Saturday, December 9, 2017

டிசம்பர் 10 2017 ஞாயிறு நற்செய்தி

டிசம்பர்  10 2017  ஞாயிறு நற்செய்தி
திருவருகை கால  2ம் ஞாயிறு
Isaiah 40:1-5, 9-11
Ps 85:9-14
2 Peter 3:8-14
Mark 1:1-8



திருமுழுக்கு யோவானின் உரை
(மத் 3:1-12; லூக் 3:1-9, 15-17; யோவா 1:19-28)
1கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்:
2-3இதோ, என் தூதனை உமக்குமுன்
அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை
ஆயத்தம் செய்வார்.
பாலை நிலத்தில் குரல் ஒன்று
முழங்குகிறது; ஆண்டவருக்காக
வழியை ஆயத்தமாக்குங்கள்;
அவருக்காகப் பாதையைச்
செம்மையாக்குங்கள்
என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
4இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.

5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.

6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.

7அவர் தொடர்ந்து, “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.

8நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்எனப் பறைசாற்றினார்.
(thanks to www.arulvakku.com)
பலன்களுடன் கூடிய எதிர்காலம் உங்களுக்கு உரியது

இன்றைய நற்செய்தி வாசகங்கள் "ஆண்டவருக்காக ஆயத்தமாகுங்கள்" என்று சொல்கிறது -- அவர் எதனை கொடுக்க விரும்பினாலும், நமக்காக எதனை செய்ய விரும்பினாலும், நம்மிடம் எது கேட்க விரும்பினாலும்  அதற்காக தயாராகுங்கள் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. நமது வாழ்விற்கான திட்டம் அவரிடம் இருக்கிறது.  இறைபனிக்கான நோக்கமும் அதில் இருக்கிறது. நம்மை தந்தை கடவுளின் குழந்தைகளாக அவரது கொடைகளை பெற்று, இந்த உலகின் மீட்பர் கிறிஸ்துவோடு இணைந்து நாமும் இறைபணி தொடர ஆயத்தமாகுவோம்.

நாம் கிறிஸ்துவோடு இணைந்தால் தான் , அவரோட நேர் வழியில் சென்று நாம் பரிசுத்த வழியில் நம்மால் இறைபணி முழுமையாக செய்ய முடியும்

நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்பதை எப்படி தெரிந்து கொள்வது? நம் பயணத்தின் பலன்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் . பரிசுத்த வழி எப்போதுமே நல்ல பலன்களை கொடுக்கும்.

எசாயா சொல்கிறார்: 3குரலொளி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.4பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.5ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்

திருவருகைகாலத்தில் நாம் கிறிஸ்துமஸ் தயாரிப்பில் ஈடுபடுகிறோம் . -- கடவுளை புது கடவுளாக பார்க்க இருக்கிறோம் -- இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்து நம் பாவங்களை நினைத்து வருந்தி மனம் திருந்தி, இயேசுவை பின் சென்று, அவரது பரிசுத்த பாதையில் இணைந்து . இந்த சந்தர்ப்பத்த்தை விட்டு விட்டால்,  கிறிஸ்துமசின் முழு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.  நமது கடினமான காலங்களில் கூட , உறுதியான விசுவாசத்துடன் நாம் எதிர்கொள்ள முடியும்.

ஆண்டவரின் வழியை ஆயத்தமாக்குங்கள்! உங்களுக்கு கொடுக்க இன்னும் அதிக அன்பு இருக்கிறது, விரைவாக குணமாக்க இருக்கிறார். இன்னும் அதிக சந்தோசம் நமக்கு கிடைக்கும்!  வீனான பாவ நிலத்தை விட்டு , கடவுளின் விரைவு சாலைக்கு வாருங்கள். பாவ சங்கீர்த்தனம் செய்து , இயேசு உங்களிடம் வர பெரிய பாதையை உண்டாக்குங்கள். அந்த பாதை மூலம் இயேசு விரைவில் வர, மாட்சியுடன் வருவார்.

எல்லா மனிதர்களும் , காய்ந்து போன புல் போன்றவர்கள், மேலும் நமது மாட்சி , காய்ந்து போன பூ போன்று மாறிவிடும். ஆனால், கடவுளின் மாட்சி மட்டும் தான் என்றும் நிறைந்து இருக்கும்.

இந்த திருவருகை காலத்தில் உங்களின் துன்பங்கள் போராட்டம் என்ன ? அதற்கு உத இயேசு தயாராய் இருக்கிறார். ஆனால், நிங்களோ அதன் மூலம் பாவத்தில் விழ தயாராய் இருக்கிறீர்கள் ?

உங்கள் வாழ்வில் எது நல்லதாக நடந்து  கொண்டி இருக்கிறது? எந்த செயல்கள் நீங்கள் எதிர்பார்க்கும் பலனுடன் நடந்து கொண்டிருக்கிறது ?  அவைகள்  மிளிரும் பச்சை புல் போல சில காலங்களில் காய்ந்து போய் விடுகிறதா? இன்னும் 100 வருடங்களுக்கு அதன் பலன் எல்லோருக்கும் பயன்படுமா ?

கடவுள் உங்களுக்கு திறமையை கொடுத்து இறைபணி ஆற்ற அழைக்கின்றார். ஒவ்வொருவருக்கு ஒரு தனிப்பட்ட குறிப்பிட்ட பணியை செய்ய அழைக்கின்றார்.  அந்த பணிக்கு கடவுள் கொடுத்த திறமை தேவை படுகிறது. அதனை செய்ய உங்களால் மட்டுமே முடியும். விசுவாசமிக்க வாழ்வு வாழ்ந்து நித்திய வாழ்வில் ஒரு வித்தியாசத்தை உருவாக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அதன் மூலம் இந்த உலகம் வாழ்வு வாழ்வதற்கான நல்ல உலகமாக இருக்க முடியும்.

இயேசு நம்மிடம் நேரடியாக வர ஆசைபடுகிறார். அதன் மூலம், நாம் இறையரசிற்கு பலன்களை கொண்டு வர விரும்புகிறார்.
ஆண்டவரின் பாதியை ஆயத்தபடுத்துங்கள். உங்கள் மூலம் வித்தியாசம் கொண்டு வர ஆசைபடுகிறார்.


© 2017 by Terry A. Modica

No comments: