Saturday, December 2, 2017

டிசம்பர் 3 2017 ஞாயிறு நற்செய்தி

டிசம்பர்  3 2017 ஞாயிறு நற்செய்தி
திருவருகை கால முதல் ஞாயிறு

Isaiah 63:16b-17, 19b; 64:2-7
Ps 80:2-3, 15-16, 18-19 (with 4)
1 Cor 1:3-9
Mark 13:33-37

மாற்கு   நற்செய்தி
33கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது.

34நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார்.

35அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.

36அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது.

37நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள்.
(thanks to www.arulvakku.com)

இயேசுவிற்கு அன்பளிப்பு

இன்று நாம் திருவருகை காலத்தை தொடங்குகிறோம். நாம் கிறிஸ்துமஸ்க்கு தயாராகும் பொழுது , நாம் எப்படி முக்கியமானவர்களுக்கு எந்த அன்பளிப்பை கொடுக்கலாம் என்று யோசித்து கொண்டு அவர்களுக்கு நம் பாசத்தை, காட்டலாம், அவர்களின் பாராட்டை பெறலாம் என நாம் இருக்கிறோம். ஆனால் அந்த அன்பளிப்பு எவ்வளவு நாள் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது? அதனால் அவர்களின் வாழ்க்கையில் என்ன வித்தியாசம் கொடுக்கும் ?


நீங்கள் முன்னே கொடுத்த எத்தனை அன்பளிப்புகள் இன்னும் தூசி தட்டும்போது ஒதுக்கி வைக்கப்படும் இடத்தில் இருக்கிறது?  எந்த மாதிரியான  அன்பளிப்பு , அவர்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்ததாக  இருக்கிறது ?

கிறிஸ்துமஸ் அன்று இயேசுவின் பிறந்த நாளை கொண்டாட்டமாக கொண்டாடுகிறோம் , கிறிஸ்துவுக்கு  அன்பளிப்பு கொடுக்க நாம் நினைவில் கொள்ளவேண்டும். அந்த அன்பளிப்பு நிரந்தரத்திற்கும் பயன்படும்படியாக இருக்க வேண்டும்.  மற்ற எல்லாரையும் விட கடவுளுக்கு தான் நிறைய அன்பளிப்புகள் கிடைக்கவேண்டும். எல்லாவற்றையும் வைத்து கொண்டு இருப்பவருக்கு எந்த அன்பளிப்பை கொடுக்கலாம் ?

அல்லது அவருக்கு எல்லாம் இருக்கிறதா ?

நித்தியத்திற்கும் பயனுள்ளதான எந்த அன்பளிப்பை கொடுப்பீர்கள்? அதே அன்பளிப்பு  வேறு யாரும் கொடுத்திருக்க கூடாது. அல்லது ஏற்கனவே அவரிடம் அந்த அன்பளிப்பு இருக்க கூடாது ? அதற்கான பதில்: கடவுளிடமிருந்து வரும் எதனை நீங்கள் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் ? என்ன திறமை, ஆற்றல், இறைபணி  மேலும், உங்கள் வாழ்வின் மாற்றம் எதனை நீங்கள் கொண்டு வரலாம் ?

இன்றைய முதல் வாசகம், கடவுள் தான் நம் தந்தை என்று நினைவுபடுத்துகிறது. பதிலுரை பாடல் தந்தை கடவுளை நோக்கி நாம் திரும்பவேண்டும் என கேட்கிறது. இரண்டாவது வாசகமோ கடவுள் நமக்கு செய்த அனைத்திற்கும் நன்று கூறுகிறது. அதனால், கடவுளுக்கு , நம் பாராட்டை தெரிவிக்க நாம் என்ன கொடுக்க இருக்கிறோம்.

இன்றைய நற்செய்தியில், நாம் தயாராக வேண்டும் , விழிப்பாயிருக்க வேண்டும் என்று சொல்லுகிறது -- நாம் இறைபணி செய்து கிறிஸ்துவின் வருகைக்காக தயாராய் இருக்க வேண்டும். இது இரண்டாவது வருகை பற்றி மட்டும் அல்ல , நமது கடைசி மூச்சு நேரத்திலும் கிறிஸ்து வருவார். அதே போல இந்த வருட கிறிஸ்துமஸ் அன்றும் உங்களிடம் வர ஆசைபடுகிறார். மேலும், இன்றும் வருவார்.

கிறிஸ்து உங்களிடம் ஒன்றை கொடுக்க விரும்புகிறார். அவர் கொடுக்கிரபோழுது, அதனை சரியாக நீங்கள் பயன் படுத்து கிறீர்களா?  (முதல் வாசகத்தில் கூறியுள்ளது போல),  உங்கள தெய்வீக கொடைகளை நீங்கள் சரியாக உபயோகிக்கிறீர்களா?  நற்செய்தியில் கூறியுள்ளது போல, நீங்கள் விழிப்பாயிருப்பதாய் பார்க்க முடியுமா   ?

திருவருகை காலம், நமக்கு கிறிஸ்து கொடுத்த அன்பளிப்புகளை, திறமைகளை நாம் உணர்ந்து, அவருக்கு நாம் அதன் மூலம் எப்படி திருப்பி கொடுக்கிறோம். இந்த காலத்தில் நாம் இதனை உணர்ந்து ,ஆராய வேண்டிய காலம். இது தான் நித்திய வாழ்வில் நாம் செலுத்தும் நன்றியாகும்.

© 2017 by Terry A. Modica


No comments: