http://www.gnm.org/
குருத்து ஞாயிறுடன் இந்த மிக பெரிய புனித வாரம் தொடங்குகிறது. இந்த தொடக்கம், உஙகளயும், யேசு கிறிஸ்துவையும், அவரின் அளப்பிடற்கரிய அன்பையும் இணைகும் அனுபவமாக இருக்குமா? இன்றைய நற்செய்தியில் மிக முக்கிய சொற்றொடர் வரும், அது என்னவென்றால், "இது ஆண்டவருக்கு தேவை" (லூக்: 19:31), இச்சொற்றொடரே ஆண்டவரோடு இணையும் உன்னத அனுபவத்தை பறை சாற்றும்.
யேசு கழுதை சவாரி செய்ய அதனை எப்படி கொண்டுவந்தார்? என்று நற்செய்தி ஆசிரியர் ஏன் எழுதினார் என்ன நினைகிறீர்கள்? நாம் ஒவ்வொருவரும், நம்முடன் ஒரு 'கழுதையை' நம் வாழ்க்கையில் ஏதொ ஒரு விதத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இது நம்மோடு இருக்கும் எதுவேனாலும் இருக்கலாம்.ஆனால் அது யேசுவோடு பகிர்ந்து கொள்ளபடாதது. இந்த 'கழுதை குட்டி', நம்முடைய சொத்து, பணம், திறமை, ஆற்றல், புதியன கண்டுபிடித்தல், நமது நேரம், இன்னும் பல. இதுவெல்லாம் ஆண்டவருக்கு தேவையாயிருக்கிறது!. ஆனால், நாம் இந்த எல்லாவிதமான நமது சொந்தஙகளை, திறமைகளை, நாம் நமது சொந்த பயனுக்காக உபயோகப்படுத்துகிறோம். இவையெலலாம், கிறிஸ்துவிற்கு அவரை பெருமைபடுத்தவும், போற்றவும், அன்பளிப்பாக ஆக்கமுடியும்.
குருத்து ஞாயிறு நமக்கு தரும் போதணை: நாம் கிறிஸ்துவை போற்றவேண்டும், அவரை பெருமைபடுத்தவேண்டும், அவருடைய அளப்பிற்கரிய அன்பிற்காக, அதனை அவர் சிலுவையில் காட்டுகிறார். வேறு யார், உனக்காக இறப்பார்? அவ்வளவு வேதனையிலும் மற்றும் வலியிலும். யேசு அவரின் உடலையும், இரத்தத்தையும் தியாகம் செய்து, நம் பாவங்களுக்கு நமக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை அவர் ஏற்றுகொண்டார். நாம் இதற்காக, ஒவ்வொரு ஞாயிறும், இறைவனுக்கு ஓசான சொல்லி அவரை மகிமைபடுத்தி சந்தோசப்படுவோம். திவ்ய நற்கருணையில் அவரோட இணைந்து, அவரின் அன்போடு நாமும் நமது அன்பை வெளிபடுத்துவோம். இத்திவ்ய நற்கருணையில், நாம் ஏன், காதலர்கள் அவர்கள் துணையோடு இனைவது போல், நாம் நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதில்லை? ஏனெனில், நமது 'சுயம் (அ) கழுதை' இன்னும் நம்மோடு கட்டப்பட்டிருக்கிறது.
நம்முடைய 'திறமைகளை , ஆற்றல்களை', இறைவனோடு பகிர்ந்துகொள்ள வேண்டும், கடவுளரசின் திட்டத்தில் ஈடுபடவேண்டும் என கேட்டு அவர்களுடைய சீடர்களை அனுப்பிகிறார்.
இன்றைய சிந்தனைக்கு :
உன் வாழ்க்கையில், உன்னிடம் உள்ள 'திறமைகள், ஆற்றல்கள்' அனைத்தும் பட்டியலிடு. அதில் எந்த ஆற்றலை நல்ல உபயோகத்திற்கு ஈடுபட யேசு அழைக்கிறார். எந்த மாதிரியான கெட்ட எண்ணங்கள், தீய உபயோகங்கள் யேசு குணப்படுத்த வேண்டும், அவர் மன்னிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் இறைவழிபாட்டில், இந்த தீய விசயஙகளை, உங்களோடு கட்டப்பட்டிருக்கும் திறமைகளை அவிழ்த்து இறைவனிடம் கையளியுங்கள். யேசு எவ்வளவு சந்தோசப்படுவார் என்று பாருஙகள்.
மற்றுமோர் சிந்தனை:
ஏதாவது ஒரு 'திறமையை', யேசுவுக்கு தேவயானது எது என்று தேர்வு செய். அதனை யேசுவிடம் சமர்ப்பித்து, அதன் மூலம் அவரின் பெரிய வெள்ளியை முழுமையாக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment