அக்டோபர் 30 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 31ம் ஞாயிறு
Wisdom 11:22--12:2
Psalm 145:1-2,8-11,13,14
2 Thessalonians 1:11--2:2
Luke 19:1-10
Psalm 145:1-2,8-11,13,14
2 Thessalonians 1:11--2:2
Luke 19:1-10
லூக்கா நற்செய்தி
இயேசுவும் சக்கேயுவும்
1இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.
2அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.
3இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.
4அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.
5இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம்,
“சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்”
என்றார்.
6அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.
7இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தனர்.
8சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார்.
9இயேசு அவரை நோக்கி,
“இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!
10
இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்”
என்று சொன்னார்.
(thanks to www.arulvakku.com)
கடவுளை காண்பதை,
எதுவும் நிறுத்தி விட கூடாது!
சக்கேயுவின் மன
உறுதியை இன்றைய நற்செய்தியில் பாருங்கள். இயேசுவை அவரால் பார்க்க இயலவில்லை, ஆனால்,
இயேசுவை பார்க்க,அது ஒன்றும் நிறுத்தி விட வில்லை. அங்கிருந்த கூட்டம் சக்கேயு
இயேசுவை பார்க்க வழி விடவில்லை, மேலும் அவர் குள்ளமாக இருந்தார். ஆனால், சக்கேயு
அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், யேசுவை முழுவதுமாக பார்க்க ஒரு வழி தேடி, இயேசுவை
முழுமாக கண்டு களித்தார்.
சக்கேயு இயேசுவை
முழுதும் கண்டு கழிக்க அதிகம் ஆசைப்பட்டு , மிக கடுமையான ஆபத்தான(மரம் மீது ஏறி)
முயற்சியை மேற்கொண்டார். மர கிளையின் மேல் தொங்கி கொண்டு நிற்பதற்கு , அவர்
வெட்கப்பட்டு கொண்டு கூட இருந்திருக்கலாம். மரத்தின் மேல் அவரை பார்த்தவர்கள், அவரை
விமர்சனம் கூட செய்திருக்கலாம், சிலர் அவரை கீழே இறங்க கூட சொல்லியிருக்கலாம்.
அந்த மரத்தினால் அவருக்கு சிராய்ப்புகள் , காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இவை
எல்லாம் அவர் இயேசுவை பார்ப்பதை தடுத்து விட வில்லை.
நமக்குள்ளும் பல
குறைகள் உள்ளன - பாரபட்சங்கள் காட்டுவது, தவறான கருத்துகள் கொள்வது, தவறான
பயிற்சிகள், தெய்வீக விசயங்களில் சோம்பேறி தனம், பயம் மற்றும் சந்தேகம், இன்னு பல
- இவையெல்லாம் நாம் இயேசுவை காண்பதை தடுக்கின்றன. மேலும் நாமெல்லாம் குறைவான
அந்தஸ்து உடையவர்கள்: கடவுளை விட மிகவும் குறைவானவர்கள், மேலும், அவரின் நல்ல , மேலான
உயர்ந்த குணாதிசயங்களை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. நம் சிறிய அறிவின் மூலம் ,
இயேசு நம்மை கண்டு கொள்வதில்லை என்கிற ஒரு முடிவிற்கு வந்து விடுகிறோம். அதனால்,
நாம் தனியாக நிற்பதாக உணர்கிறோம்.
மாறாக, நாம் சக்கேயுவை
போல மாற வேண்டும். இயேசுவை முழுதும் காண ஆசைபடும் நாம், அவரை முழுமையாக, அவரின்
உண்மையான தெய்விகத்தை பார்க்க , நாம் எல்லா வழிகளிலும் முயற்சி செய்தல் வேண்டும்,
அதன் மூலம் நமது குறைகளை நாம் தாண்டி வர முடியும்
சக்கேயு மரத்தில்
ஏறியவுடன், இயேசு அவரை தனியாக கண்டு கொண்டு, அவருக்கு சிறப்பான கவனத்தை
காட்டினார். அதற்கு சக்கேயு எவ்வாறு எதிர்வினை செய்தார். உடனே மரத்திலிருந்து கிழே
வந்து, மிகவும் சந்தோசத்துடன் இயேசுவை வரவேற்றார். அதே உற்சாகத்துடன் , அவர்
பாவங்களுக்காக பல மடங்காக அவர் சொத்தை திருப்பி தர முன் வந்தார்.
நீங்கள் திருப்பலியில்,
இயேசுவை திவ்ய நற்கருணையில் பார்க்கிறீர்களா? , கிறிஸ்துவின் பிரசன்னத்துக்கு சக்கேயு
எவ்வாறு நடந்து கொண்டாரோ, நாமும் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால், நம் கண்னை
எதையோ மறைக்கிறது. நாமும் , அதனை தாண்டி மேல் ஏறி சொல்ல வேண்டும்.
© 2016 by Terry A. Modica
No comments:
Post a Comment