(www.gnm.org)
உண்மையான விசுவாசதிற்கு அடியெடுத்து வைப்போம்
யேசுவை ஏன் விசுவசிக்கிறீர்கள்? "அவர்கள் பெறும் நல்ல கணிகளை கொண்டே அதனை அறிவார்கள்" (மத்தேயு: 7:16௨0), என ஏசு தன்னுடய பழைய அருளுரையில் சொல்கிறார். "என் செயல்களை கொண்டே, நல்ல கணி தரும் அடையாளங்களால், என்னை அறிவாய்" (இன்றைய நற்செய்தியில்). மக்கள் நல்ல கணிகள் கொடுக்காத விசயத்தில், நம்பிக்கை வைக்க மாட்டார்கள். அல்லது வேறு மாதிரி சொல்வோமானால், மதிப்பில்லாத பொருட்களில் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். உங்களை சுற்றி பாருங்கள், கோவிலுக்கு செல்லாதவர்கள், யேசுவிடம் நம்பிக்கை வைக்காதவர்கள் யாரெனில், உன்மையான விசுவாச வாழ்வின் மதிப்பை அறியாதவர்கள்.
எம்மாதிர்யான முக்கியத்துவத்தை அல்லது எவ்வளவு மதிப்பை யேசுவில் நீ காண்கிறாய்? அதிக மக்கள் கத்தோலிக்கராக இருக்கிறார்கள்,ஏனென்றால் அவர்கள் பெற்றோர் கத்தோலிக்கராக இருந்தார்கள். கொவிலுக்கு செல்பவர்கள் எல்லாம் தான் கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்கிறார்கள், ஆனால் கோவிலுக்கு செல்வது அவர்கள் வாழ்வை, கிறிஸ்துவின் பிரசன்னதோடு மாற்றுவதில்லை, ஏதோ ஒன்று விடுபடுகிறது. அது என்னவெனில், நற்கருணை பெறுவது யேசுவின் உடலோடு நாம் இணைகிறோம் என்பதனை இன்னும் அவர்கள் அறியவில்லை. ஏன் கோவிலுக்கு செல்கிறார்கள் என்றால், போகவிடில் நரகத்திற்கு என்ற பயம்.
நாம் பலமுறை, நம்முடைய யேசுவின் மேல் உள்ள நம்பிக்கை மற்றும் யேசுவை போலவே மாற நாம் ஆசைபடுவதயும் வெளிக்காட்டவேண்டிய சோதனைக்குள்ளாகபடுகிறோம். நாம் நமது விசுவாசத்தால் இம்சைப்படும்போதோ அல்லது கடவுள் நம்மை கைவிடுவது போல தோன்றும் போதும் நமக்கு இது மாதரியான சோதனைகள் வருகிறது. நமக்கு கஷ்டமான காலங்களிலும், கடவுள் அர்த்தமற்றவராக அல்லது உபயோகமில்லாமல் தெரியும் போது, இன்னும் ஏன் கிற்ஸ்துவோடு நாம் உறவு கொண்டிருக்கவேண்டும்? மேலும் கோவிலை சார்ந்தவர்கள் தவறான் வழியில் ஈடுபடும்போது, நாம் ஏன் கத்தோலிக்க விசுவாசத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இதற்கு உங்களது பதில் தான், உங்கள் விசுவாசத்தின் மதிப்பையும் , ஆழத்தையும் அறியும் கருவியாகும். இது தான் உங்கள் சாட்சியம். இதன் மூலமாக தான், நம்பிக்கை இல்லாதவர்கள் கிறிஸ்து தான் உண்மையான கடவுள் மற்றும் அன்பின் கடவுள் என்று அறிந்துகொள்ள முடியும்.
நாம் ஏன் யேசுவை ஏன் பின்பற்றுகிறோம் என்று நம்மையே சோதித்துகொண்டால், நம் விசுவாசம் இன்னும் அதிகரிக்கும். எந்த பயன்கள் உங்கள் அன்பின் வாழ்க்கையின் சாட்சிகளாய் இருக்கிறது.? எம்மாதிரியான கடவுளின் அறிகுறிகளை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்? பல சோதணைக்களுகிடையில், அது உஙகள் விசுவாசத்தைன் நிலைப்பாட்டை குலைக்க முற்படும்போது, உஙளுக்கு யேசுவால் கிடைத்த நற்கணிகளை நினைத்து, கடவுளின் மீது உள்ள நம்பிக்கையை உறுதிபடுத்திகொண்டு மற்றவர்களையும் இறைவனிடம் அழைத்து செல்லுஙகள். இது மாதிரியான ஆண்மீக பயிற்சி ப்ரச்னைகளின் தெளிவற்ற நிலையிலிருந்து யேசுவைபின் பற்றி செல்ல உதவும்.
உம்மோடு உள்ளவர்கள், அருகில் இருப்பவர்கள், அவர்களுக்காக வேண்டிகொள்ள சொல்கிறார்களை?, நீ அவர்களை நன்றாக கவனிப்பதால் உன்னை தேடுகிறார்களா? நீ அவர்களை பார்க்க செல்லும் போது அவர்கள் சந்தோசமடைகிறார்களா? உன்ன்டைய அறிவுரையை கேகிறார்களா? ஏன் உன் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள், ஏனெனில், அவர்கள் நீஙகள் உங்கள் விசுவாசத்தின் மூலம், நீங்கள் பெறும் நற்கணிகளை அவர்கள் பார்க்கிறார்கள். உஙகள் ப்ரச்னையை உஙள் விசுவாசத்தின் மூலம் நல்ல முறையில் கையாள்வதை கவணிக்கிறார்கள் . இது அவர்களை கேள்வி கேக்க வைக்கிறது, "அவர்களும் நீஙகள் பெற்றுள்ள பேரமைதியை பெற முடியுமா?. அவர்களுடய தேவை அவர்களின் பெருமையை விட பெரிதானது எனில், உஙகளுடைய ஆண்மீக உதவையை அவர்கள் நாடுவார்கள். அப்படியிருந்தாலும் அவர்கள் உன்மீது வைக்கும் நம்பிக்கை, உன் மீது அல்ல, இறைவன் யேசுவின் மீது வைக்கும் நம்பிக்கை.
உஙளுடைய விசுவாசதில் இன்னும் ஒரு அடி எடுத்து வையுஙகள்:
ஏன் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்திருகிறீர்கள் என்று கொஞ்ச நேரம் அமர்ந்து தியாணம் செய்யுங்கள். அதற்கு மேலும், உங்களுடைய அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வாய்ப்பை தேடுங்கள். உண்மையான விசுவாசி, திருச்சபையின் புத்தகங்களிருந்து அனுபவசாலி ஆக முடியாது. ஆனால், உன்மையான வாழ்க்கை அனுபவத்திலிருந்து, விசுவசிப்பவனே, மற்றவர்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு சேவை செய்பவனாவான்.
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 10
31 அவர்மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். 32 இயேசு அவர்களைப் பார்த்து, ' தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்? ' என்று கேட்டார். 33 யூதர்கள் மறுமொழியாக, ' நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய் ' என்றார்கள். 34 இயேசு அவர்களைப் பார்த்து, ' ″ நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன் ″ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? 35 கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. 36 அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ″ இறை மகன் ″ என்று சொல்லிக் கொண்டதற்காக ' இறைவனைப் பழித்துரைக்கிறாய் ' என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? 37 நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம். 38 ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள் ' என்றார். 39 இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார். 40 யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். 41 பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், ' யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று ' எனப் பேசிக்கொண்டனர். 42 அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
(www.arulvakku.com)
Thursday, March 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment