விடுவோம். நமது சோதனைகளில் வெற்றியாளராக இல்லாமல் , தோல்வி
அடைவோம். இதில் ஏதாவது நல்லதை நாம் அடைந்தாலே
மிக பெரிய வெற்றியை விட அது எவ்வளவோ மேல், ஏனெனில், இறையரசு நாம் நினைப்பதை
விட மேலானது.
ஒரு சீடன் என்பவர் மாணவர் ஆவார்.
இயேசுவிடமிருந்து நாம் மற்றவர்களை எப்படி அன்பு செய்ய வேண்டும் என்று கற்று கொள்கிறோம்
, சிலுவையை சுமப்பதாக இருந்தாலும், நாம் இயேசுவிடம் இருந்து தான் கற்று
கொள்கிறோம். நிபந்தனை அற்ற அன்பான வாழ்விலும், மன்னிக்கும் அன்புடனும் , நாம் மகிழ்வுடன் வாழ இயேசு நமக்கு கற்று
கொடுக்கிறார். நமது பரிசுத்த வாழ்வில் இடையூறாக வரும் அனைத்திற்கும் ஒரு எல்லையை
நாம் வகுத்து கொள்ளவும் இயேசுவிடம் இருந்து நாம் கற்று கொள்கிறோம்.
நாம் கிறிஸ்துவை பின் சென்று, அவரை
போல ஒவ்வொரு நாளும் மாற, நாம் தொடர்ந்து முயற்சி செய்து, நம் சிலுவையை நாமே
சுமந்து செல்ல நமக்கு தேவையான சக்தியை பெற, நாம் இயேசுவோடு இணைந்து அவரின்
ஆற்றலை நாம் முன்னேறுவோம். இந்த தொடர்பை நாம் விட்டு விலகும்போது, நாம்
கிழே விழுகிறோம். மேலும் சிலுவையின் பாரம் நாம் தள்ளுகிறது. ஆனால், இயேசு செய்தது
போல, மற்றவர்களுக்காக நாம் தியாகம் செய்ய
விருப்பத்துடன் இருந்தால், நாம் இயேசுவை முழுதும் அணைத்து அவருடன் நெருங்கி,
அவரின் அன்பை இன்னும் ஆழமாக பெற்று பரிசுத்த வாழ்வில் வாழ்வோம். இதுதான்
திருப்தியான வாழ்வு !
© 2016 by Terry A. Modica
No comments:
Post a Comment