அக்டோபர் 23, 2016 ஞாயிறு நற்செய்தி
மறையுரை
ஆண்டின் 30ம் ஞாயிறு
Sirach 35:12-14,16-18
Ps 34:2-3, 17-19, 23 (with 7a)
2 Timothy 4:6-8, 16-18
Luke 18:9-14
Ps 34:2-3, 17-19, 23 (with 7a)
2 Timothy 4:6-8, 16-18
Luke 18:9-14
லூக்கா நற்செய்தி
பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை
9தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:
10“இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.
11பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;
12வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’
13ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.”
14இயேசு,
“பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்”
என்றார்.
(thanks to www.arulvakku.com)
அன்பு எப்படி
நம்மை தாழ்த்தி, நீதிமானாக ஆக்குகிறது
இன்றைய
நற்செய்தியில், நமது செயல்கள் எல்லாம் நம் சொந்த நலனுக்காக தான் என்கிற
நோக்கத்திலேயே இருந்தால், அது அன்பால் உருவானது இல்லை என்றும், சுய நலத்தினால்
ஆனது எனவும் காண்கிறோம். "தன்னை தானே உயர்த்துகிறவன் தாழ்த்தபடுவான்".கூடிய விரைவிலோ அல்லது மெதுவாகவோ, தன்னை தானே
உயர்த்தி கொள்கிற மனிதன், தாழ்த்த படுவான், அதனை அவர்கள் உணர்ந்தார்களோ அல்லது
உணரவில்லையோ , ஆனால் இது நடக்கும். அவர்களின் சொந்த நடத்தையினாலே , அவர்கள் கீழே
தள்ளபடுவார்கள். அவர்களை அணு தினமும் சந்திக்கிறவர்கள், அவர்கள் மேல் உயர்ந்தா
அபிபிராயம் வைத்திருக்க மாட்டார்கள். கண்டிப்பாக கடவுளும் தான்.
இதற்கு மாறாக,
நாம் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்தினால், அது நம்மை தாழ்மை படுத்தும்.
அன்பு இல்லாமல்,
நாம் செய்வது எல்லாம் சரி தான் என்ற மனப்பான்மையில் நாம் இருந்தால், உண்மையில்
நாம் சரி கிடையாது. நமது நோக்கம் அன்பு ஒன்றை கொண்டதாகவே இருக்க வேண்டும். ஆனால்,
மற்றவர்கள் மேல் நம் கொண்ட அக்கறையினால், நாம் அவர்களுக்கு உதவும் பொழுது, நாம்
சரியாக தான் செய்கிறோம் என்ற தற்பெருமை, பரிசுத்தமாக நம்மை தாழ்மை படுத்தி
மாறிவிடும்.
நாம் மற்றவர்கள்
மேல் அன்பு கொண்டால் தான் நாம் சரியான , நீதியான மனிதர்கள், நாமே நம்மை நீதியானவன்
என்று சொல்வது நாம் உருவாக்கி கொள்வது. இது நம்மை உற்சாகபடுத்தும், அனால், அது சுய
நலத்தினால் உண்டான எண்ணம், அதனை வைத்து கொண்டு, நாம் கடவுளிடம் நல்ல பெயர் வாங்கி
விடலாம் என நினைக்க கூடாது, அதனால், நமக்கு ஏதாவது பயன் கிட்டும் எனவும் நினைக்க
கூடாது. அன்பு தான் சரியான நீதியை கொடுக்கும். அன்பு தான் நம்மை உற்சாகபடுத்தி மற்றவர்களுக்காக
நல்லது செய்ய தூண்டும்.
இன்றைய நற்செய்தி
உவமையில் வரும் பரிசேயரை பாருங்கள், நாமும் பல நேரங்களில் அதே போல தான் நடந்து
கொள்கிறோம். நீங்கள் பரிசுத்தமாக இருப்பதால், உங்களை விட குறை உள்ளவர்களை பற்றி
நினைத்து கொள்ளுங்கள், அவர்கள் கோவிலுக்கு சரியாக செல்லாமல், இருக்காலாம், உங்களை
போன்று ஜெபம் செய்யாமல் இருக்கலாம். உங்களின் நேரத்தை செலவிட , உங்களின் அக்கறையை
காண்பிக்க தகுதி இல்லாதவர் ஒருவரை நினைத்து கொள்ளுங்கள். மிகவும் கடினமாக அன்பு செய்ய
கூட முடியாத ஒருவரை நினைத்து கொள்ளுங்கள்.
நாமே நீதியானவர்
என நினைத்து கொண்டிருப்பவருக்கு, மருந்து , கடவுள் அவர்கள் மேல் கொண்டுள்ள
அக்கறையை நாம் எடுத்து அதனை மற்றவர்களுக்கு காண்பிக்க வேண்டும். நாம் கடவுளின்
அன்புடன் நம்மை இணைத்து கொள்ளும் பொழுது, நாம் அவர்கள் மேல் அக்கறை கொள்ள
ஆரம்பிக்கிறோம். இதனை இன்னும் நன்றாக நடத்திட நமக்கு பாவ சங்கீர்த்தனம்
அருட்சாதனம் நல்ல கருவியாக இருக்கிறது, அது நம் பாவங்களை கழுவி, தெய்வீக அருள்
நமக்கு கிடைக்க செய்து, கிறிஸ்துவின் நீதீயை நமதாக்கி கொள்வோம்.
© 2016 by Terry A. Modica
No comments:
Post a Comment