டிசம்பர் 17 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 3ம்
ஞாயிறு
Isaiah
61:1-2a, 10-11
Luke
1:46-50, 53-54 (with Isaiah 61:10b)
1
Thes 5:16-24
John
1:6-8, 19-28
யோவான் நற்செய்தி
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்;
அவர் பெயர் யோவான்.✠
7அவர் சான்று பகருமாறு வந்தார்.
அனைவரும் தம் வழியாக நம்புமாறு
அவர் ஒளியைக்குறித்துச்
சான்று பகர்ந்தார்.
8அவர் அந்த ஒளி அல்ல;
மாறாக, ஒளியைக் குறித்துச்
சான்று பகர வந்தவர்.
திருமுழுக்கு
யோவான் சான்று பகர்தல்
(மத் 3:1-12; மாற் 1:7-8; லூக் 3:15-17)
(மத் 3:1-12; மாற் 1:7-8; லூக் 3:15-17)
19எருசலேமிலுள்ள
யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர்
யார்?” என்று
கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று
அறிவித்தார்.
20இதை
அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.
21அப்போது, “அப்படியானால்
நீர் யார்? நீர் எலியாவா?” என்று
அவர்கள் கேட்க, அவர்,
“நானல்ல” என்றார்
“நீர்
தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?”
என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று
மறுமொழி கூறினார்.✠
22அவர்கள்
அவரிடம், “நீர்
யார்? எங்களை
அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே
உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?”
என்று கேட்டார்கள்.
23அதற்கு
அவர்,
“‘ஆண்டவருக்காக வழியைச்
செம்மையாக்குங்கள்
எனப்
பாலைநிலத்தில் குரல்
ஒன்று
கேட்கிறது’
என்று
இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே” என்றார்.✠
24பரிசேயரால்
அனுப்பப்பட்ட அவர்கள்
25அவரிடம், “நீர்
மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக்
கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
26யோவான்
அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள்
அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;
27அவர்
எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார்.
28இவை
யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான்
யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இன்றைய ஞாயிறின்
நற்செய்தி , ஞானஸ்நான யோவான் "ஒளியை குறித்து சான்று பகர "
வந்தார் என்று கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன ?
(thanks
to www.arulvakku.com)
ஒளியின் சான்று
இயேசு உண்மையின்
ஒளியாக இருந்து, இருளில் வெளிசத்தை கொடுத்து நம்மை நித்திய வாழ்விற்கு அழைத்து
செல்பவர் என்று நமக்கு தெரியும். மேலும்,
அவரது ஆவி, நமக்கு உண்மையை எடுத்துரைத்து , நமது பாவங்களின் அழிவிலிருந்து
நம்மை காப்பவர் என்றும் நமக்கு தெரியும்.
ஆனால் யோவானின் சான்று என்ன? அவர் எப்படி ஒளிக்கு சான்று பகர்ந்தார். மேலும் எப்படி
நம் வாழ்வில் அவரின் சான்று உதவியது ?
யோவானின் சான்றோ :
"நான் கிறிஸ்து அல்ல , நான் குரல். இந்த காட்டில் உள்ள குரல். பாலைவனத்தில் ஒலிக்கும்
குரல் " என்று கூறியது. யோவானின்
சான்று , கிறிஸ்துவின் ஒளியை நம்மிடம் கொண்டு வந்து நம்மிடம் ஒரு சவால்
விடுகிறது. "உங்கள் வாழ்க்கையில் எந்த
கஷ்டம் உங்களை வாட்டுகிறது ? நன்றாக கேளுங்கள்! கிறிஸ்து உங்களை சந்திக்க வருகிறார்! அவருக்கு வழியை உண்டாக்குங்கள்! மற்ற வேலைகளை விட்டு விட்டு ! மனம் திருந்தி ,
மாற்றத்தை கொண்டு , இயேசுவை பார்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யுங்கள். அதன்
மூலம் இயேசுவை பாருங்கள். உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்!
நாமெல்லாம் பல நேரங்களில்
இயேசு நம்மை விட்டு தூராமாய் இருப்பத் போல தெரியும், நம் தேவை அறிந்து அவர்
அருகில் இல்லாது போன்று தோன்றும். அவர்
அருகில் இருப்பதை உணர உங்கள் கண்கள் எப்படி எவ்வாறு திறந்தது ? எந்த குரலால் நீங்கள் கடவுளை நோக்கி
திரும்புனிர்கள் ? அதே போல நீங்கள் செய்து
பலரை கடவுள் பக்கம் திரும்ப வைக்க
வேண்டும். இசையா முதல் வாசகத்தில் கூறுவது
போல " ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு
விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் " நாம் அவர்களிடம் கொண்டு செல்ல
வேண்டும் . அதன் மூலம் கடவுளின் நட்பை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
யோவானுக்கு என்ன
அழைத்தல் உள்ளதோ அதே அழைத்தல் தான் நமக்கும் உள்ளது அதே சான்றை நாமும் உலகிற்கு
எடுத்து சொல்ல வேண்டும்.: இந்த உலகம்
அனைத்தும் கேட்கும் வரை நம் குரலை உயர்த்தி நாம் சான்று பகிர வேண்டும்.
குழப்பத்திலும், நம்பிக்கையற்றும், வழியிலும், தலைவேதனையிலும், விசுவாசமின்றி ,
பாவத்திலும் பல ஆன்மாக்கள் இருக்கின்றன. நாம் அவர்களின் தேவையை நிராகரிக்கலாமா
? நாம் அமைதியாக இருப்பது அன்பான காரியமா?
அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளாமல் இருக்க நாம் விடலாமா ? கண்டிப்பாக இல்லை.! ஒரு
நாள் இயேசுவிற்கு நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் , நம் திருமுழுக்கு அழைத்தலை
நாம் ஏன் செய்ய வில்லை என நாம் இயேசுவிடம் பத்தி சொல்ல வேண்டும். நாம் அந்த
அழித்தலை ஏற்று பலர் இயேசுவை கண்டு கொள்ள உதவிட முடியும்.
என்ன மாதிரியான
குரல் உங்களுக்கு இருக்கிறது? ஏனெனில் கிறிஸ்து நம்முள் இருக்கிறார், நமது வாழ்வே
மற்றவர்களுக்கு படிப்பினையாக இருக்கும். அதுவே நம் குரல் , நம் சோதனைகளில், நாம்
எப்போதும் இயேசுவின் மேல் விசுவாசம் கொண்டு நாம் எப்படி கையாள்கிறோம் என்பதே
துன்பத்தில் இருபவர்களுக்கு அவரின் குரலாக இருக்கிறோம். எவ்வளவு அதிகம் நாம் அமைதியுடன்
, அதிக அன்பையும் அவர்களுக்கு கொடுக்கிறோமோ , நம் குரல் மிக பெரிது.
நமது குரல் வளை ஒரு
வார்த்தை கூட பேச முடியாமல் இருந்தால் கூட
, நாம் எப்படி வாழ்கிறோமோ அதுவே ஒளியின் உண்மையை இந்த உலகிற்கு எடுத்துரைக்கும்.
எவ்வளவு உண்மையாக நாம் வாழ்கிறோமோ அதே அளவிற்கு உண்மை நம் மூலம் இந்த உலகிற்கு
செல்லும்.
நமது செய்தியை
கொண்டு என்ன செய்ய வேண்டும் அவர்களின்
விருப்பம். ஆனால், நாம் செய்ய வேண்டியதை சொல்ல வேண்டியது சொல்லி அவர்களுக்கு ஒரு
வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
© 2017 by Terry A. Modica
No comments:
Post a Comment