அக்டோபர் 2 , 2016 ஞாயிறு நற்செய்தி
ஆண்டின் 27ம் ஞாயிறு
Habakkuk
1: 2-3; 2: 2-4
Psalm 95:1-2,6-9
2 Timothy 1:6-8, 13-14
Luke 17:5-10
லூக்கா நற்செய்தி
5திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள்.
6அதற்கு ஆண்டவர் கூறியது:
“கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
7“உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா?
8மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வாரல்லவா?
9தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?
10அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”
(THANKS to www.arulvakku.com)
இயற்கையை கடந்த
விசுவாசம்
இன்றைய ஞாயிறின்
நற்செய்தி நமக்கு குழப்பத்தை கொடுக்கிறது. அதிகமான கடின பணிகளை இறைவனின்
மகிமைக்காக செய்து விட்டு, கடவுளிடமிருந்து நாம் கேட்க விரும்புவது, "நீ பலன்
எதிர்பார்க்காத என் பணியாள் " என்ற வார்த்தை தான்.
உங்கள் கடினமான
பணிகளை நினைவில் கொண்டு வாருங்கள், அது வீட்டில் இருந்தாலும், வேலை இடத்தில் இருந்தாலும்,
அல்லது இறை பணியில் இருந்தாலும், நமக்கு சரியான வெகுமதி கிடைப்பதில்லை ?
அப்படிதானே? அதற்கு பதிலாக, நமக்கு இன்னும் பல வேலைகள் கொடுக்கபடுகின்றன!. நமது வீட்டில், கடின உழைப்பை ஒரு நாள் முழுதும்
செய்து விட்டு , கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று நாம் நினைக்கும் போது, நமது
குழந்தைகளோ அல்லது வீட்டில் பெரியவரோ , நம்மிடத்திலிருந்து ஒரு உதவியை கேட்டு
வரலாம். வேலை இடத்திலோ, நம்முடன் வேலை செய்பவர்கள் சோம்பலாக இருப்பதாலும், அல்லது வேலையாட்கள்
குறைவாலும், நமக்கு அதிக வேலை கொடுக்கபடுகின்றன. பங்கு கோவிலில், உள்ள எல்லா வேலைகளையும்,
1௦% முதல் 20%
மக்கள் தான் செய்கின்றனர்.
மேலும் இயேசு
" நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’" என்று நாம் சொல்லவேண்டும் என்று விரும்புகிறார். நாம்
களைத்து போய் இருக்கும்போது, இன்னும் மேலும் பல வேலைகள் செய்ய வேண்டும் என இயேசு
சொல்கிறாரா? அப்படி கிடையாது !, நமக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டதோ அதை மட்டும்
செய்யாமல், மற்றவர்கள் மேல் நம் அன்பும் அக்கறையும் காட்டுவதற்கு , இன்னும் பல
வேலைகள் செய்ய வேண்டும் என ஆசைபடுகிறார்.
ஒய்வு எடுப்பது
என்பது மிக முக்கியமான ஒன்று. இயேசு ஜெபம் செய்ய நேரம் எடுத்து கொண்டு , அவர்
ஆற்றலை புதுபித்து கொண்டார். மற்றவர்களுக்கு வேலை கொடுப்பது சரியான விசயம் தான்,
அதன் முலம் நம் பளு கொஞ்சம் குறையும். இயேசு தான் அவர் வேலையை
பகிர்ந்தளிப்பதிலும், அவரே வேலையாளாக இருப்பதிலும், நமக்கு எடுத்து காட்டாய்
இருக்கிறார். சரிசமாக நம் வேலையும் , ஓய்வும் நம் வாழ்விற்கு முக்கியமானது.
இன்னும் கொஞ்சம்
அதிகம் நம்மை அர்ப்பணித்து வேலை செய்யாத பொழுது, நமது விசுவாசத்தில் நாம் உறுதியாக
இல்லை என்று அர்த்தம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், கிறிஸ்துவுக்காக
செய்கிறோம், மற்றவர்களுக்காக நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் கிறிஸ்துவுக்காக
செய்கிறோம் என்றும், நாம் அறியாமல் இருக்கும் போது நாம் சராசரி மனிதர்களாக
இருக்கிறோம். முழு மனதுடன் எதுவும் செய்வதில்லை. நம்மால் சாத்தியமாக கூடிய
செயல்கள் கூட செய்வதில்லை நாம் குறைத்து கொள்கிறோம். மேலும் , இயேசு சொல்கிறார்,
நாம் மரத்தை பார்த்து கடலில் விழு என்றாலும் விழும் , நீங்களே ஆச்சரியபடுவிர்கள்
என்றும் சொல்கிறார். எப்பொழுது அது மாதிரி ஒரு நிகழ்வு உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது நிகழ்ந்தது ?
இயற்கையை தாண்டிய விசுவாசத்துடன் இருப்பதற்கும், இன்னும் அதிக இறைபணி மக்கள்
பணி செய்வதற்கும் உள்ள தொடர்பை நாம் இங்கே பார்ப்போம்:
மேலே கூறிய இரண்டும் நடக்க, கடவுளின் அன்பு முழுமையானது, மேலும்
நிபந்தனையற்றது என்றும், எப்பொழும் நமக்காக அவர் காத்திருக்கிறார் என்றும் நாம்
புரிந்து நடத்தல் வேண்டும். அதன் , நாம் நம்பிக்கையுடன், அவர் நம் மூலம் என்ன
செய்ய சொல்கிறாரோ, அதனை நம்மால் செய்ய முடியும். கடவுள் நம் மேல் கொண்ட அக்கறை
போல, நாமும் அக்கறை கொண்டால், நாம் இன்னும் பல படி தாண்டி அவரோடு செல்வோம். அதன்
பிறகு , நாம் அயற்சி அடைந்தாலும், அல்லது பழி சொல்லிற்கு ஆளானால் கூட , இயேசு
நம்மை புதுபிபார். உற்சாகத்தை கொடுப்பார். இதனை நீங்கள் நம்புகிறீர்களா?
© 2016 by Terry A. Modica
No comments:
Post a Comment